இலங்கை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 22 ம் திகதி சீனாவிற்கான பயணத்தை
மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர் இரண்டு நாட்கள் சீனாவில் தங்கியிருப்பார்
என்று ஜனாதிபதி செயலகம் கூறுகிறது.
இதனடிப்படையில் ஜனாதிபதியாக பதிவியேற்றதன்
பின்னர், அவர் மேற்கொள்ளும் ஆறாவது சீன பயணம் இதுவென
குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, சீன ஜனாதிபதியாக கடந்த ஏப்ரல் மாதம் ஜி
ஜின்பிங் பதவியேற்றவுடன் தொலைபேசியில் உரையாடிய முக்கிய அரச தலைவர்களில்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் ஒருவர் சீன அரச அதிகாரி வூ சியாங் காஹே
தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான நெருக்கமான இராஜதந்திர உறவு வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment