Saturday, March 30

பொது பல சேனாவின் கடிதத் தலையில் முஸ்லிம் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல்

கொழும்பு மருதனை பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிக் புக் ஹவுஸ், தெளஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாசல் உள்ளிட்ட சில முஸ்லிம் நிறுவனங்களை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் மூடுமாறு அச்சுறுத்தி குறித்த நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள குறித்த கடிதமானது பொது பல சேனாவின் கடிதத் தலையில் எழுதப்பட்டிருந்தது.

கடிதம் கிடைக்கப்பெற்ற குறித்த நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை மார்ச் 31 ஆம் திகதிக்குள் முடித்துக்கொள்ளவேண்டும் எனவும் இல்லாதபட்சத்தில் தமது பலத்தை கண்டுகொள்ள வேண்டிவரும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தாம் அவ்வாறான எந்தவொரு கடிதத்தினையும் எந்தவொரு நிறுவனத்துக்கும் அனுப்பவில்லை என பொது பல சேனா தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் பொலிசார் உடன் விசாரணை நடத்தி குறித்த கடிதத்தை அனுப்பியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும்  குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த அச்சுறுத்தல் கடிதங்களில்  இரண்டு விசாரணையின் பொருட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக முஸ்லிம் கவுன்சிலின்  முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

மொபிடெல் இணைப்புக்களை உடனடியாகத் துண்டியுங்கள் - முஸ்லிம்களிடம் அஸாத் சாலி


மொபிடெல் இணைப்புக்களை உடனடியாகத் துண்டியுங்கள்,
இனி அது எங்களுக்கு ஹராம்
முஸ்லிம் சமூகத்திடம் அஸாத் சாலி வேண்டுகோள்

மொபிடெல் நிறுவனம் பொது பல சேனாவுக்கு நேரடியாக நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.பொது பல சேனாவின் முஸ்லிம் விரோத எழுச்சி கீதத்தை தனது ரிங்டோன் பட்டியலில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பெருமளவு நிதியை அந்த அமைப்புக்குத் திரட்டிக் கொடுக்க மொபிடெல் நிறுவனம் முன்வந்துள்ளது.இந்த நாட்டில் முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி, முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் வர்த்தக நிலையங்கள் கல்வி நிலையங்கள் என எல்லாவற்றையும் குறிவைத்து அப்பட்டமாக சட்டத்தை மீறி அடாவடித்தனம் புரிந்து வருகின்ற ஒரு நாசகாரக் கும்பலே பொது பல சேனா. இவர்கள் தேவைக்கும் நிலைமைக்கும் ஏற்றவாறு சிங்கள ராவய, ராவணா சேனை, என்றெல்லாம் பல பெயர்களில் காடைத்தனம் புரிந்து வருகின்றனர். இதை விளங்கிக் கொள்ளாமல் விடுவதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல என்பதை நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.

நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடரியினால் கொத்த வேண்டியுள்ளது ; ஹக்கீம்


நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடரியினால் கொத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. பெளத்த சாசனத்தை பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு ஒரு குழுவினர் குரோதத்தையும், வெறுப்பையும் மக்கள் மத்தியில் வளர்க்கின்றனர் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி, ஜம்புகஸ்பிட்டியவில் மூனமலை போதிருக்காராமை விகாரையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறநெறிப் பாடசாலை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொணடு உரையாற்றியபோதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.


அமைச்சர் இங்கு மேலும் கூறுகையில்,

பெஷன் பக் மீது தாக்குதல்: நேரில் பார்த்தவர் விளக்கம்


2பொரலஸ்கமுவ பகுதியில் முஸ்லிம் உரிமையாளருக்குச் சொந்தமான ஃபெஷன் பக் துணிக்கடை மீது நடந்த தாக்குதலை நேரில் பார்த்தவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி. 
AUDIO

ஏப்ரல் 15ஆம் திகதி விசேட விடுமுறையாக அறிவிப்பு


ஏப்ரல் 15ஆம் திகதி விசேட விடுமுறைஏப்ரல் 15ஆம் திகதியை விசேட பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வருட தமிழ் சிங்கள சித்திரை புதுவருடம் 13 மற்றும் 14ஆம் திகதி விடுமுறை தினங்களில் வருகின்றது.

இதன் காரணமாக ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிக்கப்படுவதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் ஊடகவியலாளர்கள்தான் இனவாத SMS களை அனுப்புகிறார்களாம் !!


1 வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற தேசத் துரோகச் சக்திகளும் சில சர்வதேச செய்தி நிறுவனங்களுமே இலங்கையில் நடக்கின்ற வன்முறைகள் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் மீது சேறு பூசுவதாக அந்த அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கூறுகிறார்.அண்மைக் காலங்களாக இலங்கையில் நடந்துவருகின்ற வன்முறைச் சம்பவங்களுடன் தமது அமைப்பை தொடர்புபடுத்தும் முயற்சிகள் நடந்துவருவதாகவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
இதேவேளை, எந்தவொரு நாட்டிலும் வன்முறைகள் நடப்பது இயல்பு என்றும் இவ்வாறான வன்முறைகளுக்கு சிலர் இனவாத சாயம் பூசுவதாகவும் அவர் கூறினார்.அத்துடன், பௌத்த மத அமைப்புகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கோடு வேற்று மதத்தவர்கள் பௌத்த பிக்குகளைப் போல உடையணிந்து தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் ஞானசார தேரர் குற்றஞ்சாட்டினார்.

இனவாதத்தால் இலங்கையை அழிப்பதற்கு முயற்சி - சஜித்

நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்த ஐக்கியமே இலங்கைக்கு அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

யுத்தத்தை வெற்றி கொண்ட இலங்கையை இனவாதத்தினால் மீண்டும் அழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சஜித் குறிப்பிட்டார். 

இனவாதம் தொடர்பில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மறப்பதற்கு இவ் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

முஸம்மில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகிறார் :முஜிபுர் ரஹ்மான்

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்டித்தே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸம்மில் பேரினவாதிகளுடன் கைகோர்த்து அதனை தோற்கடிக்க பாரியளவில் முயற்சிகளை மேற்கொண்டார் என மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் யாரும் தட்டிக்கேற்பதற்கில்லை என அச்செயற்பாடுகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்போது அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு சார்பில் நாடுதழுவிய ஹர்த்தாலுக்காக கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்தோம். அதனை முறியடிக்க அரசு பல வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டது.

புது வருடத்துக்காக ஏப்ரல் 15ஐ பொது விடுமுறை தினமாக அறிவிக்க பரிசீலனை

ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருகின்றது.

இவ்வருட சித்திரை புதுவருட பிறப்பானது (13,14) விடுமுறை தினங்களில் வருவதினால் ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவிப்பது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் அன்னைக்கு 'வீர மாதா' விருது

சிங்கள, பெளத்தத்துக்காக தனது மகனை அர்ப்பணம் செய்ததையிட்டு  பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் அன்னைக்கு 'வீர மாதா' விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதானது நேற்றுமாலை எல்பிட்டிய நகரில் நடைபெற்ற பொது பல சேனாவின் பொதுக்கூட்டத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த தேரரின் தாயாரான டப்ளியூ.டீ. குனவதீ என்பவருக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருதினை பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான கசாகல சாரானந்த தேரர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

மத முரண்பாடுகள் ஏற்படக் கூடிய அபாயம் - இலங்கை மனித உரிமை ஆணைக்குழு


மத முரண்பாடுகள் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் சூழ்நிலைமைகள் அபாயகரமானவை என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரச அமைப்புக்கள் மௌனம் காத்து வருவதாகவும், இந்த நிலைமை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

பெஷன்பக் மீதான தாக்குதலுக்கு ‘ஞானசார தேரரே பொறுப்பு’ – அமைச்சர் ஹக்கீம்!

பெப்பிலியான – கொஹுவல வீதியில் அமைந்துள்ள பெஷன்பாக் நிறுவனத்தின் மீது நேற்று இரவு குண்டர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது

பொதுபல சேனா அமைப்பின் பௌத்த மத குரு ‘ஞானசார தேரரே இந்த முஸ்லிம் வர்த்தக நிலையம் மீதான தாக்குதலை மறைமுகமாக தூண்டியதாக இலங்கையின் நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை மக்கள் மீது ஒரு உதிரிக்கும்பல் இலக்கு வைத்து தாக்குவதற்கு அரசாங்கமே இடமளித்ததாக அமைந்துவிடும் என்றும் ரவூப் ஹக்கீம் கூறுகிறார்.

இதேவேளை, இலங்கையில் முஸ்லிம்கள் கௌரவமாக வாழ்வதற்கு தமது அமைச்சுப் பதவிகள்தான் தடையாக இருக்குமானால், அதனை துறக்க தாம் தயாராக இருப்பதாக இலங்கையின் மற்றுமொரு அமைச்சரான ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார். ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் - இந்தியாவில் எதிர்ப்பு போராட்டம்


இலங்கையில் ஆளும் அரசாங்கம் தமிழர்களைத் தொடர்ந்து முஸ்லீம்களை வேரறுக்க வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கெதிராக பள்ளிவாசல் இடிப்பு, ஹலால் முத்திரை நீக்குதல், முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை மறுக்கும் நோக்கில் ஹிஜாபை தடை செய்தல் பர்தா மற்றும் தொப்பி அணிந்து வரும் முஸ்லீம்களை அச்சுறுத்துதல் என பல்வேறு அச்சுறுத்தும் வேலைகளை செய்து வருகிறது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அரசு வேண்டுகோள்


sl logo நாட்டில்  இன விரோதத்தை ஏற்படுத்தி நாட்டின் இஸ்திர தன்மையை  சீர்குலைக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்படும் முயற்சி பற்றி அரசாங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வதந்திகளுக்கு பலியாகவேண்டாம்  என்றும்    அரச தகவல் திணைக்களம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் நாட்டில்  வெளிநாட்டு ,உள்ளநாட்டு   சில சக்திகள் நாட்டின் அமைதியை குழப்ப  சதி  முயற்சியில் ஈடுபட்டுள்ளன. என்றும்  இந்தச் சூழ்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் நன்மைக்கும் சமாதானத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் முனைப்புடன் செயற்படுவது அவர்களின் கடமையாகும் எனவும் தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரியல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் விரைவில் முறைப்பாடு : BBS


சிங்கப்பூருக்கான உயர்ஸ்தானிகர் பேரியல் அஷ்ரப் தொடர்பில் விரைவில் வெளிவிவகார அமைச்சில் முறையிடவுள்ளதாக பொது பலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

நேற்று சம்புத்தத்வ ஜயந்தியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையின் தூதுவராலயச் செயற்பாடுகள் பெரும்பாலும் பலவீனமாகவே உள்ளன. சிங்கப்பூரில் உயர்ஸ்தானிகராகவுள்ள பேரியல் அஷ்ரப் தமிழ், சிங்களப் புத்தாண்டை இலங்கையின் புத்தாண்டு என எவ்வாறு பிரகடனம் செய்ய முடியும்.

சவூதி அரேபியாவில் "புதிய தொழிலாளர் சட்டம்" இன்று முதல் அமல்!

Photo: சவூதி அரேபியாவில் "புதிய தொழிலாளர் சட்டம்" இன்று முதல் அமல்!   

சவூதி அரபியாவில் உள்நாட்டு மக்களுக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், புதிய சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

இந்த  சட்டத்தின்படி 10 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒருவர் (10:1)  சவூதி அரேபியாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறு மற்றும் சிறு தொழில் உள்ளிட்ட அனைத்து தொழிற்துறைகளிலும் 10 சதவீதம் அந்நாட்டு மக்களுக்கு ஒதுகீடு செய்ய வேண்டும்.

இந்த சட்டத்தால், அங்கு வேலை செய்யும் இந்தியர் உள்ளிட்ட 20 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக, கேரளாவிலிருந்து மட்டும் 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் சவூதியில் வேலை செய்து வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து, கேரளா மாநிலத்தின் முதல்வர் உம்மன் சாண்டி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'ஒரு நாட்டின் உள்நாட்டு கொள்கைகளில் நாம்  தலையிட முடியாது. இருந்த போதிலும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை சிறிது காலம் ஒத்தி வைத்தால், இந்தியர்களுக்கு உதவியாக இருக்கும், என தெரிவித்துள்ளார்.  

சவூதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று, மத்திய அரசிடம் ஆந்திர அரசும் கோரிக்கை வைத்துள்ளது.

சவூதி அரபியாவில் உள்நாட்டு மக்களுக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், புதிய சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி 10 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒருவர் (10:1) சவூதி அரேபியாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறு மற்றும் சிறு தொழில் உள்ளிட்ட அனைத்து தொழிற்துறைகளிலும் 10 சதவீதம் அந்நாட்டு மக்களுக்கு ஒதுகீடு செய்ய வேண்டும்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பொலிஸ் முயற்சி - றம்ழான்

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பொலிஸ் முயற்சி - றம்ழான் 
 
 
 
 
 
பெப்பிலியான நகர வர்த்தக நிலையம் மீதான தாக்குதல் ஒரு காதல் விவகாரத்தின் பின்னணியே என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பந்துல சிரிவர்தன கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமனானது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுபல சேனாவுக்கு துண்டுகோலாக கோட்டாபாய அமைந்துவிட்டார் - ஹக்கீம்


 அண்மையில் பொதுபல சேனா அமைப்பின் கட்டடம் ஒன்றை இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ திறந்து வைத்ததை கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் ஹக்கீம், அந்தக் கூட்டத்தில் அவரை கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று தான் முன்னதாகவே ஜனாதிபதியை கேட்டிருந்ததாகவும் கூறினார்.
அப்படி பாதுகாப்பு செயலர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதே, பொதுபல சேனா அமைப்பு இன்று அசுர தாண்டவம் ஆடுவதற்கு தூண்டுகோலாக அமைந்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இனவாதத்தை தூண்டும் சகல முயற்சிகளும் முறியடிக்கப்படும் - வாசுதேவ நாணயக்கார


vasudeva0இனவாதத்தை தூண்டும் சகல முயற்சிகளும் முறியடிக்கப்படும். சில கடும்போக்குடைய சக்திகள் நாட்டில் இன மற்றும் மத முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

புத்திஜீவிகள், மதத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனவாத கடும்போக்குடைய சக்திகளின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்படும். புத்திஜீவிகள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இன மத முரண்பாடுகளை தவிர்ப்பது தொடர்பில் விரைவில் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஷர்ரப் மீது பாதணி வீச்சு

பாகிஸ்தானிய முன்னாள் ஜனாதிபதி  முஷர்ரப் வெள்ளிக்கிழமை நீதிமன்றமொன்றுக்கு வந்த போது சட்டத்தரணியொருவர் அவர் மீது பாதணியை வீசி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

படுகொலை சதித்திட்டம் மற்றும் நீதிபதிகளை பணிநீக்கம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் தனக்கு வழங்கப்பட்ட பிணையை நீடிக்க கோரியே முஷர்ரப் சிந்து மாகாண உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன் போது சுமார் 20 சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவினர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்கள் சர்வாதிகாரி முஷர்ரப் தூக்கிலிடப்பட வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதன் போதே சட்டத்தரணிகளில் ஒருவர் முஷர்ரப்பை அவமதிக்கும்  வகையில் பாதணியை வீசியுள்ளார்.

Friday, March 29

பெஷன்பக் நிறுவனத்திற்கு மற்றுமொரு அச்சறுத்தல்..!

பெபிலியானவில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான Fashion Bug   நிறுவனத்திற்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து பௌத்தபிக்குகளும், காடையர்களும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கி படுகாயப்படுத்தினர். 
பௌத்த பிக்குகளால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதல் சம்பவங்கள் குறித்த நிறுவனத்தின் CCTV கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனையறிந்த பொலிஸார்,  Fashion Bug    நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு  CCTV இல் பதிவான வீடியோ காட்சிகளை எந்தவொரு ஊடகத்திற்கும் வழங்க வேண்டாமெனவும், இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாமெனவும் அச்சுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பௌத்த பிக்குகள் மிகவும் கீழ்த்தரமான முறையில் ஊழியர்களை தாக்கும் காட்சிகளும், சேதம்விளைவிக்கும் காட்சிகளும் மிகவும் தெளிவாகவே பதிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலுக்கும், கூரகலை விஹாரைக்கும் சமரச தீர்வு


பலாங்கொடை தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள நிலப்பரப்பில் பௌத்தர்களின் கூரகலை விஹாரை இருப்பதாகத் தெரிவிக்கப்படும் பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைப்பதற்கான உயர்மட்ட மகாநாடொன்று பாதுகாப்பு அமைச்சில் வியாழனன்று 28-03-2013 நடைபெற்றது.
பொதுபலசேனா தமது அடுத்த இலக்கு ஜெய்லானி எனவும் வெசாக் போயா தினத்தன்று அந்த இடத்திற்கு பல ஆயிரக்கணக்கானோருடன் அணி திரண்டு செல்வோம் என்று கூறியிருந்த பின்னணியிலே இப்பிரச்சினைக்கு சமரசமாகத் தீர்வு காணும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள், கூரகலை விஹாரை பௌத்த பிக்குகள், ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாகி மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இப்பிரச்சினையை சமரசமாகத் தீர்த்துவைப்பதற்கான பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதாக முஸ்லிம் கவுன்ஸிலின் செயலாளர் அஸ்கர்கான் தெரிவித்தார். அவை வருமாறு

அமைச்சரவையை அவசரமாகக் கூட்வும் - ஜனாதிபதியிடம் ஹக்கீம் வேண்டுகோள்


நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லை மீறிச் செல்வதையடுத்து நிலைமையை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்வது பற்றித் தீர்மானிப்பதற்காக அமைச்சரவையை அவசரமாகக் கூட்டுமாறு நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு புறநகர் பகுதியான பெப்பிலியானவில் வியாழக்கிழமை இரவு முஸ்லிம்களுக்குச் சொந்தமான பிரபல ஆடை நிறுவனமொன்றின் களஞ்சியசாலை தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதையடுத்து கண்டியிலிருந்து ஜனாதிபதியுடன் தொலைப்பேசியில் அவசரமாகத் தொடர்பு கொண்டு அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதன் போது, இந்தச் சம்பவத்தை தனிப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கையாக மட்டும் கருதாது இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரப்போக்குடைய இனவாத கும்பலினால் பல்வேறு வடிவங்களில் பாரதூரமான முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி வெளிநாடு சென்றுள்ள நிலையில் அமைச்சர்களான ரிசாத் பதியுத்தீன் ஏ. எல். அதாவுல்லாஹ் ஆகியோருடன் அமைச்சர் ஹக்கீம் இதுபற்றி தொலைப்பேசியில் கலந்தாலோசித்துள்ளார். நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் வன்முறை பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்வதற்கு கூட்டாக ஒத்துழைப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெஷன்பக் மீது தாக்குதல் - இருவர் கைது  பெப்பிலியானவில் உள்ள பெஷன்பக் வர்த்தக நிலையம் மீது குண்டர்கள் தரப்பினரால் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தின் போது மூன்று பேர் காயமடைந்தனர். 
இது தவிர, இந்த சம்பவம் தொடர்பான செய்திகளை சேகரிக்க சென்ற ஹிரு எப்.எம். இன் பிரதேச செய்தியாளர் குழப்ப நிலையானவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் காயமடைந்துள்ளார்.
இதேவேளை, பெப்பிலியான வர்த்தக கட்டடம் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெஷன் பக் தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் – ஹகீம்


rauf-hakeem

2013. 03. 28  இரவு பெபெளியான பெஷன் பக் சம்பவ இடத்திற்கு  அருகிலிருந்து நீதியமைச்சர் ஹகீம் அவர்களை நேரடியாக  தொடர்புகொண்டு விடயம் சம்பந்தமாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி வினவப்பட்டபோது ‘நிச்சயமாக அரசாங்கம் இதுவிடயமாக உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் நீதியமைச்சர் என்ற வகையில் தானும் இதுபற்றி உரியவர்களுக்கு எடுத்துகூறி சட்டத்தை கையிலெடுத்து வன்செயல்களில் ஈடுபட்ட   காடையர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்’ என்றும் தெரிவித்தார் .
கடந்த 2013.03.18 ந் திகதி கண்டி பொது பல சேனா பொது கூட்டத்தில் கல பட அத்தே ஞான சார தேரோ உரையாற்றும் போது ‘இந்த பேஷன் பக் கடைகளில் தான் சிங்கள யுவதிகளை வைத்து அந்தப்புரங்களை நடாத்துகிறார்கள் . இதில் தான் சிங்கள யுவதிகள் திட்டமிட்டு இஸ்லாத்திற்கு மதம் மாற்றுகிறார்கள் .நான் இவற்றை சொல்வதால் பேஷன் பக் கடைகளை கற்களால் அடித்து நொறுக்கி விட வேண்டாம்’ என்று சிலேடையாக பெஷன் பக் நிறுவனங்கள் தாக்கப்பட வேண்டும் என்று கருத்துரைத்த நிகழ்வை அமைச்சரிடம் எடுத்துகூறி இது விடயமாக அமைச்சர்  ஹக்கீமின் கருத்தை வினவியபோது இது விடயமாகவும் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு செயலாளர் வரவிருப்பதாகவும் விடயங்களை அவரின் நேரடி அவதானதிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாதாகவும் அங்குள்ளவர்களால் கூறப்பட்டாலும் சற்று நேரத்திற்கு பின்பு சம்பவ இடத்திற்கு சுமார் 5௦௦ மீட்டர் அருகிலுள்ள பௌத்த விகாரைக்கு  பாது காப்பு செயலாளர் வந்து சென்றுள்ளதாகவும் குறிப்பிட்ட பௌத்த விகாரையில் இருந்தே இத்தாக்கு தலுக்கு ஆள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்தவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது, எனினும் பாதுகாப்பு செயலாளரின் வருகையை உறுதிப்படுத்த முடியவில்லை.

தொழுகைக்கு சென்றவர் மீது ஆட்டோவில் வந்த பேரினவாதிகள் தாக்குதல்


racial_discriminationதிக்வல்லையில் மஃரிப் தொழுகைக்காக சென்ற நபர் ஒருவர் கடந்த புதன் (27) அன்று முச்சக்கர வண்டியில் வந்த இனவாதிகளால் தாக்கப்பட்டுள்ளனார்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, திக்வல்லையைச் சேர்ந்தவரும் தங்கல்லை பிரதேச செயலகத்தில் பணியாற்றுபவருமான எம்.இன்சாப் (47) என்பவர் வீட்டிலிருந்து மஃரிப் தொழுகைக்காக பள்ளிவாசல் நோக்கிச் சென்ற போது இலக்கத்தகடற்ற முச்சக்கர வண்டியில் வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் இவரைத் தாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளிவராத நிலையில், திக்வல்லை பொலிஸார் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குறித்த நபர் வீட்டில் சிகிச்சை பெற்றும் வருகிறார்.

பெப்பிலியான வர்த்தக நிலையம் தாக்கப்பட்டமைக்கு காரணம் காதலாம்! - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

பெப்பிலியான வர்த்தக நிலையம் தாக்கப்பட்டமைக்கு காரணம் காதலாம்!
தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே பெப்பிலியான நகர வர்த்தக நிலையம் தாக்கப்பட்டுள்ளனெத பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பந்துல சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

இளைஞர் மற்றும் சிறுமிக்கு இடையில் காணப்பட்ட காதல் உறவே தாக்குதலுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெப்பிலியான வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நேற்று (28) இரவு நுழைந்த குழுவினர் அங்கு தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனால் வர்த்தக நிலையத்திற்கு சேதம் ஏற்பட்டதோடு ஒருவர் காயமடைந்தார்.

இந்த மோதல் குறித்து விசேட பொலிஸ் குழு விசாரணை நடாத்தி வருகிறது.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து இதுவரையில் சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சேனாவும்,ராவயவும் நாட்டில் துவேசத்தை பரப்புகிறது ; றிசாத்


30 வருட யுத்தத்தால் சீரழிந்து சின்னா பின்னமான இலங்கைத் திரு நாடு யுத்தம் நிறைவு பெற்ற நிலையில் இன்று மீண்டும் அபிவிருத்திப் பாதையில் வீறு நடைபோட்டுக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாத சில தேச விரோத சக்திகள்
நாட்டில் கலவரத்தைத் தோற்றுவித்து இந்நாட்டை மீண்டும் அதல பாதாளத்துள் தள்ள பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள அச்ச சூழ் நிலை குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு அவர் கூறினார்.மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது -
இவர்கள் ‘பொது பல சேன’, ‘ சிங்கள ராவய’ என்று பல பல பெயர்களில் இயங்கிக் கொண்டு ஒரே இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டு தொடர்ச்சியாக முஸ்லிம்களின் உணர்வுகளை குத்திப் பார்க்கின்ற செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பெஷன் பக் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை - போலீசார்
பெபிலியான பிரதேசத்தில் நேற்று இரவு பெஷன் பக் ஆடையகத்தின் களஞ்சியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அங்கு இடம்பெற்ற குற்றச்செயல் ஒன்றே காரணம் எனக்கூறப்படுவதை குறித்த நிறுவனத்தினரும்  பொலிசாரும் மறுத்துள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் வேலை செய்யும் யுவதியொருவர் அங்கு வேலை செய்யும் ஒருவரால் பாலியல்  துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறியே நேற்று அந்நிறுவனத்தின் பெபிலியான களஞ்சியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
எனினும் அவ்வாறான எந்தவொரு துஷ்பிரயோக சம்பவமும் தமது நிறுவனத்தினுள் இடம்பெறவில்லை என குறித்த நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
அத்துடன் அவ்வாறான எந்த சம்பவமும் அங்கு நிகழவில்லை என்பதை நேற்றைய தினம் தாக்குதலின் போது ஸ்தலத்துக்கு சென்ற பொலிசார் உறுதிப்படுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில் நேற்றையதினம் குறித்த நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான பதிவுகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்களில் துல்லியமாக பதிவாகியுள்ளதாகவும் அதனை அடிப்படையாக வைத்து தற்போது பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
 
குறித்த தாக்குதலை  பெளத்த பிக்குகளின் தலைமையிலான குழுவினரே முன்னின்று நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

புத்தர் இந்தியாவில் பிறந்தாரா ? இலங்கையில் பிறந்தாரா ? தேரர்களுக்குள் கருத்து மோதல், விவாதத்துக்கு வருமாறு அழைப்பு


புத்த பெருமான் இந்தியாவில் பிறந்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், புத்தர் இலங்கையில் பிறந்ததற்குண்டான போதிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி, ரத்மலான தர்ம ஆய்வகப் பணிப்பாளர் ஹேகொட விபஸ்ஸி தேரர்,
தேசிய ஹெல உறுமய அமைப்பின் முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக்க தேரரை பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு சவால் விடுத்திருக்கிறார்.

தர்மசக்கரம் பொறித்த உள்ளாடைகளை விற்பனை செய்த வியாபாரிகள் பிணையில் விடுதலை


தர்மச் சக்கரம் பொறிக்கப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மகரகம அங்காடி முஸ்லிம் வியாபாரியும் அவருக்கு குறித்த ஆடைகளை வழங்கிய சிங்கள வர்த்தகரும் 1000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி போயா தினத்தன்று மேற்படி முஸ்லிம் வியாபாரி தமது விற்பனையில் ஈடுபட்டிருந்த போது அவ்விடத்திற்கு வந்த ஒரு சில பௌத்த தேரர்களும் மேலும் இருவரும் உள்ளாடைகள் சிலவற்றை தருமாறு கேட்டுள்ளனர். அதனை உன்னிப்பாக அவதானித்த அவர்கள் உள்ளாடையிலுள்ள இலாஸ்டிக்கில் தர்மசக்கரம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முஸ்லிம்கள் சிங்களவர்களைவிட இருமடங்கு அதிகரித்திருக்கிறார்கள் : சம்பிக்க


1981ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் குடிசன மதிப்பீட்டில் பௌத்த மக்களின் குடிசன வளர்ச்சி 37% வீதமாகும். ஆனால் முஸ்லிம்கள் இதனைவிட இருமடங்கு, அதாவது 78 வீதம்
வளர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அணுசக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறினார்.
கொழும்பு 07 இல் அமைந்துள்ள சவ்சிறிபாய பிரதான மண்டபத்தில் நடைபெற்ற பௌத்த கலாசார புனரமைப்பு குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

போர் முடிவடைந்து தற்போது மக்கள் சமாதானத்துடன் வாழ்கின்றனர் - முத்தையா முரளிதரன்

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ள IPL போட்டிகள் குறித்து இந்திய ஊடகமான NDTVயுடனான விசேட செவ்வியொன்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
இந்தியாவின் சில பகுதிகளில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகளில் எமது வீரர்களுக்கு அனுமதி கிடைக்காமை வேதனைக்குரிய விடயமாகும் என முரளிதரன் இதன்போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
'இலங்கை கிரிக்கெட் அணியில் 20 வருடங்கள் விளையாடியுள்ளேன். தமிழன் என்பதற்காக எந்தவொரு பிரச்சினையும் எனக்கு இருக்கவில்லை. கிரிக்கெட் சபை, அரசாங்கம் மற்றும் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். போர் முடிவடைந்து தற்போது மக்கள் சமாதானத்துடன் வாழ்கின்றனர். கடந்தகாலம் கடந்துவிட்டது. அவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் வரக்கூடாதென விரும்புகின்றோம்,' என்றார் முத்தையா முரளிதரன். 

கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகள் குறித்துதேசிய கிறிஸ்தவ புலமை அமைப்பு அதிருப்தி

கிறிஸ்தவர்களுக்கு எதிராக திடீரென்று மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து தேசிய கிறிஸ்தவ புலமை அமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.


அண்மைக்காலமாக இலங்கையில் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது பௌத்த அடிப்படைவாதிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறாக 2013 ம் ஆண்டில் மாத்திரம் 23 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பிழையான பொய்யான தகவல்களை ஊடகங்கள் பிரசாரம் செய்வதாக கிறிஸதவ அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் தாம் முறைப்பாடுகளை தெரிவித்துள்ள போதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தேசிய கிறிஸ்தவ புலமை அமைப்பின் செயலாளர் வணக்கத்துக்குரிய ரொஹான் ஏக்காநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

நேற்றிரவு பெபிலியானவிலுள்ள பெஷன் பக் ஆடை விற்பனை நிலைய களஞ்சியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை முதல் கொழும்பிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பிரபல வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை முதல் தமது நிறுவனம் முன்பாக பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக வர்த்தக நிலைய முகாமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அச்சமுற்று வர்த்தக நிலையங்களை மூட வேண்டாம் எனவும் தேவையான பாதுகாப்பை தாம் வழங்குவோம் எனவும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தம்மிடம் குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிடடார்.
 
இதேவேளை, பெபிலியான தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு அநியாயம் நடைபெறும்போது பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் - அமிர்தலிங்கம்

பொது பல சேனாவை அரசு தடைசெய்யாவிடின் இன்னும் பல சேனாக்கள் உருவாகும் எனவும் தெரிவிப்பு


‘முஸ்லிம்களுக்கு அநியாயம் நடைபெறும் போது நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இன்று முஸ்லிம்களின் உணவு, உடை போன்றவைகளை பிரச்சினையாக்கி உள்ள பொதுபலசேனா நாளை முஸ்லிம்களை உள ரீதியான பிரச்சினைக்கும் உட்படுத்தலாம். என கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

ஹர்த்தால் நடவடிக்கை;முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுயநல தேவையே - முஸம்மில்

ஹர்த்தால் நடவடிக்கை முஸ்லிம் மக்களின் தேவையல்ல, குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுயநல தேவையே ஆகும். இவ்வாறான இனவாதத்தை சமூகத்தில் விதைக்க வேண்டாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸம்மில் தெரிவித்தார்.

பொலிஸார் தலையிட்டமையினாலேயே முஸ்லிம்களின் ஹர்த்தால் நடவடிக்கை வெற்றியடையவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றமை வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் மக்கள் விரும்பாத ஒரு போராட்டத்தை முன்னெடுத்து அது வெற்றியடையாத நிலையில் ஏனையோரை குற்றம் சுமத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

Fashion Bug : இனவாதத்தின் அடுத்த கட்டம் ஆரம்பம் !


இனவாதத்தின் அடுத்த கட்டத்தை திட்டமிட்டே ஆரம்பித்திருக்கிறது பெளத்த பேரினவாதம்.
இதன் முதற்படியாக தி்ட்டமிட்ட ரீதியில் சுமார் 700 க்கும் அதிகமான சிங்கள இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்கியிருந்ததோடு நாட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகித்து வரும் நாகரீக ஆடை நிறுவனமான பெஷன் பக் நிறுவனத்தின் பெபிலியான கிளை மீது நேற்றிரவு இலங்கை நேரம் சுமார் 8 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பெஷன் பக் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி


Mahinda-Rishadபெஷன் பக் தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பெஷன் பக் களங்சியசாலை குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தை உடனடியாக ஜனாதிபதியுடனும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொலிஸ்மா அதிபருடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளபேதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெஷன் பக் மீதான தாக்குதலை தெட்டத்தெளிவான வன்முறையென சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்ளை கண்டுபிடித்து உடனடியாக சட்டத்தின் முன் கொண்டுவருமாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறான சம்பவங்களை தொடருமாயின் இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் ஆதரவை இழக்கவேண்டி வருமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி, இந்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்துள்ளதுடன், இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Thursday, March 28

விகாரையில் மணி அணித்து மக்களை ஒன்றுகூட்டி பெசன்பெக்கை தாக்கினார்கள்


பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள ‘பெஷன் பக்’ (Fashion Bug) ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இன்றிரவு 8 மணியளவில் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கற்களை வீசியும் வேறு ஆயுதங்களாலும் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இத் தாக்குதல் நீடித்ததாகவும் சுமார் 100 பேர் கொண்ட குண்டர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக அறியமுடிகின்றது.
இதன் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தின் கட்டிடத்திற்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையம் தாக்கப்படுவதற்கு முன்னர் அதற்கு முன்னுள்ள விகாரையில் மணி அணித்து மக்களை ஒன்றுகூட்டி பெசன்பெக்கை தாக்கினார்கள் என அறியவருகிறது.

பொதுபல சேனாவுக்கு விடையளிக்கும் முஸ்லிம்களின் நிகழ்வு நிறுத்தப்பட்டது

அக்குரணையில்  ஒரு அமைப்பினர்  கடந்த 26-03-2013 அன்று 90.1 எப். எம் வரிசையில் கேட்கத் தவறாதீர்கள் பொது பல சேனாவுக்கு மறுப்பு- வரிக்கு வரி பதில் -என்ற வாசகத்துடன் அதில் வாள் சின்னத்தையும்  போட்டு அக்குரணையில் எட்டாம் கட்டையில் சுரொட்டியொட்டிகள் பல ஒட்டப்பட்டிருந்தன. இதனைக் கண்ட அப்பிரதேச சிங்கள மக்கள்  பௌத்த தேரர்களுக்கு அறிவித்தல்  விடுத்ததை அடுத்து பௌத்த தேதரர்கள் உடன் அலவத்தக் கொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வு பொலிஸாரின்  தலையிட்டினால்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன் அக்குரணை ஜம்மியதுல் உலமா சபைக்கு கிடைத்த தகவலை அடுத்து குறிப்பிட்ட அமைப்புக்கு தற்போது இதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட போதும் அவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு  வர வில்லை. அவர்கள் திட்டமிட்டடி  அந்த நிகழ்வை ஆரம்பித்த போது அலவத்துக் கொடை பொலிஸாரின்  தலையீட்டியினால்  தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.  பொலிஸார்  அவர்களை  வரவழைத்து விசாரணை மேற் கொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சவூதியில் இந்திய, இலங்கையர் வேலை இழக்கும் அபாயம்

சவூதி அரேபியா அரசின் புதிய கொள்கையால் அங்கு பணிபுரியும் இந்தியர்கள் மற்றும் இலங்கையர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளமானவற்றில் இந்தியர்கள் மற்றும் இலங்கையர் அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.

எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களைப் பார்த்து சவூதியில் உள்ள வேலையில்லா இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப் படவேண்டும்: மங்கள


mangala_28கொழும்பு செய்தியாளர் : நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப் படவேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு பட்ட வடிவில் துன்புறுத்தல்கள்  அரச ஆதரவுடன் தீவிரவா குழுக்களினால் மேற்கொள்ளப் படுகிறது .  என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார் . கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரவித்துள்ளார் .
மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் , தீவிரவாத அமைப்புக்களை போஷித்து வளர்க்கும் அரசாங்கம் நாட்டில் இன்னொரு பயங்கரவாத அமைப்பை உருவாக்குவதற்கு வழிசமைக்கின்றது . நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப் படவேண்டும். அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்கள் அங்குள்ள தீவிரவாத குழுக்களினால் துன்புறுத்தல்களுக்கு ஆளாவார்கள்.
. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர். நாட்டில் 65 வழிபாட்டு இடங்கள் பல்வேறு தீவிரவாத அமைப்புக்களால் அழிக்கப் பட்டுள்ளது .இதேவேளை, இலங்கையில் நான்கு பிரதான மதங்களை தவிர வேறு மதங்கள் இருக்கக் கூடாதென அரசாங்கத்தினால் சட்டமொன்று உருவாக்கப்படவுள்ளது. இது எவ்வாறு முடியும்? நான் தென்னை மரத்தை வணக்கவும் எனக்கு உரிமை இருக்கிறது அதேபோன்று  எவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமையும் சுதந்திரமும் உள்ளதுஎன்றும் தெரிவித்துள்ளார் .

பெபிலியான பெஷன் பக் மீது தாக்குதல்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இன்றிரவு 8 மணியளவில் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களை வீசியும் வேறு ஆயுதங்களாலும் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இத் தாக்குதல் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
சுமார் 100 பேர் கொண்ட குண்டர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தின் கட்டிடத்திற்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
பொலிசார் தற்போது நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாம் அஸாத் சாலியை கைதுசெய்ய முயற்ச்சிக்கவில்லை : குற்றப்புலனாய்வுப் பிரிவு

(
முன்னாள் கொழும்பு மேயர் அஸாத் சாலியை தாம் தேடவில்லை என குற்ற புலனாய்வு பிரிவினர் கொழும்பு பிரதான நீதவானிடம் இன்று தெரிவித்தனர்.

தேசிய ஐக்கிய முன்னணயின் பொது செயலாளர் அஸாத் சாலி தாக்கல் செய்திருந்த முன் பிணை பற்றிய விசாரணையின்போதே கொழும்ப குற்ற புலனாய்வு பொறுப்பதிகாரி ஹெமிந்த திக்கோவித இவ்வாறு கூறினார்.

தெவட்டஹக ஜும்மா பள்ளிவாசல் வளவலில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மௌலவி ஹஸன் மௌலானா செய்த முறைப்பாடு தொடர்பில் தாம் விசாரணை நடத்துவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பாக அசாத் சாலியை கைது செய்யும் நோக்கம் தமக்கு இல்லையெனவும் இருப்பினும் கொழும்பு குற்ற புலானாய்வு பிரிவு அசாத் சாலியிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸார் இக்கைது நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை எனும் உறுதி மொழியை வழங்கினால் இந்த முன்பிணை மனுவை வாபஸ் பெறுவதாக அஸாத் சாலியின் வழக்குரைஞர் இதன்போது கூறினார்.

இருப்பினும் அஸாத் சாலி கைது செய்யப்படுமிடத்து அவரை இரண்டு சரீரப் பிணைகளுடன் ஒரு மில்லியன் ரூபா பிணையில் விடும்படி நீதவான் பணித்தார்.


இன பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை யெடுக்க வேண்டும் - வாசுதேவ

Vasudeva Nanayakkaraஇனங்களுக்கிடையே பிளவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய ஐக்கியத்திற்கான புத்திஜீவிகளின் உரையாடல் நிகழ்ச்சி தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சில் நேற்று நடைபெற்றது.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ‘எந்தவொரு அமைப்பையும் தடை செய்யும் கருத்து இங்கு யாராலும் முன்வைக்கப்படவில்லை. அனைத்து அமைப்புக்களுக்கும் தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை இருக்கின்ற போதிலும் இன குழுவொன்று மற்றொரு இன குழு மீது குரோதம் கொண்டு இன பாகுபாடு ஏற்படும் விதத்தில் செயற்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகின்றது,’  என தெரிவித்துள்ளார்.

போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளிக் கிளம்பியுள்ளது: ஹக்கீம்

hakeemஅமைச்சரின் ஊடக செயலாளர்: முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நிந்தவூரில் வார இறுதியில் நடைபெற்ற ஒன்றுகூடலொன்றின் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர். அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார்.

ஆசாத் சாலி, முஜிபூர் ரஹ்மான் காட்போட் வீரர்கள் – ஜாதிக ஹெல உறுமய

5சிங்கள பௌத்த மக்களுக்கான நன்றியை மறக்க வேண்டாம் என முஸ்லிம் சகோதர்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த சிறீவர்ணசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு நடப்பதாக கூறும் பொய்யான இடையூறுகளை கண்டிப்பதற்காக மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தலைமையிலான முஸ்லிம் ஒத்துழைப்புக்கான அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கடையடைப்புக்கு பெருபான்மையான முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்பது தெரிகிறது.

அசாத் சாலிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது

 
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி இன்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
இன்று காலை சட்டத்தரணிகள் சகிதம் அசாத் சாலி நீதிமன்றில் ஆஜரானார். அசாத் சாலி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரை 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.
 
இதனையடுத்து சுமார் ஒரு வாரங்களுக்குப் பின்னர் அசாத் சாலி மீண்டும் இன்று தனது அலுவலகத்திற்குத் திரும்பி கடமைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதிக்கான புதிய தூதுவர் வீ.கிருஷ்ணமூர்த்தி கடமைகளை பொறுப்பேற்கிறார்சவூதி அரேபியாவிற்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட வீ.கிருஷ்ணமூர்த்தி அடுத்த மாத நடுப்பகுதியில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

சிரேஷ்ட இராஜதந்திரியான வீ.கிருஷ்ணமூர்த்தியின் பெயர் சவூதி அரேபியாவிற்கான புதிய தூதுவராக கடந்த மாதம் முன்மொழியப்பட்டது.

எவ்வாறாயினும் தற்போது இவரின் நியமனம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பிலான நியமன கடிதமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்தவ அடிப்டைவாத பாஸ்டர்மார் சபைகள் தொடர்பிலான தகவல்களை வழங்கவும் : பொதுபல சேனா!

சிங்கள பௌத்தர்களை மதமாற்றம் செய்யும் சிறுவர் காப்பகங்கள் என்ற பெயரில் மிருகக் கொலைக்களங்களை நடத்தும் நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவ அடிப்படைவாத ‘பாஸ்டர்” மார் சபைகள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொதுபல சேனா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.