Wednesday, May 22

முஸ்லிம்களோ இன்னும் அகதி முகாம்களில் - மன்னாரிலோ சிங்கள குடியேற்றம்


மன்னார் மாவட்டத்தில் யுத்ததினால் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக முசலி பிரதேசம் உள்ளது சில மாதகாலமாக முசலி பிரதேச செயலாளனர் பிரிவில் வெளிபிரதேசத்தில் இருந்து 1400 சிங்கள குடும்பங்கள் பிரதேச செயலகத்தில் தங்களின் பெயர்களை பதிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன சில நாட்கஞக்கு முன்பு ஓரு பாராஞமன்ற உறுப்பினர் இவ் விடயம் சம்மந்தமாக ஊடகங்கள்வாய்லாக சில அறிக்கையினை வெளியிட்டார்.
அநூராதபுரம்.விலச்சி மற்றும் நொச்சியாகம போன்ற பிரதேசங்களை பிறப்பிடமாக கொண்டவர் சிங்களவர்கள் ஆகும். யுத்தினால் பாதிக்பட்ட முஸ்லிம்கள் இன்னும் விடுகள் இல்லாமல் ஒலை குடிசைகளிலும் மரநிளல்களில் மற்றும் காணிகள் இல்லாமலும் அவஸ்தை படுகின்றனர் இவ்வாறான வேலையில் வேறு பிரதேசத்தில் உள்ளவர்களை குடியேற்றினால் முசலி முஸ்லிம்களின் நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை எனவே முசலி மண்ணின் மீது பற்றுகொண்டவர்கள் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை ஏடுக்க வேண்டும்

இலங்கையில் பியர் குடிப்போர் தொகை அதிகரிப்பு

beerஇலங்கையில் பியர் அருந்துவோர் தொகை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் இலங்கையில் பியர் நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இங்குள்ள பியர் தயாரிக்கும் பெரிய நிறுவனமான லயன் பியர் நிறுவனம் பியரினைக் கலன்களில் அடைக்கும் தம்பணியினை விரிவு படுத்த ஆரம்பித்திருப்பதாக கூறுகிறது.
கடந்த வருடம் இங்கு நிலவும் பியர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து பெருந்தொகையான கார்ல்ஸ்பர்க் ரக பியர் கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் மேற்படி லயன் நிறுவனத்திற்கு அதன் வருமானத்தில் 17 வீதம் அளவில் இழக்க நேரிட்டு 2012ஆம் வருடம் நிகர இலாபமாக 1.0 பில்லியன் ரூபாவையே ஈட்டிக்கொள்ள முடிந்ததாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
பியர் இறக்குமதிக்காக அரசு நூறுவீதம் வரி அறவிடுவதாலேயே மேலதிக செலவு ஏற்பட்டிருப்பதாகவும் இதனைச் சமாளித்து பாவனையாளர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே தனது உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் லயன் நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கிறது.

முஸ்லிம்களுக்கெதிரான இனவாதத்தின் பின்னணியில் மறைகரம்: ரவூப் ஹக்கீம்

hakeemஅண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக் கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் மறைகர மொன்று இருப்பதாக பலத்த சந்தேகம் நிலவுகிறது. இவ்வாறான சந்தேகம் கொள்ளும் வகையிலான செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தின் தம்பதெனிய பிரதேசத்தின் பென்தெனியாகமவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரவூப் ஹகீம் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம் மிகக்கொடுமையானது - சுமந்திரன் எம். பி

அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தாம் தற்போது வசிக்கும் பிரதேசங்களில் இருந்து கொண்டே வாக்களிப்பதற்கு அரசாங்கம் ஒரு யோசனையை முன் வைத்துள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதரிக்கும்.
இந்நிலையில் தேர்தல் இடாப்பில் பெயர் பதியப்படாதிருந்தாலும் 1983 ஆம் ஆண்டுக்கு முதல் அவர்கள் வடக்கில் வசித்திருந்தால் அவர்கள் வாக்களிக்க முடியும் என்றதொரு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடாக சமர்ப்பிக்கவுள்ளது.
இச் சட்டமூலம் மிகவும் கொடுமையானதாகவும் ஜனநாயகத்தை தலைகீழாக கவிழ்க்கும் வகையிலுமே அமையவுள்ளது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோல்வியடையச் செய்யும் நோக்கமே அரசாங்கத்திற்கு உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்

யுத்தத்தின் பின்னர் சரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை : ஹசன் அலி

 
யுத்தம்  நிறைவடைந்து நான்கு  கடந்துள்ள போதிலும் சரியான தரவுகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
 
இது தொடர்பில் விடிவெள்ளியிடம் கருத்து தெரிவித்த அவர்,
 
யுத்தமொன்று நிறைவடையும் பட்சத்தில் குறித்த நாடு யுத்த காலத்தில் சந்தித்த   சேதவிபரங்கள், இழப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் கணக்கெடுப்பொன்றின் மூலம் அறிய வேண்டும். அப்போதே யுத்தத்துக்கு பின்னரான அபிவிருத்திகள் சாத்தியமாகும்.
 
இது வரை அரசு சரியான கணக்கெடுப்பொன்றினை நடத்தவில்லை. அதனை அரசு உடனடியாக செய்யவேண்டும் என தெரிவித்தார்.

குடா நாட்டில் இருக்கும் அநேக இராணுவ முகாம்கள் நீக்கம்!



யாழ். குடா நாட்டில் உள்ள அநேக இராணுவ முகாம்கள் பலாலிக்கு கொண்டு செல்லப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்து உள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக மூன்று இராணுவ முகாம்கள் மாத்திரம் யாழ். குடா நாட்டில் இருக்கும், ஏனையவை  பலாலி இராணுவ தளத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
இவர் தெற்கு நெடுஞ்சாலையில் இராணுவத்தினரால் நடத்தப்படுகின்ற உணவு விடுதி ஒன்றை சம்பிரதாயபூர்வமாக நேற்று காலை திறந்து வைத்தபோதே இவ்விதம் பேசினார்.

Tuesday, May 21

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இரண்டாவது பிரபாகரனாக செயற்படுகிறார் - பொதுபல சேனா


வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் தலைமையலுவலகமான சம்புத்தத்வ ஜயந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்குத் தேர்தல் தேவையில்லை. அதனை நடத்துவதற்கு பொதுபல சேனா ஒருபோதும் அனுமதிக்காது. முதலில் அங்கு பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்கள மக்களை பதிவு செய்து குடியமர்த்த வேண்டும்.
இந்நிலையில் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். நாட்டுப் பற்று இருந்தால் 13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏனைய 8 மாகாண சபைகளிலும் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் பதவியை இராஜினாமா செய்து மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
இதேவேளை, வடக்குத் தேர்தல் இடம்பெற்றால் அது தமிழீழத்திற்கு வழி வகுக்கும். இரண்டாவது பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார்.
வட மாகாண சபைத் தேர்தலை நிறுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபல சேனா அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடும் என அவர் மேலும் தெரிவித்தார்

மின்சார கட்டண உயர்வுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரமே மின்சார கட்டணங்களில் அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சட்டமா அதிபர்  உயர்நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மின்சார கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் 2008 ஆம் ஆண்டு வழக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நெரின் புள்ளேயே இவ்வாறு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

புதிய மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான சந்தியா ஹெட்டிகே மற்றும் பி.ஏ.ரத்னாயக்க ஆகியோரின் முன்னிலையிலே இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஆராயப்பட்டது.

இந்த மனு உயர்நீமன்றத்தில் ஆராயப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நெரின் புள்ளே, மின்சார சபை சட்டமூலம் திருத்தப்பட்டதன் பின்னர் மின்கட்டணங்களை திருத்துவதற்கான முழுமையான அதிகாரம் பொதுமக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கே இருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து இந்த அடிப்படை உரிமைமீறல் மனுமீதான விசாரணை யூன் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போராட்டம் நடக்கிறதா என அரசிற்கு சந்தேகம்! அமோக வெற்றி - தொழிற்சங்கங்கள்

போராட்டம் நடக்கிறதா என அரசிற்கு சந்தேகம்! அமோக வெற்றி - தொழிற்சங்கங்கள்

May 21, 2013  02:28 pm
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க் கட்சி தொழிற் சங்கங்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

900 தொழிற்சங்ககங்கள் மற்றும் 15 அரசியல் கட்சிகள் இந்த பகிஸ்கரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கும் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

இராணுவ ஆட்சி கிழக்கிற்கும் விரிகிறது : முஜிபுர் ரஹ்மான்


வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று தற்போது கிழக்கிலும் இராணுவ ஆட்சியை மேற்கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.
ராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டை யாரும் பிளவுபடுத்த அனுமதிக்க முடியாதென்று தெரிவிக்கும் ஜனாதிபதி, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு துண்டுதுண்டுகளாக கூறு போட்டு நாட்டின் காணிகளை விற்றுள்ளார்.
இந்நிலையில் வடக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் இராணுவத்தினரை பயன்படுத்தி அபகரித்த அரசாங்கம், தற்போது கிழக்கிலும் இதனை மேற்கொண்டு வருகின்றது.
வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று கிழக்கிலும் தற்போது இராணுவ ஆட்சி நிலவுகின்றது.
குறிப்பாக கிழக்கில் புல்மோட்டையில் மக்களின் காணிகளை கடற்படையினர் தமது தேவைக்காக சுவீகரித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் இடம்பெறுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுமானால் நாடு இன்னுமொரு யுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜப்பான் கப்பல்கள் இரண்டு திருமலை துறைமுகத்தில் நங்கூரம்

ஜப்பான் கப்பல்கள் இரண்டு திருமலை துறைமுகத்தில் நங்கூரம் (படங்கள்)




































ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

நேற்று (20) பகல் இந்த கப்பல்கள் இரண்டும் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

அநுராதபுரம் பூங்காவில் அமர்ந்து சுகம் அனுபவித்த நூற்றுக்கணக்கான காதல் ஜோடிகள் கைது

அநுராதபுரம் மல்வத்து ஓயாவுக்கு அருகிலுள்ள பூங்காவில் காதல் சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான இளைஞர்,
யுவதிகளை அநுராதபுரம் பொலிஸார் சுற்றிவளைத்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.


கடந்த 18ஆம் திகதி மாலை ரிவர் பார்க் பூங்காவை அநுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் அங்கும் இங்கும் நின்றவாறே காதல் சுகம் அனுபவித்துக்கொண்டிருந்த 120 இளைஞர், யுவதிகள், சிறுவர்களை மகளிர் பிரிவின் கேட்போர் கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


இவ்வாறு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் யுவதிகள் 18-20 வயதுக்குட்பட்டவர்களாவர். பின்னர் இவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகின்றனர் - அமெரிக்கா

 
இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கிறிஸ்தவ தேவாயலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இன ரீதியான முரண்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத நம்பிக்கை இன சமூக அடிப்படையில் சமூக ரீதியான ஒடுக்குமுறைகள் இடம்பெறுவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது குறைவாகக் காணப்பட்டாலும், பௌத்த கடும்போக்காளர்கள், முஸ்லிம்கள் மீது அதிகளவு அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தை தோற்கடிப்போம்: அரசாங்க தொழிற்சங்கங்கள் சவால்

Protestமின்சாரக் கட்டண அதிகரிப்பினை ஆட்சேபித்து இன்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்து பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்தில் சுமார் 941 தொழிற்சங்கங்கள் இணைந்துகொள்ள இணக்கம் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பின் இவ்வாறான வேலை நிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தாங்கள் இதில் கலந்துகொள்ளாது தோற்கடிப்போமென அரசாங்க தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை புகையிரத திணைக்களத்தின் ஒரு ரயில் சேவையையாவது மேற்படி தொழிற்சங்க போராட்டத்தின்மூலம் நிறுத்திக்காட்டுங்கள் என சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், பாடசாலை நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றை காலை நிலவரப்படி கொழும்பில் அனைத்து நடவடிக்கைளும் வழமைபோன்று நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் எதுவும் நடைபெற்றதாக இதுவரை செய்திகள் பதிவாகவில்லை. அரசாங்க மற்றும் தனியார் பஸ்கள் வழமைபோன்று இன்று சேவையில் ஈடுபட்டுள்ளன.
சில தனியார் பேரூந்துகள் நேற்றுமுன்தினம் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவற்றுக்கான அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்யவுள்ளதாகவும் தனியார் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த போராட்டத்தில் கலந்து கொள்வோருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு சட்டரீதியாக அணுகவேண்டிவருமென சட்டத்தரணிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இந்தப் போராடாட்டத்தை எந்த வகையிலும் சட்டவிரோதமாக கருதமுடியாது. போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலவச அடிப்படையில் நீதிமன்றில் ஆஜராகி அவர்களுக்காக குரல்கொடுப்போம் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வடக்கு தேர்தலில் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட மு.கா. தீர்மானம்

 
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் வட மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாட்டுடன் உரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்றிரவு மு.கா.வின் தலைவரும் நிதியமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அச் சந்திப்பிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
 
இச் சந்திப்பில் மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி., மு.கா.வின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர், பாரூக் முத்தலிப்பாவா எம்.பி., பைஸல் காசிம் எம்.பி. உட்பட கட்சியின் வன்னி மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 
இச்சந்திப்பில், இன்று மு.கா. அரசின் பங்காளிக் கட்சியாக ஆட்சியில் இருந்தபோதும் மு.கா. ஆதரவாளர்கள் புறந்தள்ளப்படுகின்றனர். இந்நிலையினை இன்னும் தொடர விடக் கூடாதென மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
 
எனவே, நடைபெறவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் நலனை முன்னிப்படுத்தி முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மு.கா. உரிய தரப்பினருடன் இணக்கப்பாட்நோடு இணைந்து போட்டியிடுவதற்குத் தயார் என முடிவெடுக்கப்பட்டது. மேலும், இணக்கப்பாட்டை எட்டுவதற்கு மு.கா. எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்யத் தயார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைகளை ஒழிக்க கட்சிகளை ஒன்றிணையுமாறு அழைக்கிறார் மல்வத்தை பீடாதிபதி


Sumangala-Thera
நாட்டுக்குப் பொருத்தமற்ற மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க எல்லாக் கட்சிகளும்,அமைப்புகளும் ஒன்றாக கரம் கோர்க்க வேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டி தலாதா மாளிகையில் நேற்று முன்தினம், மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரரை சிறிலங்கா அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, சந்தித்து ஆசிபெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மாகாணசபைகளுக்குகப் பதிலாக, தற்போதைய தேவைகளுக்குப் பொருத்தமான மாற்று நிர்வாக முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இந்தியாவின் மாநிலம் ஒன்றை விடவும் மிகச் சிறிய நாடு சிறிலங்கா.
எனவே, நிர்வாக முறையை மாகாணங்களாகப் பிரிக்க வேண்டிய தேவையில்லை.
கடந்த 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மாகாணசபைகளில் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடவில்லை.
அதிகாரப்பகிர்வு தொடர்பான பொருத்தமான உடன்பாடு செய்யப்படாததால், மத்திய அரசுக்கும் மாகாணசபைகளுக்கும் இடையில் பாடசாலைகள், மருத்துவமனைகள், வீதிகள் போன்ற விவகாரங்களில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
எனினும், வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், மாகாணசபைகளை ஒழிக்க முயன்றால், அது அனைத்துலக சமூகத்துக்கு தவறான சமிக்ஞையை வெளிப்படுத்தும்.
இதனைக் கருத்தில் கொண்டு அதிகாரப்பகிர்வு விடயத்தில் அனைத்துக் கட்சிகளும் குழுக்களும் உகந்தமுறையில் செயற்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இந்தப் பதவிக்கு வரக்கூடியவரின் நடத்தையை இப்போதே கணிக்க முடியாது என்பதால், தற்போதைய அதிபரின் பதவிக்காலத்திலேயே அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மாத்தையாவுக்கு ஆயுதங்கள் கொடுத்த பிறேமதாஸ!



மாத்தையா அணிக்கு ஆயுதங்கள கொடுத்தமை மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் பிளவை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி பிறேமதாஸ முயன்றார் என்று அவரது மகன் சஜித் பிறேமதாஸ தெரிவித்து உள்ளார்.
இவர் பி. பி. சி சிங்கள்  சேவைக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
இவர் இதில் முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-
“ புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார் என்று என் தந்தையார் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆயினும் புலிகள் இயக்கத்தில் அவரால் நம்பக் கூடிய குழுவுக்கே ஆயுதம் கொடுத்தார். மாத்தையா தலைம்மையிலான குழுவைப் பலப்படுத்தவே ஆயுதங்கள் கொடுத்தார். பிரபாகரனுக்கு போட்டியாக மாத்தையாவை வளர்த்தார். ”

ரோஹண விஜயவீரவின் மகள் கைது


மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் மகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தாய் மற்றும் சகோதரனை தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் ரோஹண விஜயவீரவின் மூத்த மகள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். மறைந்த ரோஹன விஜயவீரவின் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்தே மகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போது அவரை யூன் 3 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி: தமிழ்மிரர்

‘வட-மாகாண தேர்தலை நடத்த அச்சப்பட வேண்டாம்’

130520153045_malwatta_mahanayake_304x171_bbc_nocreditஇலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு-மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபைகளுக்கு உள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ஒழித்துவிடுவதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக ஆளுந்தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலைமையில், தேர்தலுக்கு முன்னதாக அந்த அதிகாரங்களை ஒழிப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்தத் தேவையில்லை என்று நாட்டில் செல்வாக்கு மிக்க மல்வத்து பௌத்த பீடம் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளது.

அரசாங்கத்தை சிக்களுக்கு உள்ளாக்கமாட்டோம் - ரவூப் ஹக்கீம்

அரசாங்கத்தை சிக்களுக்கு உள்ளாக்கும் எந்த நடவடிக்கையையும் தமது கட்சி மேற்கொள்ளாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, வடமாகாண சபை தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் முறை தொடர்பில் கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் நிலவுவதாகவும் அமைச்சர் ரவுப் ஹக்கிம் தெரிவித்தார்.

வடமாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை- டக்ளஸ் தேவானந்தா

epdpவடமாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்க தேவையில்லை என ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா டெயிலி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.  இந்த அதிகாரங்களை வழங்குவது குறித்து தெற்கில் உள்ள தெற்கில் உள்ளவர்கள் சிலர் கடுமையான கருத்துக்கள் வெளியிட்டு வருவதால் காணி காவல்துறை அதிகாரங்களை வடமாகாணத்திற்கு வழங்காது நிறுத்தி வைப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசுத்தலைவர் தன்னை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறியதாகவும் எனினும் தான் மாகாணசபை தேர்தலில் போட்டியிட விருப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அரசியல் பிரச்சினை மட்டுமே உள்ளது என்றும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சிங்களவர் தொகை 62%.... இன்னும் 10 ஆண்டுகளில் 40% ஆக மாறுமே! - விசனப்படுகிறது சிங்கள ராவய

'விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து நாடு வெற்றிகண்டும், சுதந்திரமில்லாமல் இருக்கும் சாதி சிங்கள சாதியே... அதற்காகக் குரல் எழுப்பவே நாங்கள் 'சிங்கள ராவய' என்ற பெயரில் இந்த இயக்கத்தை ஆரம்பித்தோம்.' இவ்வாறு சிங்கள ராவய இயக்கத்தின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டார்.

தெஹிவளையில் இடம்பெற்ற சிங்கள ராவய இயக்கத்தின் மூன்றாவது ஆண்டுவிழா நிகழ்வின்போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

'சிங்கள ராவய என்பது சிங்களவர்களுக்காக் குரல் கொடுக்கும் அமைப்பாகும். சிங்கள பௌத்தர்கள் என்பவர்கள் துன்பத்தை அனுபவிக்கும் மக்கள்.

தற்போது இலங்கையில் 62% சதவீதத்தினர் மட்டுமே பௌத்தர்களாக இருக்கின்றனர். இன்னும் பத்துஆண்டுகளில் 40% வீதமாக அதிகரிப்பர். அதனால் நாட்டைக் காக்க ஆவன செய்வோம்' என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

Monday, May 20

180 அலகுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால் கட்டணத் திருத்தம் அவசியமில்லை


மின்சார சபையினால் திட்டமிடப்பட்ட அளவை விட தற்போது நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பதால் 180 அலகுகள் வரை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு மின்சார கட்டணத் திருத்தம் அவசியமில்லை என தேசிய மின்சார பாவனைக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண முஸ்லிம்களுடன் உத்தேச தேசிய ஷூரா சபை ஏற்பாட்டுக் குழுவினர்


உத்தேச  தேசிய ஷூரா சபை அமைவிற்கான இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினர் நேற்றும் இன்றும் பல்வேறு சந்திப்புக்களை மத்திய மாகாணத்தில் மேற்கொண்டுள்ளனர், அக்குரணை, மாத்தளை,கண்டி, கம்பளை பிரதேசங்களில் உலமாக்களையும், சமூக பிரமுகர்களையும் சந்தித்து தேசிய ஷூரா அமைவு தொடர்பான ஆலோசனைகளை பெற்று வருகின்றனர்.
இன்று மாலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள், பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் அமைப்பினரோடு   விரிவான ஆலோசனைக் கலந்துரையாடல்களை நடாத்துகின்றனர். தொடர்ந்து கண்டி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் சந்திப்பு ஒன்றும் இடம் பெறவுள்ளது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்கலீல் இருந்தும் விடுக்கப்படுகின்ற அழைப்புக்களை ஏற்று அவ்வப் பிரதேசங்களுக்குச்  சென்று உத்தேச தேசிய ஷூரா சபை அமைவு குறித்த கலந்துரையாடல்களையும் அடிமட்ட ஷூரா கட்டமைப்புக்கள் குறித்த விரிவான ஆலோசனைக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள உத்தேசித்துள்ள இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினர் தமது முதலாவது விஜயத்தை மத்திய மாகாணத்தில் மேற்கொண்டுள்ளனர். 
இந்த மகத்தான வரலாற்றுப்பணியில்  சமூகத்தின் சகல  தரப்பினரும் பங்கெடுக்க வேண்டும் எனும் உயரிய எண்ணத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய விஜயங்கள் "தேசிய ஷூரா அமைவிற்கான பூர்வாங்க ஷூரா " சந்திப்புக்கள் என அடையாளபடுத்தலாம். இந்த அமானிதமான கூட்டு முயற்சியில் சமூகத்தின் சகல தரப்பினரும் ஒன்று பட்டு ஒத்துழைப்பது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் தேசிய வாழ்வில் முக்கியத்துவம் பெறும் உத்தேச ஷூரா சபை  எனும் ஒருங்கிணைப்புப் பொறிமுறை  தேசத்தின் ஒருமைப்பாடு சமாதான சகவாழ்வு ,பொருளாதார சுபீட்சம் போன்ற இன்னோரன்ன விவகாரங்களில் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்வதோடு, சமூகத்தின் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை திட்டமிடுகின்ற உயர் ஆலோசனை சபையாகவும் தொழிற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு உயர் சபை முஸ்லிம் சமூகத்தின் பறந்து பட்ட அங்கீகாரத்துடன் மாத்திரமே தோற்றுவிக்கப் பட முடியும். 
எல்லாம் வல்ல அல்லாஹ் சரியான திசையில் எம் அனைவரையும் பயணிக்கச் செய்வானாக ! 

கராச்சி மறுவாக்குப் பதிவில் இம்ரான் கானின் கட்சி வெற்றி

 
பாகிஸ்தானில் கராச்சி நகரில் நடத்தப்பட்ட மறுவாக்குப் பதிவில் இம்ரான் கானின் பீடிஐ கட்சி முக்கிய தொகுதியில் வெற்றிபெற்றுள்ளதை அடுத்து, அங்கு தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாகிஸ்தானில் நடந்த பொதுத் தேர்தலின்போது, கராச்சி நகரில் நடந்த வன்முறைகள் மற்றும் வாக்கு மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து, அங்கு நடத்தப்பட்ட மறுவாக்குப் பதிவின் அதிகாரபூர்மற்ற முடிவுகளின் படி, பீடிஐ கட்சி கராச்சியின் வசதிகள் மிக்க தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.
 
பீடிஐ கட்சியின் துணைத் தலைவர் ஷாஹ்ரா ஷாஹித் ஹுசைன் கடந்த சனிக்கிழமை கராச்சியில் படுகொலை செய்யப்பட்ட நிலையிலேயே இந்த தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.
 
கராச்சியில் செல்வாக்குடன் இருந்த எம்கியூஎம் கட்சியின் தலைவர் அல்தாப் ஹுசைன் தான் இந்தக் கொலைக்கு காரணம் என்று இம்ரான் கான் சுமத்தும் குற்றச்சாட்டை அவர் மறுக்கிறார்.
 
கடந்த 11-ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரிப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி பெருவெற்றி பெற்றது.
இம்ரான் கானின் கட்சி பாகிஸ்தானின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது.   (பி.பி.சி )

நாடு பூராகவும் நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்


மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக நாளை ஒருநாள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் தயாராகி வருகின்றன. தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கும் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் இவர்கள் அணி திரள்கின்றனர்.
இந்த பணிப் பகிஷ்கரிப்பு தொடர்பில் சில தொழிற்சங்கங்கள்  தெளிவுபடுத்தியிருந்தன.

ராஜபக்ஷ ரெஜிமென்ட் மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துவிட்டது : ரணில்


ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்களின் எதிர்ப்பு போராட்டத்தைக் கண்டு பயந்துவிட்டது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள தேசிய தொழிற்சங்கப் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டும்.

இந்த அரசாங்கம் மக்கள் விரோத செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது. தற்போது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கத் துணிந்து விட்டனர்.
எனவே, இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு எதிர்வரும் 2014 இல் எமக்கு தேர்தல் ஒன்று அவசியமாகவுள்ளது. நாம் அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நிலைதடுமாற வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு 8 வானூர்திகள் “நன்கொடை” ?

இலங்கைக்கு 8 வானூர்திகளை நன்கொடையாக அளிக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
பிரதமர் டி.எம் ஜயரத்னவை கம்பொலயில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில் வைத்து சந்தித்தபோதே ரஷ்ய பிரதிநிதி Konstantin Kosachev இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பின் ரவூப் ஹக்கீம், அசாத் சாலி உயிருடன் தப்பியிருக்க முடியாது


சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவது, தாய்நாட்டுக்காக தமது உயிர்களைக் கொடுத்த போர்வீரர்களை அவமானப்படுத்தும் செயல் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 
ஜாதிக ஹெல உறுமயவினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட  போர்வீரர்களை நினைவு கூரும் நான்காவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஈழப்போரில் வெற்றி பெற்றிருந்தால், இப்போது சிறிலங்காவுக்கு எதிராக அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் கூட இருந்திருக்கமாட்டார்கள். 
பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், அரசியல்வாதிகளான சம்பந்தன், ரவூப் ஹக்கீம், அசாத் சாலி போன்றோரும் உயிருடன் இருந்திருக்க முடியாது.  அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருக்காது போனால், தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அமிர்தலிங்கத்தின் நிலையையே அடைந்திருப்பர். 
எனவே, போரில் பெற்ற வெற்றியை அரசியல் வெற்றியாக அனைத்துலக அரங்கில் பாதுகாப்பதற்கு சிங்களவர்கள் அனைவரும் துணைநிற்க வேண்டும். 
அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும் போது, அரசியலமைப்பில் திருத்தம் செய்யாது போனால் அது வரலாற்றுத் தவறாகி விடும்“ என்றும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

வேற்று மதங்களுடன் மோதவேண்டாம்: பிக்குகளுக்கு புத்தசாசன அமைச்சர் அறிவுறுத்தல்


tmநாட்டிலுள்ள பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமரும் புத்தசாசன, மத விவகார அமைச்சருமான டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
களனியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது;
சில பிக்குகள் வேற்று மதங்களுடன் மோதல்களை உருவாக்க முற்படுகின்றனர். இதனால் பெரும்பான்மை இனத்திற்கு அழிவு ஏற்படும் அபாயமுள்ளது. இதனை பௌத்த மாநாயக்கத் தேரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிக்குகள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும்.
மக்களின் மனங்களை வெல்லக்ககூடிய மதத் தலைவர்கள் இல்லையென்றால், எவ்வளவுதான் விகாரைகள் அமைத்தும் பயனில்லை என்று மேலும் தெரிவித்தார்.

மஹிந்தரின் புகழ் பாடும் அசாத் சாலி!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவாலேயே முறையான சமாதானம், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றை நாட்டில் ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்து உள்ளார் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி.
அண்மைய கைதை தொடர்ந்து மிகுந்த பிரபலம் அடைந்தவர் இவர்.
கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசியபோதே நாட்டில் முறையான சமாதானம், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றை கட்டியெழுப்ப மிகவும் பொருத்தமான நபர் ஜனாதிபதியே ஆவார், எனென்றால் ராஜபக்ஸ குடும்பத்தில் வேறுபட்ட இனங்கள், வேறுபட்ட சமயங்கள் ஆகியவற்றை சேர்ந்த அங்கத்தவர்கள் உள்ளார்கள், ஆனால் மிகவும் ஐக்கியமாகவும், சமாதானமாகவும் வாழ்கின்றார்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் எவ்விதம் அமைதி, சமாதானம், ஐக்கிட்யம் ஆகியவற்றை பேணுகின்றாரோ அவ்விதம் நாட்டு மக்களிடையே அமைதி, சமாதானம், ஐக்கியம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றமை ஜனாதிபதிக்கு இலகுவான காரியம் ஆகும் என்று அசாத் சாலி தெரிவித்து உள்ளார்.

எதிசலத் நிறுவனத்தின் “தன்சல்” : 3000 பேருக்கு மூக்குக் கண்ணாடி


வெசாக் வந்துவிட்டாலே “தன்சல்” எனும் பந்தல்களும் தோரணங்களும் தெருவோரங்களில் தோன்றிவிடும். இந்தத் தடவை தமது செயற்பாட்டை சமூக நோக்குடன் செயற்படுத்தப்போவதா அறிவித்துள்ள எதிசலத் தொலைத் தொடர்பு நிறுவனம்,  So Others May See Inc. (SOMS) எனும் அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து 3000 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கலையும் கண் பரிசோதனை முகாம்களையும் 24ம் திகதி முதல் 26ம் திகதி வரை தமது நிறுவன காட்சி சாலை அமைந்துள்ள No.109, Galle Road, Colombo 3 எனும் விலாசத்தில் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

பௌத்த தீவிரவாத அமைப்புகள் மு.காவை அரசிலிருந்து வெளியேற்ற காத்திருக்கின்றன - ஹக்கீம்

நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சில சிங்கள, பெளத்த தீவிரவாத அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்துள்ள இன்றைய சூழ் நிலையில் உள்நாட்டு அரசியல் கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றன என நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 
கடந்த சனிக்கிழமை குருனாகல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற கூட்டங்களின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
 

முஸ்லிம்களுக்காக அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியவும் முஸ்லிம் அமைச்சர்கள் தயார்! - ஹிஸ்புல்லா

முஸ்லிம்களுக்காக அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியவும் முஸ்லிம் அமைச்சர்கள் தயார்!


பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து செயற்படமாட்டேன். அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியும் சந்தர்ப்பம் வந்தால் அதையும் செய்ய தவற மாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற் கண்டவாறு கூறினார்.

உயிருக்கு போராடுகின்றார் ஜயலத் எம். பி!


ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்று டேர்டன்ஸ் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
இவர் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்புக்கு உட்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றார்.
இவரை சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் வைத்தியசாலைக்கு இன்று இரவு விமானம் மூலம் கொண்டு செல்ல உறவினர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Sunday, May 19

ஜனாதிபதி மஹிந்த ஆறாவது தடவையாக சீன பயணம்

president_mahinda_rajapaksaஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 22 ம் திகதி சீனாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர் இரண்டு நாட்கள் சீனாவில் தங்கியிருப்பார் என்று ஜனாதிபதி செயலகம் கூறுகிறது.
இதனடிப்படையில் ஜனாதிபதியாக பதிவியேற்றதன் பின்னர், அவர் மேற்கொள்ளும் ஆறாவது சீன பயணம் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, சீன ஜனாதிபதியாக கடந்த ஏப்ரல் மாதம் ஜி ஜின்பிங் பதவியேற்றவுடன் தொலைபேசியில் உரையாடிய முக்கிய அரச தலைவர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் ஒருவர் சீன அரச அதிகாரி வூ சியாங் காஹே தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான நெருக்கமான இராஜதந்திர உறவு வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணீர் சிந்தும் உரிமை நமக்கில்லையா ? சுரேஷ் பிரேமசந்திரன் கேள்வி




யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என அதன் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று மாலை 4.00 மணியளவில் மன்னாரில் தமது உயிர்நீத்த சொந்தங்களை நினைத்து இரங்கல் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் செயலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.
உயிர்நீத்த சொந்தங்களை நினைத்து கண்ணீர் சிந்தும் உரிமைகூட தமிழ் மக்களுக்குக் கிடையாதா? தமது சொந்தங்களை நினைத்து கண்ணீர் சிந்துபவர்களை கைதுசெய்வதனூடாக அரசாங்கள் எதனை சாதிக்க முயல்கிறது என்பது தெரியவில்லை. சர்வதேசத்திற்கு ஒரு முகத்தினையும் தமிழ் மக்களுக்கு பல முகத்தினையும் அரசு காட்டமுனைவது கண்டிக்கத்தக்கது.
எங்களுக்கு உரிமையிருக்கிறது எமது உயிர்நீத்த சொந்தங்களை நினைத்து கண்ணீர் சிந்துவதற்கும் அவர்களை நினைவு கூர்வதற்கும். அந்த உரிமையைக்கூட தட்டிப்பறிக்கப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது. இவ்விரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற அரசியல் பிரமுகர்களை கைது செய்வது ஜனநாயகமாகுமா? எனவே, கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசினைக் கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு இச்சம்பவத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்த கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசாங்கத்திற்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தலைமையில் 32 பேர் கொண்ட குழு..?


 அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ஒழிக்கும் முயற்சிகளுக்கு எதிராக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. 
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர். 
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களை பிடுங்கிக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 
மாகாணசபைகளின் இந்த அதிகாரங்களைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், இந்த எதிர்ப்பு அணி சிறிலங்கா அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இந்தக் குழுவில் உள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் இழக்கும் என்றும் கருதப்படுகிறது. 
இந்தக் குழுவில் அரசதரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் டியு.குணசேகர, திஸ்ஸ விதாரண, ஜனக பண்டார தென்னக்கோன், றெஜினோல்ட் குரே, மேர்வின் சில்வா, பீலிக்ஸ் பெரேரா, ராஜித சேனாரத்ன ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர, காணி, காவல்துறை அதிகாரங்கள் நீக்கபடாமலேயே வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

பொது பல சேனா சுதந்திரமாக நடமாடுவது நியாயமா? அசாத் சாலி கேள்வி

இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முயற்சித்த என்கை்  கைது செய்தார்கள். ஆனால் இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்த முயலும் பொதுபலசேனாவினர் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது நியாயமா என  தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதிமேயருமான அசாத்சாலி தெரிவித்தார்.
இன்று கொழும்பில்  இடம்பெற்ற  ஊடகவியலாளர்கள் மாநாட்டின் போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
என்னை மீண்டும் கைது செய்யுமாறும் நான் வீரனாக உள்ளே போய் பூனையாக வெளியே வந்ததாகவும் பொதுபல சேனா கூறுகின்றது. நான் நாட்டில் தேசிய நல்லுறவை ஏற்படுத்தவே பாடுபட்டேன். அத்தோடு பயங்கரவாதம் என்பது தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற எந்த இனத்திலிருந்து உருவானாலும் அதனை எதிர்ப்பவன் நான். அதேவேளை முஸ்லிம்கள் பிரிவினையை எதிர்த்தவர்கள். இதற்காகவே யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டனர்.
அதுபோன்று ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டு வந்த போது அதனை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் பேரணியை நடத்தினார்கள். இதன்போது இலங்கைக்கு அரபு நாடுகள் ஆதரவு வழங்கின. எனவே என்னை அல்ல.. பொது பல சேனாவினரையே கைது செய்ய வேண்டும். இனங்களுக்கிடையே நல்லுறவுகளை சிதைக்கும் குரோதத்தை விதைக்கும் பொதுபலசேனாவினரையே கைது செய்ய வேண்டும்.
ஆனால் அவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் தடுக்காதுள்ளது. எனவே அரசாங்கத்திற்கும் இதனோடு தொடர்புண்டா என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.

பொதுபல சேனா குறிப்பிடும் பௌத்த நாடு குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்


பொதுபலசேனாவின் கருத்து இந்நாட்டு அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, அந்தஸ்து போன்றவற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்று முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸனலி  தெரிவித்தார்.
பொதுபலசேனா, அமைப்பு இலங்கை பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு இதனை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை என்ற கூற்று தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுபலசேனாவின் கருத்து அரசியலமைப்புக்கு விரோதமாக இருப்பதால். அரசாங்கம் இது தொடர்பில் தெளிவான கருத்தொன்றை வெளியிட வேண்டும். இதற்கு அரசாங்கம் பதிலளிக்கத் தவறினால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இதை ஆராய்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்களுக்கு சிறுபான்மைச் சமூகத்தினர் பதிலளிக்கும்போது அவர்கள் வேறு காரணங்களைச் சொல்லி சட்டத்தின்முன் நிறுத்தப்படுகிறார்கள். அவ்வாறான ஒரு முடிவுதான் அஸாத் சாலிக்கு நடந்நது. எனவே இவ்வாறான அமைப்புக்களின் கருத்துக்கள் நாட்டு மக்கள் மத்தியில் விரோதத்தை ஏற்படுத்துவதை தடுப்பதற்கு அரகாங்கம் தனது தெளிவான நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அரசியலமைப்பை அவமதிக்கிறது - இந்து மாமன்றம்


இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு இதை ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை என பொதுபல சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாட்டில் சமய, சமூக குரோதத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
அத்துடன், இவ்வாறான அறிவிப்பு இலங்கை அரசியல் அமைப்பை அவமதிக்கும் செயல் என்பதுடன் எமது சட்டங்களை மீறும் நடவடிக்கையுமாகும். எனவே இவ்வாறான பிரசாரங்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
கட்சியின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிங்களம் மட்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டதால் தான் கடந்த சில தசாப்த காலமாக நாடு அழிவுப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டது. இத்துடன் பெளத்தம் மட்டும் என்ற பிரசாரம் முன்வைக்கப்பட்டால் நாட்டின் நிலை மேலும் மோசமடையும் என்பது உறுதி. இதை உணர்ந்து ஜனாதிபதி, பிரதம எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சகலரும் இவ்வாறான அபாயகரமான பிரசாரங்களுக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் கேட்டுக் கொள்கின்றது.
இது தொடர்பில் தமிழ் பேசும் அமைச்சர்கள் உட்பட சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைக் கவனத்தில் எடுத்து, இவற்றை உடன் நிறுத்த சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் உட்பட நாட்டின் சமாதானம், அமைதி வேண்டி நிற்கும் ஏனைய சகல மக்கள் சார்பிலும் அகில இலங்கை இந்து மாமன்றம் கேட்டுக் கொள்கின்றது

வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல் வெளிகளையும் இராணுவம் தம்வசப்படுத்தியது

வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல் வெளிகளையும் இராணுவம் தம்வசப்படுத்தியது

வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல்வெளிகளை இலங்கை இராணுவத்தினர்  உரிமை கோரியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  செட்டிகுளம் கமநல கேந்திர நிலையத்தின் தலைவர் முகமட் அப்துல் கரிம் கரீஸ் நீண்ட காலமாக பயிர் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ளார். 
வவுனியாவில் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அருவித்தோட்டம் என்ற கிராமத்தில் இந்தப் பிரதேச விவசாயிகளின் 400 ஏக்கர் வரையிலான வயல் நிலங்களை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர்.

பொதுபலசேனாவின் கருத்து சிறுபான்மையினரின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது: எம்.ரீ. ஹஸனலி


Hasan Ali MPபொதுபலசேனாவின் கருத்து இந்நாட்டு அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, அந்தஸ்து போன்றவற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்று முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸனலி  தெரிவித்தார்.
பொதுபலசேனா, அமைப்பு இலங்கை பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு இதனை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை என்ற கூற்று தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுபலசேனாவின் கருத்து அரசியலமைப்புக்கு விரோதமாக இருப்பதால். அரசாங்கம் இது தொடர்பில் தெளிவான கருத்தொன்றை வெளியிட வேண்டும். இதற்கு அரசாங்கம் பதிலளிக்கத் தவறினால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இதை ஆராய்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்களுக்கு சிறுபான்மைச் சமூகத்தினர் பதிலளிக்கும்போது அவர்கள் வேறு காரணங்களைச் சொல்லி சட்டத்தின்முன் நிறுத்தப்படுகிறார்கள். அவ்வாறான ஒரு முடிவுதான் அஸாத் சாலிக்கு நடந்நது. எனவே இவ்வாறான அமைப்புக்களின் கருத்துக்கள் நாட்டு மக்கள் மத்தியில் விரோதத்தை ஏற்படுத்துவதை தடுப்பதற்கு அரகாங்கம் தனது தெளிவான நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மகாவம்சத்தை வாசிக்காதவர்களே இலங்கையை பெளத்த நாடு என்கின்றனர் – கலாநிதி விக்கிரமபாகு

விக்ரமபாகு கருணாரட்னஇலங்கை பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் முதலில் மகாவம்சத்தை வாசித்து அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது என்று நவசமசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இலங்கை ஆதி முதலே தமிழ் மக்கள் வாழ்ந்த நாடு. இதை மகாவம்சமே ஏற்றுக்கொண்டுள்ளது. விஜயன் கபடத்தனமாக அவனது மாமன்மாரை கொன்றுவிட்டு நாட்டைக் கைப்பற்றினான். சிங்களவர்களும் 2500 வருடங்களாகவே இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த நாடு சொந்தமானது. அதேபோல 200 வருடங்களுக்கு முன்னர் இந் நாட்டுக்கு கொண்டு வந்து குடியேற்றப்பட்ட இந்திய தமிழர்களுக்கும் இந்த நாடு சொந்தமானது.
இராவணன் என்ற தமிழ் மன்னன் இந்த நாட்டை ஆண்டான் என்று வரலாறு கூறுகின்றது. இதையெல்லாம் மறந்துவிட்டு இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இக் கூற்று மேலும் இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகளையே தோற்றுவிக்கும்.

இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு - அகில இலங்கை பஸ் நிறுவன சங்கம்.




பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை பஸ் நிறுவன சங்கம் தெரிவித்துள்ளது.

10 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியங்ஜித் தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்திற்கான தேசிய கொள்ளைக்கு அமைய 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி 20 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகவும் அதற்கு பின்னர் இதுவரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவூதி பேரீச்சம்பழங்களை காலதாமதமின்றி பகிர்ந்தளிக்கவும் - கண்டி முஸ்லிம் அமைப்புகள்

 
புனித ரமழானை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கவென சவூதி அரேபிய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்துள்ள பேரீச்சம்பழங்களை காலதாமதமின்றி பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
இவ்விடயம் குறித்து மேற்படி அமைப்புகள் மேலும் குறிப்பிடுகையில்,
 
புனித நோன்பு எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனவே புனித நோன்பை நோற்கவுள்ள முஸ்லிம்களுக்கு நேரகாலத்துடன் பேரீச்சம் பழங்களை பகிர்ந்தளிக்க முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக முஸ்லிம் நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பேரீச்சம்பழங்கள் காலதாமதமாகியே கிடைத்தன. அவ்வாறான நிலைமை இவ்வருடம் ஏற்படாதிருக்க உரிய தரப்பினர் அதற்கான நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
 
கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரபட்சமான பங்கீட்டு முறை இம்முறை இடம்பெறக் கூடாதெனவும் அவ்வமைப்புக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன

மாகாண சபைக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்க அனுமதியோம் - அ.இ.மு.கா

 
அரசியலமைப்பு சட்டத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்குவதற்கு ஒருபோதும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அனுமதிக்காது என கிழக்கு மாகாண சபை பிரதி முதல்வர் எம்.எஸ்.சுபைர் கூறினார்.
 
ஏறாவூர் அந் - நஹ்ல் இளைஞர் கழகம் நடத்திய கலாசார விழாவில் கெளரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 

திங்கட்கிழமையிலிருந்து புதிய மின்பட்டியல்....


அண்மையில் அதிகரிக்கப்பட்ட புதிய கட்டண மாற்றங்களுடனான மின்பட்டியல் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் பாவனையாளர்களின் கைகளுக்கு வந்துசேரக்கூடிதாகவிருக்கும் என மின்சாரத் திணைக்களம் குறிப்பிடுகிறது.

ஏப்ரல் மாதம் இருபதாம் திகதியிலிருந்து மின்சாரப் பட்டியல் மே மாதம் 20 ஆம் திகதிவரை கணிப்பிடப்படும் எனவும் மின்சாரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதனால், எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பாவனையாளர்களின் கைகளை வந்தடையும் சகல மின்சாரப் பட்டியல்களும் அதிகரிக்கப்பட்ட கட்டண அமைப்பிலேயே கணிக்கப்படும் என மின்சாரத் திணைக்களத்தின் சிரேட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின்சாரத் திணைக்களம் வெளியிட்ட புதிய கணிப்பீட்டு முறைக்கேற்ப, 60 அலகுகளுக்கு மேற்பட்ட அனைத்து மின்சாரப் பட்டியல்களினதும் தொகையில் அதிகரிப்பு ஏற்படும்.