Friday, July 6

விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் அமைப்பதன் மூலம் ௭துவும் நடந்து விடாது:விஜயதாஸ

நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் பாலியல் வல்லுறவுகளில் காவியுடை தரித்தோரும் ஈடுபட்டு வருகின்றனர் ௭ன்பதுடன் பௌத்த குணவியல்புகள் மக்களிடத்தில் குறைந்துவருகின்றன ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்று பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற புத்த சிராவக பிக்குப் பல்கலைக்கழகம் திருத்தச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் . அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், புத்த பிக்குகள் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமக்கு அரசியல் ரீதியாக உதவுகின்ற இரண்டொரு தேரர்களை வைத்துக் கொண்டு மதங்கள் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொள்கிறது. இது தவறானதாகும்.
அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை பிரஜை ஒருவர் தனது உயர்கல்வியை ௭ங்கும் தொடர முடியும் ௭ன்பதற்கு இந்த பல்கலைக் கழகத்தை நிறுவுவதன் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பௌத்த தேரர்கள் விரிவுரையாளர்களாக இருக்க முடியும். அவர்கள் காவியுடை களைந்தால் அவர் பதவியும் பரிபோய்விடும். நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. பாலியல் வல்லுறவு சம்பவங்களில் பெரும்பாலும் ஆசிரியர்களும், காவியுடை அணிந்தோருமே ஈடுபடுகின்றனர். பாலியல் வல்லுறவுக்கு சிறுமியினரே அதிகளவில் உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறான நிலைமை தொடரக் கூடாது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பஜாஜ் மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டிகளின் விலை குறைப்பு

   



  பஜாஜ் நிறுவனமானது தனது மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகளை குறைத்துள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்றின் விலையை 10 வீதத்தாலும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விலை 5-14 வீதத்தாலும் குறைத்துள்ளது.

''சிறுவர் துஷ்பிரயோகம்'' கட்சிகளுடன் ஆலோசித்து மரண தண்டனை பற்றி இறுதி முடிவு



பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று இதுபற்றி தெரிவித்த அமைச்சர்; பாலியல் துஷ்பிரயோகம், போதை வஸ்து விவகாரங்கள் தொடர்பில் கடுமையான தண்டனைகளை வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மரண தண்டனையை மீள அமுல் படுத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், இது ஜனாதிபதியால் தனித்து எடுக்கக் கூடிய தீர்மானமல்ல.

நீர் பாவனைக் கட்டணங்களை அதிகரிக்க ஏற்பாடு

நீர் பாவனைக்கான கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படுமென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் தலைவர் கருணசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

மூன்று வருடங்களாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை நீர் பாவனைக் கட்டணங்களை அதிகரிக்கவில்லை. ஆனால் ஏனைய செலவீனங்கள் ரூபாவின் மதிப்பிறக்கம், மின்சாரத்திற்கான அதிக செலவீனம் ஆகியவற்றின் காரணமாக நீர் பாவனைக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்

Thursday, July 5

பௌத்த சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி: பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர்

Untitled-1

பௌத்த மக்கள் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
எனது சிறு பிராயத்தில் இலங்கையில் மொத்த சனத்தொகையில் 79 வீதம் பௌத்தர்கள், தற்போது அந்த எண்ணிக்கை 61 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அடுத்த சனத்தொகை மதிப்பீட்டில் இந்த எண்ணிக்கை 51 வீதமாக வீழ்ச்சியடையும்.
மதமாற்ற நடவடிக்கைகள் மிகவும் நுட்மான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பல திட்டமிட்டக் குழுக்கள் மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதமாற்றம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் வைபத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ளை பள்ளிவாசல் இடமாற்றம் செய்யப்படமாட்டது ஜனாதிபதி உறுதி


பிரதியமைச்சர்  ஹிஸ்புல்லாஹ் தகவல் : தம்புள்ளை பள்ளிவாசல் அப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் அனுமதி இல்லாமல் அவ் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் என்ற அமைப்பினரிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இயங்கிவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் என்ற அமைப்பின் அமைப்பின் (Sri Lanka Muslim Diaspora Initiative-UK) தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர் கள் கடந்த (01.07.2012) சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை அவரின் காரியாலய மஜ்லிஸில் சந்தித்தார்கள்.

பலஸ்தீன தலைவர் யாஸிர் அரபாத் விஷம் கொடுத்து கொலைச் செய்யப்பட்டார்..!


பலஸ்தீன் தலைவர் யாஸிர் அரபாத்தின் மரணம் கொடிய விஷம் உடலில் செலுத்தப்பட்டு நிகழ்ந்ததாக அல்ஜஸீராவின் புலனாய்வு அறிக்கை கூறுகிறது. ஒன்பது மாதங்களாக நீண்ட புலனாய்வின் இறுதியில் பலஸ்தீனின் புகழ்பெற்ற தலைவரான யாஸர் அரபாத்தின் மரணம் இயற்கையானது அல்ல என்ற உண்மையை அல்ஜஸீரா கண்டுபிடித்துள்ளது.

அரபாத்தின் மரணம் குறித்து அன்றே இத்தகைய சந்தேகங்கள் எழுந்தன. அதனை உறுதி செய்யும் வகையிலேயே அல்ஜஸீராவின் புலனாய்வு அறிக்கை அமைந்துள்ளது.

மதகுருமார் எம்.பியாவதை தடுக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களாக மதகுருமார் தெரிவாகுவதை தடுப்பதற்கான பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

மதகுருமார் தீவிர அரசியலில் ஈடுபடுவதை குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகுவதை தடுப்பதற்கான தனி நபர் பிரேரணையொன்றை ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில்  முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

யுத்தத்தில் சரணடைந்த புலிகளை கொன்றிருந்தால் இந்தநிலை வந்திருக்குமா?- கோத்தபாய ராஜபக்ச சீற்றம்


வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு விடுக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றியிருந்தால், இந்த நிலை வந்திருக்குமா என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ...
..மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவைக் கண்டித்துள்ளதாக ‘லங்கா நியூஸ்வெப்‘ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் வவுனியா சிறையில் சிறைக்கைதிகள், சிறை அதிகாரிகளை பணயமாக வைத்திருந்தமைக்கே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.