Showing posts with label சுவாரஷ்யமானவை. Show all posts
Showing posts with label சுவாரஷ்யமானவை. Show all posts

Sunday, April 28

‘மச்சான் ஞானசார’ என்ற கட்டுரை எழுதியவர் 4ஆம் மாடிக்கு அழைப்பு !

Investigation97 ‘மச்சான் ஞானசார’ என்ற கட்டுரை எழுதிய பெப்பராசியா  சிங்கள சிஞ்சிகையின் ஆசிரியர் 4ஆம் மாடிக்கு அழைக்கப் பட்டுள்ளார்.  பொதுபல சேனாவின் பொது செயளாலர் கலபொட அத்தே ஞானசார தேரர் தொடர்பாக   ‘மச்சான் ஞானசார’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை அண்மையில் எழுதியமை தொடர்பாக பெப்பராசியா சிஞ்சிகையின் ஆசிரியர் சோபால அமரசிங்க விசாரணைக்காக 4ஆம் மாடிக்கு அழைக்கப் பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில்  ‘மச்சான் ஞானசார’ என்ற தலைப்பில்  பிரபல பெப்பராசியா  சிங்கள சிஞ்சிகையில் அதன் ஆசிரியர்   சோபால அமரசிங்க  கட்டுரை ஒன்றில் ஞானசார போன்ற பெளத்த தேரர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்புவதை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு  ஆக்கத்தை பதிவு செய்திருந்தார். அதை தொடர்ந்து பொதுபல சேனா குறித்த கட்டுரை தம்மையும் பௌத்தத்தையும் அவமானப்படுத்துவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளிடம் இது தொடர்பாக முறையிடப் பட்டுள்ளது  என்றும்  அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பெப்பராசியா சிஞ்சிகையின் ஆசிரியர் சோபால அமரசிங்க பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் என்று தெரிவித்தவர்களால் தான் விசாரிக்கப்பட்டதாக  ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

Monday, April 15

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் புதிய வழி - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


பொதுவாக, நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது கணையமாகும். இதில் உள்ள பீட்டா அணுக்கள் உற்பத்தி செய்யும் இன்சுலின் திரவம், இந்த செயலைப் புரிகின்றது. இந்த செயல்பாடு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சாண்டியாகோ மருத்துவக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு, தற்போது மற்றொரு புதிய முயற்சிக்கும் வித்திட்டுள்ளது. சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களுக்கு, இந்த பீட்டா அணுக்களின் செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதன் மூலம், இந்நோய் வராமல் தடுக்கலாம் என்பதே அந்தப் புதிய முயற்சி ஆகும்.

பிராக்டல்கைன் எனப்படும் புரதம் கலந்த மெல்லிய திசுப்படலத்தை பீட்டா அணுக்களின் மீது பொருத்தினால், அவை புரத சத்தை ரத்தத்தில் கலக்கச் செய்து, இன்சுலினை சுரக்க உதவி புரியும் என்பதே விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். இதற்கு முன்னால் இந்த முயற்சி பற்றி எதிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் இது ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு என்றும் பேராசிரியர் ஒலேப்ஸ்கி கூறுகின்றார்.

இன்சுலின் திரவ உற்பத்தியும் குளுக்கோஸ் கட்டுப்படுத்தப்படுதலும், சர்க்கரை நோய் வராமலிருக்கத் தேவையான முக்கிய விஷயங்கள் ஆகும். இதனை பிராக்டல்கைன் படலம் திறம்பட செய்வதோடு வேறு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பது இதன் சிறப்பாகும்.

Friday, April 5

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத சிலந்தி!



மாங்குளம் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித  முகமொன்றின் அளவை ஒத்த சிலந்தியானது முழு உலகினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2304180-19186E21000005DC-56_634x424.jpg
இச்சிலந்தியானது குறுக்காக சுமார் 8 அங்குளம் நீளமானதென கணிப்பிடப்பட்டுள்ளதுடன் கால்களில் மஞ்சள் நிற கோடுகளையும் கொண்டுள்ளது.
http://www.virakesari.lk/image_article/img2090at8-1-762x428.jpg
டரான்டூலாஸ் 'tarantulas' எனப்படும் இராட்ச சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த இச் சிலந்தியானது பொயிசிலோதேரியா 'Poecilotheria' இனத்தைச் சேர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Thursday, March 21

பயணப் பை போல் மடித்து எடுத்துச் செல்லக்கூடிய ஸ்கூட்டர்

 
பயணப்பை போன்று மடித்து வைத்துக்கொண்டு எடுத்துச் செல்லக்கூடிய ஸ்கூட்டர் ஒன்றை ஹங்கேரிய நிறுவனமொன்று தயாரித்துள்ளது. 

மின்சார சக்தியினால் இயங்கும் ஸ்கூட்டர் இதிலுள்ள பற்றரியை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 35 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யலாம்.

மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்ய முடியும். இதன் எடை 25 கிலோகிராம். உரிய இடத்தை அடைந்தவுடன் இரண்டாக மடித்து ஒரு பயணப்பையை போன்று எடுத்துச் செல்லாம். 

Wednesday, March 13

பாட்டனின் ஞாபகமாக 115 வருடங்களாக பேரன் பாதுகாக்கும் மிகப் பழைய பாண்!



மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கம், வைரம், தளபாடங்கள், வாகனங்கள், புகைப்படங்கள் என மேலும் பல பொருட்களை ஞாபகர்த்தமாக வைத்திருகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த நபரொருவர் 1899ஆம் ஆண்டிலிருந்து பாட்டனின் ஞாபகர்த்தமாக பாணொன்றை பாதுகாத்து வருகின்றார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 92 வயதான டெர்ரி ஓ கெல்லி என்ற நபரே மேற்படி பாணின் உரிமையாளர். 115 வருடங்கள்
பழைமையான பாணை கண்ணாடிப் பெட்டியொன்றில் பாதுகாத்து வருகிறார் டெர்ரி.
இது தொடர்பில் டெர்ரி கூறுகையில், இந்த பாணை எனது பாட்டனின் ஞாபகார்த்தமாக வைத்திருப்பதை எண்ணி பெருமையடைகின்றேன் எனத் தெரித்துள்ளார்.