Sunday, September 11

மர்ம மனிதர் நடமாட்டம்! இரு படையினரை மடக்கினர் மக்கள்! நேற்றிரவு அப்பகுதியில் பதற்றம்!


[ ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2011, 06:01.57 AM GMT ]
யாழ். சுழிபுரம் பிரதேசத்தில் உள்ள தொல்புரம் மத்தி பகுதியில் மர்மமனிதர்களின் நடமாட்டத்தை அடுத்து இராணுவத்தினர் இருவர் பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் தொல்புரம் அமெரிக்க மிஷன் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்துக்கு இரவு 10 மணியளவில் வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆறு இளைஞர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
தொல்புரம் அமெரிக்க மிஷன் பாடசாலைக்கு சமீபமாக மர்ம மனிதர்கள் நால்வரின் நடமாட்டத்தை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். பின்னர் அவர்களை பிரதேச மக்கள் கலைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் ஓடித் தப்பிவிட்டனர்.

கிரேக்கத்தின் ஏதேன்ஸ்நகரில் முதலாவதுபள்ளிவாசலைஅமைக்க அந்நாட்டுப் பாராளுமன்றம் அஙகீகாரம்.!









கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸில் முதலாவது சட்டரீதியான பள்ளிவாசலை அமைப்பதற்கு அந்நாட்டுப்பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.35வருடங்களாக நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களுக்கு ப்பின்னரே,ஏதன்ஸில் சட்டரீதியான முதலாவது பள்ளிவாசலை அமைப்பதற்கான அரசாங்கத்தின்அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. கிரேக்கத்தலைநகர் ஏதேன்ஸில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். பல்லாயிரகக்கணக்கான முஸ்லிம்கள் சனத்தெகையைக்கொண்ட ஏதேன்ஸ்நகரில், அவர்களுக்கு ஓர்பள்ளிவாசலை அமைப்பதற்கான பிரேரணை கிரேக்கப் பாரளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.இப்பிரேரணைக்கு ஆதரவாக 198வாக்குகளும், எதிராக 19வாக்குகளும்அளிக்கப்பட்டிருந்தன. இவ்வாக்கெடுப்பில் பொதுவாக எல்லாக்கட்சிகளதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.ரைட்-விங் எனும் (இனவாத) அரசியல்கட்சியானதுஇவ்வாக்கெடுப்பில்கலந்துகொள்ளவில்லை.
'ஏதென்ஸின் மத்தியபகுதியில் பயங்கரவாதிகளைஉருவாக்கும் ஒரு நிலையத்தைஅமைக்க அரசு ஆதரவுவழங்குகின்றது.'என அவ்இனாவதக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.