Thursday, May 31

எகிப்து ஜனாதிபதி தேர்தல்- உத்தியோகபூர்வ முடிவுகள்

 

புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ அறிவிப்பை அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான எப்.ஜே.பியின் வேட்பாளர் டாக்டர்.முஹம்மது முர்ஸி முதலிடத்தையும், முபாரக் ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷபீக் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன் மூலம் 2-வது கட்ட ஜனாதிபதி தேர்தலில் இருவரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

மீண்டும் எரிபொருள் விலையேற்றக் கோரிக்கை விடுத்த ஐ.ஓ.சி. நிறுவனம்!

இந்திய எரிபொருள் நிறுவனமான ஐ.ஓ.சி. மீண்டும் எரிபொருள் விலையேற்றம் தொடர்பான கோரிக்கைளை இலங்கை அதிகாரிகளிடம் விடுத்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக தாம் இந்த விலையுயர்வு குறித்த கோரிக்கையை விடுத்துவருவதாக ஐஓசி தெரிவித்துள்ளது.

தெஹிவளை தாருர் ரஹ்மான் மஸ்ஜித் மற்றும் மதரஸா வழமை போன்றே இயங்கிவருகிறது


  தாருர் ரஹ்மானில் ஜமாஅதுத்டனான ஐந்துவேலை தொழுகை மற்றும் சிறுவர் மதரஸா ஆகியன இன்றுவரை வழமை போன்று இயங்குவதாக ஷபாஹ் நிறுவத்தின் பணிப்பாளரும் , அகில இலங்கை ஜம்இயத்துள் உலமாவின் துணை செயலாளருமான தாசீம் மௌலவி தெரிவித்தார்.
கடந்த வெள்ளிகிழமை பெளத்த தீவிரவாத தேரர்கள் தலைமையில் தாருர் ரஹ்மான் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் அது மாடுகளை பலியிடும் மடுவமாக இயங்குவதாகவும் குறித்த மஸ்ஜிதை அகற்ற வேண்டும் என்றும் ஆர்பாட்டம் மேற்கொள்ளபட்டது. இதபோது மஸ்ஜித் மீது சில கல் வீச்சும் இடம்பெற்றது.

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை கையாள விசேட அணி தயாராகிறது !


இன்று முஸ்லிகள் பரவலாக பெளத்த மதத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த அச்சுறுத்தல்களை கையாள்வதற்கு அகில இலங்கை ஜம்இயத்துள் உலமா விசேட அணியொன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அதன் துணைச் செயலாளர் தாசீம் மௌலவி  இன்றுதெரிவித்தார்.

பஸ் கட்டணத்தை குறைக்க நாங்கள் தயார்: டீசல் விலையை குறைக்க அரசு தயாரா?

பஸ் கட்டணத்தை குறைக்க நாங்கள் தயார்: டீசல் விலையை குறைக்க அரசு தயாரா?

 

May 31, 2012 11:56 am
 
உலக சந்தையில் டீசல் விலை குறைந்துள்ளதாலும் மசகெண்ணையின் விலை குறைந்து செல்வதாலும் பஸ் கட்டண மாற்றத்திற்கு செல்ல முடியும் என அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளதால் டீசல் விலையை குறைக்க அரசாங்கத்தால் முடியும் எனவும் அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அங்ஞன பிரியங்ஜித் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு டீசல் விலை குறைக்கப்பட்டால் தேசிய பஸ் கட்டண கொள்கைக்கு அமைய பஸ் கட்டணத்தை குறைக்க தாம் தயார் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்ஞன பிரியங்ஜித் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையும் ஈரானும் விசா இன்றிய பயணத்துக்கு விரைவில் ஒப்பந்தம்

 
[ வியாழக்கிழமை, 31 மே 2012, 07:02.21 AM GMT ]
இலங்கை மற்றும் ஈரானிய சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பரஸ்பரம் பயணிக்க வழி செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கையும் ஈரானும் வெகு விரைவில் கைச்சாத்திடவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நியோமல் பெரோரா தெரிவித்துள்ளார்.

Thursday, May 10

முருங்கனில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற கோரி வழக்கு தாக்கல்!

 
[ வியாழக்கிழமை, 10 மே 2012, 08:39.30 AM GMT ] [ உதயன் ]
மன்னார் மாவட்டம் முருங்கன் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றக்கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் தர்மகர்த்தா சபையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய தர்மகர்த்தா சபையின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இரட்டைக் குளம் கிராம அலுவலர் பிரிவில் முருங்கன் நகர் புகையிரத நிலையத்துக்கு முன்பாக இந்த ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 1942 ஆம் ஆண்டு 99 வருட குத்தகை அடிப்படையில் தனியார் காணி ஒன்று இந்த ஆலயத்துக்கு வழங்கப்பட்டது.
கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்தப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். நீண்ட காலத்தின் பின்னர் அந்தப் பகுதியில் மீளக்குடியமர்வதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தொடக்கம் பௌத்த பிக்கு ஒருவர் ஆலயத்துக்குச் சொந்தமான காணியில் அடாத்தாக தங்கியிருந்து அந்தப் பகுதியைப் பௌத்த புனித பிரதேசமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன் ஆலயத்துக்குரிய 40 பேர்ச் காணியில் இரண்டு இடங்களில் புத்தர் சிலைகளை பிக்கு நிறுவியுள்ளார். அவற்றில் ஒன்று ஆலயத்துக்கு மிக அருகில் 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் "புராதனமான விகாரை' என்ற பெயர்ப் பலகை ஒன்றும் அங்கு நடப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் அம்மனுக்குப் பூசை வழிபாடுகள் தடைப்பட்ட நிலையில் பௌத்த பிக்கு ஒருவர் ஆலய வளாகத்தில் தங்கி இருந்து புத்தர் சிலைகளை அமைத்து அங்கு பௌத்த விகாரை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வருட ஆரம்பத்தில் புத்தர் சிலை விடயம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தர்மகர்த்தா சபையால் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டை ஏற்றுக் கொள்வதற்கு ஆரம்பத்தில் பொலிஸார் மறுப்புத் தெரிவித்து வந்த போதிலும் பல்வேறு உயர் அதிகாரிகளுடன் தர்மகர்த்தா சபையினர் தொடர்பு கொண்டு அழுத்தங்களைக் கொடுத்த நிலையிலேயே பின்னர் முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிய வருகிறது.
அதன் பின்னரும் அங்கு புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள புத்தர் சிலையை அகற்றக் கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தர்மகர்த்தா சபையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.

பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ரணில் தலைமையில் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!


பாண், சமையல் எரிவாயு, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதில் ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மாநகர மேயர் முஸம்மில் உள்ளிட்ட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பொருட்கள் சுங்க அதிகாரிகள் வசம்

 
 
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பொருட்கள் சுங்க அதிகாரிகள் வசம்வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் சிலவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சுங்கத் திணைக்கள விசேட தேடுதல் பிரிவு நடத்திய சோதனை நடவடிக்கையில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சனத் பெனாண்டோ தெரிவித்தார்.

தாய்லாந்து, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து குறித்த பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனுள் சிகரெட், பீடி, புகையிலை, கஜு உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்ல அனுமதி

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்ல அனுமதி

 

Bookmark and Share
இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்ல முடியும் என சுற்றாடல்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று (10) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்: மேர்வின் சில்வாவின் மகன் மாலக


தற்போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் தான் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் இருப்பினும் பொதுமக்களிடமிருந்து வேண்டுகோள் ஏதும் விடுக்கப்படுமானால் அதனைத் தான் கவனத்திற்கொள்வேன் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா தெரிவித்துள்ளார்.

'சமூக சேவைகளிலும் வர்த்தக நடவடிக்கைகளிலும்; தீவிரமாக ஈடுபட்டுள்ள நான் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை' என அவர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

Wednesday, May 9

இலங்கையில் நிலவுவது பௌத்த சித்தாந்தத்துக்கு எதிரான ஆட்சி முறையாம். குணதாச


'பௌத்த பண்பாட்டில் சமத்துவம், சீர்மை, பொது நலம் போன்றவைகள் பற்றி குறிப்பிடப்படுகின்றன எனவும் இந்த விழுமியங்களைப் படிப்பினையாகக் கொண்டே பௌத்த அரசர்கள் அரசாங்கத்தை நடாத்திச் சென்றனர் சென்றனர் எனக்குறிப்பிடும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச தற்போது முற்று முழுதாக இவற்றுக்கு விரோதமான அரசியல் முறைதான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை காப்பாற்ற அரசியலில் நுழையப்போறாராம் கடத்தல் மன்னன் கே.பி

தமிழ் அரசியல் தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகள் மற்றும் அழுகிப் போன அரசியல் சித்தாந்தங்களால் அப்பாவித் தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதைத் தொடர்ந்தால் தான் அரசியலில் நுழைவது பற்றியும் பரிசீலனை பண்ணலாம் எனத் தெரிவித்துள்ளார் புலிப்பயங்கரவாதிகளுக்கான ஆயுதக்கடத்தல் மன்னன் குமரன் பத்மநாதன்.

"சுடர்ஒளி பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக அமெரிக்காவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசும் நோர்வேயில் இருக்கும் நெடியவனும் புகலிடத் தமிழர்களைத் தொடர்ந்தும் தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பதோடு இந்தத் தீவில் வாழும் தமிழர்களுக்கும் பல விதமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்..

பேட்டியின் முழுவடிவம் வருமாறு

வெகு விரைவில் ஜனாதிபதியின் முடிவு அறிவிக்கப்படுமாம்

எமது மாத்தளை செய்தியாளர்: தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் விவகாரம் தொடர்பில் வெகு விரைவில் ஜனாதிபதியின் முடிவு அறிவிக்கப்படும் என்று மாத்தளை நகர மேயர் ஹில்மி கரீம் தெரிவிதார். கடந்த வாரம் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற மாத்தளை மேயர் ஹில்மி யுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் தொடர்பில் மேயர் ஹில்மி கரீம் விளக்கமளிக்கையில் கூறியதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் கண்டியில் தங்கி இருந்தபோது தம்புள்ளை பள்ளி விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

57 ஆயிரம் சிகரட்டுகளைக் கடத்திய முஸ்லிம் பெண் கைது!

சவூதிஅரேபியாவிலிருந்து இன்று காலை 11 மணியளவில் வந்த விமானத்தில் 57 ஆயிரம் சிகரட்டுகளைக் கடத்தி வந்த முஸ்லிம் பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பாணந்துறையைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். துருக்கியில் தயாரிக்கப்பட்ட ரூபா 30 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகளையே குறித்த பெண் கடத்தி வந்துள்ளார்.

Tuesday, May 8

களுத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)


களுத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் இன்று திங்கட்கிழமை, மே, 7 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டதிற்கு பௌத்த பாதுகாப்பு அமைப்பு மற்றும் தேசப்பற்று மிக்க பௌத்த சக்தி என்று குறிப்பிட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் வழமையாக கலந்து கொள்ளும் குறித்த பெளத்த தேரர்களே கலந்து கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

ரீ.என்.எல். தொலைக்காட்சியில் இன்று செவ்வாய்கிழமை தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம்


ரீ.என்.எல். தொலைக்காட்சியில் இன்று செவ்வாய்கிழமை, 8 ஆம் திகதி, இரவு 9.30 மணிக்கு தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் குறித்து ஆராயப்படவுள்ளது.


இந்நிகழ்வில் கடும்போக்கு பௌத்த குருமார், தாராளப் போக்குடைய பௌத்த குருமார், கொழும்பு பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பலஸ்தீனுக்கு ஒரு முகம் இஸ்ரேலுக்கு இன்னொரு முகம் :முஸ்லிம்களை அரசாங்கம் ஏமாற்றுகிறது


 பலஸ்தீனத்திற்கு ஒரு முகத்தையும் இஸ்ரேலுக்கு இன்னொரு முகத்தையும் காட்டும் அரசாங்கம் முஸ்லிம்களை ஏமாற்றுவதாக மேல் மாகாண சபை ஐ.தே. கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில்,
பலஸ்தீன மக்களின் உரிமைகளை மதிப்பதாக கூறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். ஆனால் மறுபுறம் காட்டு மிராண்டித்தனமாக இஸ்ரேலியர்களுக்கு தேசிய தினத்தை கொண்டாடுவதற்கு இலங்கையில் வசதிகளை செய்து கொடுத்துள்ளதோடு, தூதரகமொன்றை கொழும்பில் ஆரம்பிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ, சனத் ஜயசூரிய உள்ளிட்டவர்களுக்கு பிரதியமைச்சர் பதவி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த சில வாரங்களில் பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக ஆளும் கட்சித் தகவல் தெரிவிக்கின்றது.
 

முச்சக்கரவண்டி பயணத்தில் புதிய கட்டுப்பாடு: பின் இருக்கையில் 3 பேர் மாத்திரம்

 
 
முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாரதிக்கு பின் ஆசனத்தில் கட்டாயமாக மூவர் மாத்திரமே பயணிக்க முடியும் என காவல்துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த விபத்துக்களை கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நேற்றைய தினம் வரை இடம்பெற்ற 27 முச்சக்கர வண்டி விபத்துக்களில் 34 பேர் பலியாகியுள்ளனர்.

ஆறு இலட்சத்து 70 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் தற்போது இலங்கையில் பதிவு செய்யப்பட்டு செயற்பாட்டில் உள்ளன. இதேவேளை. மீட்டர்கள் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் இந்த பின்புற ஆசனத்தில் 3 பயணிங்கள் கட்டுப்பாட்டை வரவேற்றுள்ளனர்.

Monday, May 7

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி

 


இலங்கைக்கான இஸ்ரேல் தூதரகம் 20 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கொழும்பில் இயங்குவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலி தெரிவித்துள்ள தகவலில்.

ஜேர்மனியில் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகவே புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது

islamic partyஜேர்மனியில் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக வேண்டி தீவிர வலதுசாரி சிந்தனையுடன் கூடிய Pro NRW என்ற கட்சி உதயமாகியுள்ளது. அதன் முதல் பிரச்சாரத்திலேயே முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தையும், வெறுப்பையும் தோன்றும் வகையிலேயே ஆரம்பித்துள்ளது.
2005 ஆம் ஆண்டில் டென்மார்க்கை சேர்ந்த ஓவியர் குந்த் வெஸ்டர்கார்டு என்பவர், முகம்மத் நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரமாக வரைந்ததற்காக, தற்போது இக்கட்சி அவரது பெயரால் ஓர் பரிசை அறிவித்துள்ளது. சிறந்த முஸ்லிம் கேலிச்சித்திரத்திற்கு இப்பரிசு வழங்கப்படும் என்று Pro NRW கட்சி அறிவித்துள்ளது.
இதற்கும், தனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும், தன்பெயரை அநாவசியமாகப் பயன்படுத்துவதால் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் வெஸ்டர்கார்டு தெரிவித்துள்ளார்.

ஈரான் பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி நஜாதின் ஆதரவாளர்களுக்கு பின்னடைவு

ஈரான் பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ஜனாதிபதி அஹ்மத் நஜாதின் ஆதரவாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

65 இடங்களுக்கு நடந்த தேர்தலில் நஜாதின் முக்கிய எதிராளியும், பாராளுமன்ற சபாநாயகருமான அலி லாரிஜானி தலைமை வகிக்கும் பழமைவாத கட்சி 41 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளதாக ஈரான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நஜாத் ஆதரவாளர்களுக்கு 13 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 11 இடங்களில் சுயேட்சைகள் வென்றுள்ளனர்.

தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி பேட்டியின் தமிழ் வடிவம்

M.ரிஸ்னி முஹம்மட்: தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ சுமங்கள தேரரை சண்டே லீடர் ஊடகவியலாளர் நிரஞ்சலா ஆரியவன்ஷா சந்தித்து பேட்டி கண்டுள்ளார் . அதிகார தோரணையில் அந்த பெண் ஊடகவியலாளரையும் மிரட்டியுள்ள தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி. தனது 65 ஆண்டுகால மஸ்ஜிதுக்கு எதிரான வன்முறைகளையும் நியாயப்படுத்தியுள்ளார். அவர் வழங்கியுள்ள பேட்டியின் முக்கிய பகுதிகளை தமிழில் உங்களுக்கு வழங்குகிறோம் : இன்றைய சண்டே லீடர்:

பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவுக்கு 2012/2013 கல்வியாண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம்

-அஜ்வாத் பாஸி-
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 2012/2013 கல்வியாண்டிற்காக புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் பின்வருவோர் சித்தியடைந்து நளீமியாவில் புதிதாக கல்வியைத் தொடர சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விபரம் வருமாறு,

நாய் கழிவில் இருந்து மின்சாரம் - உலகம் எங்கே செல்கிறது..?நாய் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்தவர் கேரி டௌனி (41). மரபு சாரா எரிசக்தி உற்பத்தி பற்றி பல வகைகளில் யோசித்து நாய் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவெடுத்துள்ளார் கேரி.இதற்காக நார்த்வேல்ஸ் ஃப்ளின்ட்ஷயர் பகுதியில் பிரத்யேக நாய் கழிவு சேகரிப்பு நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளார். அனரோபிக் டைஜஷன் முறையில் நாய் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளதாக கேரி குழுவினர் தெரிவித்துள்ளனர். முதல் முயற்சியாக இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தெரு விளக்குகள் எரிய பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


முஸ்லிம் விரோதி நிக்கொலஸ் சர்கோசி மண் கவ்வினார் - பிரான்சொஸ் கொலண்டே ஜனாதிபதி


பிரான்ஸ் அதிபராக இடதுசாரி சோசலிசக்கட்சியை சேர்ந்த பிரான்சொஸ் கொலண்டே தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபராக இருந்த நிக்கொலஸ் சார்க்கோசி தோல்வி அடைந்துள்ளார். பிரான்சொஸ் கொலண்டே 52வீத வாக்குகளையும், வலது கட்சியை சேர்ந்த சார்க்கோசி 48வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.நிக்கொலஸ் சார்க்கோசி ஜனாதிபதியாக இருந்தவேளை முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கு எதிரான கருத்'துக்களை பகிரங்கமாக கூறிவந்தமையும், இவரின் ஆட்சிக் காலத்திலேயே பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் சகோதரிகள் அணியும் பர்தாவுக்கு தடை கொண்டு வரப்பட்டமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

பெண்ணை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு கைது


பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு ஒருவரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைபாட்டை அடுத்த பொலிஸார் இந்த பிக்குவை கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரான குறித்த பிக்கு, போலியான பெயரில் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளதை அறிந்த பெண் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசின் புலிக்கொடி பிரசாரம் தோல்வி!- ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க

 
[ திங்கட்கிழமை, 07 மே 2012, 01:41.57 AM GMT ] [ வீரகேசரி ]
யாழ்ப்பாணத்தில் ஐ.தே.கட்சி நடத்திய கூட்டு மே தினத்தின் வெற்றியை திசைதிருப்ப அரசாங்கம் மேற்கொண்ட “புலிக் கொடி' பிரசாரம் தோல்வியடைந்துவிட்டதென ஐ.தே.கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
ஐ.ரி. என்.தொலைக்காட்சியின் பொய்யான பிரசாரத்திற்கு மத்தியில் தனியார் ஊடகங்களின் உண்மைத் தன்மைக்கு எமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வணிகர்களாக வந்த முஸ்லிம்கள் தமிழ், சிங்களப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தனர்: தம்புள்ளை தேரர்

 
 
தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிவாசல் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கல தேரர் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

Saturday, May 5

கண்டி - மஹியங்கனை 18வது வளைவு நாளை திறக்கப்படும்

புதிதாக விரிவுபடுத்தப்பட்ட கண்டி - மஹியங்கனை 18வது வளைவு மக்கள் பாவனைக்காக நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் திறந்து வைக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

41 கிலோமீட்டர் லரையான இந்தப் பாதை 5,000 மில்லியன் ரூபா செலவில் மூன்று ஆண்டுகளாக விரிவுபடுத்தப்பட்டு வந்தது

 

10 ரூபா, 2000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்படமாட்டா

10 ரூபா மற்றும் 2,000 ரூபா நாணயத்தாள்கள் இனிமேல் அச்சடிக்கப்படமாட்டாதென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று தெரிவித்துள்ளார்.

10 ரூபா நாணயக்குற்றியொன்று வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் டெய்லிமிரருக்கு குறிப்பிட்டுள்ளார்.

'இனிமேல் நாம் 10 ரூபா தாள் வெளியிடமாட்டோம். பதிலாக குற்றி நாணயத்தையே வெளியிடுவோம். இருப்பினும் 2,000 ரூபா தாளையும் இனிமேல் அச்சடிக்க மாட்டோம். நாம் ஏற்கெனவே 20 ரூபா, 50 ரூபா, 100 ரூபா, 500 ரூபா, 1,000 ரூபா, 5,000 ரூபா தாள்களை வெளியிட்டுள்ளபடியால் 2,000 ரூபா தாளுக்கான தேவையில்லை' எனவும் தமிழ்மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லிமிரருக்கு அவர் கூறினார்.

2010 இல் 13.6 மில்லியன் அழுக்கடைந்த நாணயத்தாள்களையும் 2011 இல் 137 தாள்களையும் மத்திய வங்கி சுழற்சியிலிருந்து அகற்றியுள்ளது.

இவ்வாறு மீளப்பெறும் தாள்களுக்கு பதிலாக காலத்துக்காலம் புதிய தாள்கள் வெளியிடப்படுவதாக அஜித் நிவாட் கப்ரால் கூறினார்.

பௌத்த கொடிக்கு அவதூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

 
 
பௌத்த கொடிக்கு அவதூறு ஏற்படும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, சகல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பௌத்த கொடிக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பௌத்த கொடிக்கு களங்கம் ஏற்படுவதனை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் அண்மையில் புதிய சுற்று நிருபமொன்றை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தம்புள்ள பற்றியை அகற்றவிட்டால் நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என எச்சரிக்கை

தம்புள்ளயில் அமைந்துள்ள பள்ளிவாசலை அகற்றக்கோரி காலியில் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு செவிசாய்க்காது போனால்  நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப் போவதாக கடும்போக்கு பௌத்த சிங்கள அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

பௌத்த  பாதுகாப்பு மன்றமும், தேசப்பற்று மிக்க பௌத்த சக்தி என்ற அமைப்புகளே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.