Saturday, July 20

மூன்று மாகாண: சபைகள் வாக்காளர்கள் உறுப்பினர்கள் விபரம்


voting எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம் பெறவுள்ள வடமாகாணம்,மத்திய மாகாணம்,வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்ளில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் விபரம்,மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கை என்பன குறித்து தகவல்களை தேர்தல் செயலகம் வெளியிட்டுள்ளது.அதனது விபரங்கள் பின்வருமாறு -
வடமாகாணம்
மாவட்டம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
யாழ்ப்பாணம்       426703            19             16
கிளிநொச்சி        68589            07             04
மன்னார்        72420            08             05
வவுனியா        94367            09             06
முல்லைத்தீவு        52409            08             05
மொத்தம்

            36
 வடமேல் மாகாணம்
மாவட்டம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
குருநாகல்      1227810           37           34
புத்தளம்       526408           19           16
மொத்தம்

          50
 மத்திய மாகாணம்
மாவட்டம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
கண்டி        1015315           32              29
மாத்தளை         366549           14              11
நுவெரலியா         507693           19              16
மொத்தம்

             56

வட தேர்தல் தொடர்பாக மு. காவுக்குள் குழப்பம்!


எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பையா, தமிழ் தேசிய கூட்டமைப்பையா ஆதரிப்பது? என்கிற தீர்மானத்துக்கு வர முடியாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய தடுமாற்றத்தில் உள்ளது.
அரசைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று ஒரு சாராரும், தமிழ் தேசிய கூட்டமைப்பைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று இன்னொரு சாராரும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ரபீக் ரஜாப்தீன் கருத்துக் கூறுகையில் கிழக்கு மாகாண சபை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸை அரசு ஏமாற்றி வருகின்றது, எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை வட தேர்தலில் ஆதரிப்பதன் மூலம் சிறுபான்மை மக்களின் பலத்தை மு. கா அரசுக்கு காட்டும் என்றார். மு. காவுடன் கூட்டுச் சேர்ந்து வடக்கில் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளது என்று கூறினார்.
ஆனால் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவிக்கையில் அரசில் பங்காளியாக மு. கா உள்ளது, அப்படி இருக்கின்றபோது அரசை ஆதரிப்பதை தவிர மு. காவுக்கு வேறு மார்க்கம் கிடையாது என்றார்.

Friday, July 19

இராணுவ நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட அதிபர் முர்ஷி அதிகாரிகளை பார்த்து…



mursi இராணுவ நீதி மன்றத்தில் அதிபர் முர்ஷி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரனைகள் நேற்று ஆரம்பமாகிய பொழுது விசாரணை நடத்தியவர்களைப் பார்த்து : இன்ஷா அல்லாஹ் நாளை இறுதித் தீர்ப்பு நாளில் உங்கள் மீதும் விசாரனைகள் இடம் பெறும் அப்பொழுது அல்லாஹ் கேட்பான் ” அக்கிரமம் அநீதி என்று தெரிந்தும் எனது அடியான் முஹம்மது முர்ஷியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினீர்கள்”, நிச்சயமாக அநீதி இழைக்கப் பட்டவனது மன்றாட்டத்திற்கும் அல்லாஹ்விற்கும் இடையில் திரை கிடையாது என்று ஜனாதிபதி முர்ஷி கூறிய பொழுது விசாரணை நடாத்திய அதிகாரிகளில் சிலர் அழுது விட்டனராம்.
ننفرد بنشر بعض الحقائق حول الرئيس المعزول محمد مرسي من بينها ، أنه موجود علي ذمة النيابة العسكرية ، وبدأ التحقيق معه أمس في عدد من القضايا منها التخابر و الهروب من سجن وادي النطرون ، ولكن الجديد اليوم هو أن الرئيس المعزول أثناء التحقيق معه قال للنيابة العسكرية ” سيسئلكم الله يوم الدين أنكم وضعتم العبد محمد مرسي في وضع المتهم وأنتم علي يقين أنه ظلم ، ودعوة المظلوم ليس بينها وبين الله حجاب ” ، فأبكت تلك الجملة بعض أفراد هيئة النيابة العسكرية ، علي حد قول المصادر
அதேவேளை இராணுவத்திற்குள் இருக்கின்ற பல்வேறு கட்டமைப்புக்கள் தற்பொழுது இராணுவ சதி முயற்சியை அரங்கேற்றிய அப்துல் பத்தாஹ் ஸீ ஸீ யுடன் முரண்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை மிக விரைவில் நல்ல தொரு செய்தியை எதிர்பார்க்குமாறும் ராபியத்துல் அதவிய்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தம்புள்ளைப் பள்ளிவாசலைச் சூழவுள்ள 22 குடும்பங்களை 7 நட்களுக்குள் வெளியேற உத்தரவு

Revolving-news-Flashதம்புள்ளை பள்ளிவாசலையைச் சூழவுள்ள 22 குடும்பங்களையும் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை இன்று வெள்ளிக்கிழமை (19.07.2013) கடிதம் அனுப்பியுள்ளதாக கிராமவாசி ஒருவர் மீள்பார்வைக்குத் தெரிவித்தார்.


அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 60 பேர்ச் காணி மற்றும் வீட்டைக் கொண்ட வை.எம். சலீம் என்பவருக்கு 9750 ரூபா நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு வருமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு 7 நாட்களுக்குள் வெளியேறாதபோது அப்பிரதேசத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தம்புள்ளைப் பள்ளிவாயல் குறித்து கேட்டபோது, பள்ளிவாசலுக்கு எவ்விதக் கடிதமும் இதுவரை வரவில்லை. ஏனெனில், அவர்கள் இதனை ஒரு பள்ளிவாயலாக ஏற்றுக் கொள்ளவில்லையாம் எனவும் தெரிவித்தார்.

ஆனால், இப்பள்ளிவாசல் 1960 ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவருவதாகவும், 1990 ஆம் ஆண்டிலிருந்து இப்பள்ளிவாசலுக்கான மின்சார கட்டணப் பட்டியல் வருவதோடு, 2002 ஆம் ஆண்டிலிருந்து இப்பள்ளிவாசல் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தில் பதியப்பட்டு இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, உரியவர்கள் இது குறித்து உடனடியாக கவனமெடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

SLMC + EPDP + UPFA = வட மாகாணசைபைத் தேர்தல்களம் -சுசில் பிரேமஜெயந்த

SLMC + EPDP + UPFA =  வட மாகாணசைபைத் தேர்தல்களம் - தனித்து போட்டியிடும் வீரவசனங்கள் காற்றில்

ஆளும் தரப்பின் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் ஈபிடிபி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும்  இணைத்து வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அமைச்சரும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொது செயலாளருமான சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று சுதந்திரக்கட்சியின் யாழ்.அலுவலகத்தில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இத்தகவலை வெளியிட்டிருந்தார். 
இதன் மூலம் தனித்துப்போட்டியிடுவது தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ்  மற்றும் ஈபிடிபி வட்டாரங்களிடையே நிலவி வந்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இதனிடையே இன்றைய கூட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அழைத்து செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான கட்சி ஆதரவாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
 

மஹியங்கனை பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகையை தடுத்து நிறுத்தியதற்கு ரவூப் ஹக்கீம் வழமைபோல் கண்டிக்கிறாராம்

hakeem-slmc
மஹியங்கனை பள்ளிவாசலில் வழமையாக நடந்து வரும் ஜூம்ஆ தொழுகையை புனித ரமழான் மாதத்தில், இந்த வெள்ளிக்கிழமை அங்கு நடாத்தக் கூடாதென்று ஊவா மாகாண அமைச்சரான அனுரவிதாரன கமகே தடுத்து நிறுத்தியிருப்பதையும், பௌத்த தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான பொதுபலசேனாவின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரர் அப்பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டிவிட்டிருப்பதையும் இன ஐக்கியத்தையும், நாட்டில் சமாதானத்தையும் விரும்பும் நேர்மையாகச் சிந்திக்கும் பௌத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (19) மஹியங்கனை பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்திற்குச் சென்று பிரஸ்தாப மாகாண அமைச்சர், பள்ளிவாசல் ஸ்தாபக தர்மகர்த்தா சீனி முஹம்மது ஹாஜியாரின் மகன் சப்ரியிடம் பள்ளிவாசலில் தொழுகை நடத்தக் கூடாதென்றும், அதனை மூடிவிடுமாறும் எச்சரித்துள்ளதாகவும்,  அதன் காரணமாக அங்கு ஜூம்ஆத் தொழுகை நடைபெறவில்லையென்றும், இது     முஸ்லிம்களை மனவேதனையடைச்செய்யும் செயலென்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

மு.கா.வினால் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்ட யெஹியா ஆளும் கட்சியில்

yehyaபுத்தளம் மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யெஹியா ஆப்தீன் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாகத் தெரிய வருகிறது.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடை நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கத்துவம் வழங்கப்பட்ட யெஹியா ஆப்தீன் ஐ.ம.சு கூட்டமைப்பு முக்கியஸ்தர்களைச் சந்தித்து கூட்டமைப்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் நவமணிக்குத் தெரிவித்தார்.

அமைச்சர் அநுரவிதானகேயினால் பதுளை மஹியங்களைப் பள்ளிவாசலில் ஜூம்ஆ நிறுத்தம்

பதுளை மஹியங்களை பள்ளிவாசலுக்கு இன்று வெள்ளிக்கிழமை, 19 ஆம் திகதி வருகை தந்துள்ள ஊவா மாகாண காணி அமைச்சர் அநுர விதானகே, மஹியங்களை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையையோ அல்லது ஐந்து வேளை தொழுகைகளையே தொழுதால் பிரச்சினை ஏற்படுமென கூறிச் சென்றுள்ளார். இதனால் அந்த பள்ளிவாசல் உடனடியாக மூடப்பட்டு, அங்கு நடைபெறவிருந்த ஜும்ஆவும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது

Thursday, July 18

ஹெம்மாதகமயில் பதட்டம் மூவர் மீது கடும் தாக்குதல்


10ஹெம்மாதகம வாடியதென்ன கிராமத்தை சேர்ந்த மொஹமட் ஹம்ஷா, பௌமி   மற்றும் அவர்களின் ஹட்டன்  பகுதியை சேர்ந்த தமிழ் வாகன சாரதி ஆகியோர் பலத்கமுவ  கிராமத்தில் வைத்து சிங்கள பெளத்த குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டு மாவனல்லை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில்  ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஹெம்மாதகம  பிரதேசத்தை சேர்ந்த  அமைச்சர் அதாவுட  செனிவரட்டனவின்   இணைப்பாளர்   மொஹமட் றியாசிடம்  வினவியபோது அவர் தெரிவித்த தகவல்கள் இங்கு தருகிறோம்

Wednesday, July 17

அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் : ஜாதிக ஹெல உறுமய


விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் ஆவார். இந்தியா உட்பட சர்வதேசத்துடன் இணைந்து தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தை கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரங்கள் வலுவிழக்கச் செய்யப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அனைத்து பெளத்த மக்களும் நாமும் உள்ளோம். ஆனால் தற்போது காணப்படுகின்ற சூழலானது பிரிவினைவாதிகளுக்கு சாதகமாகவே காணப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பும் கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,

Tuesday, July 16

பணத்தை உடலில் மறைத்து வெளிநாடு கொண்டு செல்ல முயன்றவர் எக்ஸ்ரே சோதனையில் சிக்கினார்

இரண்டு கோடியே 28 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வெளிநாட்டுப் பணத்தை உடலில் மறைத்து சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடத்தப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி நேற்றிரவு 10.30 அளவில் பயணிக்கவிருந்த இலங்கையரிடம் இருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
53 வயதான ஒருவரே இவ்வாறு சுவிஸ் பிராங் மற்றும் யூரோ போன்ற வெளிநாட்டுப் பணத்தை உடலில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சுங்கப் பிரிவு குறிப்பிட்டது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக விமான நிலைய சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி மேலும் கூறினார்.

தெமட்டகொடையில் இறைச்சி ஏற்றிய லொறி காவி உடையணிந்தவர்களால் தீக்கிரை


fireகொழும்பு தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் கொழும்பு மாநகர சபையின் அனுமதியுடன் செயற்பட்டு வரும் கால்நடைகளை அறுக்கும் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான லொறி காவி உடையணிந்து வந்த சிலரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மேற்படி இடத்தில் சட்டபூர்வமாக அறுக்கப்படும் இறைச்சிகளை ஏற்றிச் செல்லும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் லொறியே இவ்வாறு எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. அதிகாலை சிவப்புநிற டபிள் கெப் வாகனமொன்றில் வந்த காவி உடையணிந்த காடையர்கள் குழு அருகிலுள்ள கடையில் தேநீரும் அருந்திவிட்டு நீண்டநேரம் காத்திருந்து இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். சம்பவம் நடந்தபோது இன்னும் பல லொறிகள் அறுக்கப்பட்ட இறைச்சிகளை ஏற்றிக்கொண்டு வெளியேற தயார் நிலையில் இங்கு இருந்துள்ளன.
இந்த இடத்தில் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாலையில் காவி உடையினர் தலைமையில் வந்த குழு இங்கு கலவரங்களில் ஈடுபட்டது. அப்போது அவர்கள் இந்த இடம், இங்கு நடைபெறுகின்ற கால்நடை அறுப்புக்கள் என்பன பற்றி கூறிய எல்லா குற்றச்சாட்டுக்களும் பொய் என நிரூபிக்கப்பட்டது. அவமானத்தோடு அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இப்போது ஒரு சிறு குழுவாக வந்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இடைநிறுத்திய இரண்டு உறுப்பினர்களையும் மு.கா. மீண்டும் சேர்த்துக்கொண்டது

slmcஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு முரணாக வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச்சட்ட விடயத்தில் வாக்களித்தார்கள் என்ற காரணத்தினால் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், அதனூடாக அவர்கள் வகித்த பதவிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, ஆப்தீன் யெஹியா ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் அதியுயர்பீட கூட்டத்தில் அறிவித்ததாக செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
இந்த முடிவை அதற்கு ஒருநாளைக்கு முன்னதாகவே தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேற்கொண்டிருந்ததாகவும், சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் பிரஸ்தாப வாக்களிப்பு நடைபெற்ற பதற்றமான சூழ்நிலை, அவர்கள்மீது பிரயோகிக்கப்பட்ட பலவந்தம் என்பவற்றினாலேயே அவ்வாறு கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாக அவர்கள் நடந்துகொள்ள நேர்ந்துவிட்டதாக விசாரணையின் முடிவில் தீர்மானிக்கப்பட்டதாலேயே அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் முழு அதியுயர் பீடமும், விசாரணை குழுவாக செயற்பட்டதாகவும் ஹஸன் அலி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்து ரிஸ்வி ஜவஹர்ஷா, ஆப்தீன் யெஹியா இருவரும் எதிர்வரும் வடமேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு அச்சுறுத்தல்; பேரணிக்கும் ஏற்பாடு!


BBSதெஹியதகண்டி முதல் மஹியங்கனை வரை ஊர்வலமொன்றுக்கும் பொதுக் கூட்டமொன்றுக்கும் பொதுபல சேனா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி மஹியங்கனை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அந்த பள்ளிவாசலில் பன்றியின் இரத்தம் ஓட்டப்பட்டமை, பள்ளிவாசலில் தொழுகை நடாத்தக் கூடாது என விடுக்கப்பட்ட எச்சரிக்கை, அதனையடுத்து வெள்ளக்கழமை ஜும்மா தொழுகையினை நடாத்துவதில் ஏற்பட்ட தயக்கம் போன்ற நிலவரங்களுக்கிடையே பொதுபல சேனாவின் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
மஹியங்கனையின் வர்த்தகம் செய்யும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக பொதுபல சேனா பிரச்சாரம் செய்து வருகிறது. அவர்கள் ஊர்வலம் நடாத்த திட்டமிட்டுள்ளார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

Monday, July 15

முதலமைச்சர் வேட்பாளராக சி.வி. விக்னேஸ்வரன் தெரிவு




தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றகூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடியிருந்தது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்று ஒரு சாராரும் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி.யை நியமிக்க வேண்டுமென்று மற்றொரு சாராரும் வலியுறுத்தியிருந்தனர். இதனால் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

சனிக்கிழமை நடைபெறவிருந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அன்றைய தினம் நடைபெறவில்லை. அந்தக் கூட்டமும் இன்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 3

தன்னைத் தானே சுட்டுக்கொண்ட துமிந்த


ஜனாதிபதி ஆலோசகராகவிருந்த பிரபல அரசியல் வாதி பாரத லக்ஷ்மனை சுட்ட பின்பு சந்தேக நபரான துமிந்த சில்வா தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக பொது மக்கள் கூறக் கேட்டதாக வழக்கில் சாட்சியளித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சில அடியாட்களுடன் ஸ்தலத்திற்கு வருகை தந்த துமிந்த சில்வா அங்கு கைகலப்பில் ஈடுபட்டதாகவும் அதன் பொது பெண்ணொருவரையும் தாக்கியதாகவும் சாட்சியளித்த அவர் அங்கு வந்தவர்களில் யாரையும் அடையாளங்க காட்ட இயலாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழக்கு ஆகஸ்ட் 2ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மலசலகூட வசதியுடன் கூடிய தனியார் பஸ்கள்

மலசல கூட வசதி, சொகுசான சரிசெய்துகொள் ளக்கூடிய ஆச னங்கள், தொலை க்காட்சி, சகல ஆசனங்களுக்கும் ஆசனப் பட்டி அடங்கலான சகல வசதிகளும் கொண்ட அதிசொகுசு பஸ் சேவையை அறிமுகம் செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மக்களிடம் பெறும் பஸ் கட்டணத்திற்கு ஏற்ப பயணிகளுக்கு சிறந்த பஸ் சேவையை அளிக்க இருப்பதாக ஆணைக்குழு தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்தார்.
முதற்கட்டமாக அதிசெகுசு பஸ்களில் இத்தகைய சேவைகளை அறிமுகப்படுத்தவும் பின்னர் சொகுசு மற்றும் அரைச்சொகுசு மற்றும் சாதாரண பஸ்களில் இவ்வாறான வசதிகளை மேற்கொள்ளவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆசனத்திற்கும் தனித்தனியான குளிரூட்டி வசதி, ஒவ்வொரு ஆசனமும் முன்பின் நகர்த்தக்கூடியவாறு இருத்தல், 40 ஆசனங்களுக்கு குறையாது இருத்தல் மலசலகூட வசதி இருத்தல், சுவர் கடிகாரம் இருத்தல், குறைந்தபட்சம் 17 அங்குல தொலைக்காட்சி இருத்தல், பாதுகாப்பு ஜன்னல், தொலை இயக்கக் கருவி மூலம் செயற்படும் கதவு, பயணிகளின் பொருட்களை வைப்பதற்காக தனியான வசதி என்பன பஸ்களில் உள்ளடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 2

உயிர்ப்பலி கொள்ளும் பயிற்சி அவசியமா?: இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்


கேணல் தரம்பெற்ற பாடசாலை அதிபர்,பல்கலைக் கழகத்திற்குத்தெரிவான மாணவி, அவரது மரணச் செய்தியில் அதிர்ச்சியுற்ற தந்தை என சமூகத்தின் பல்வேறு தரப் பினரைப் பலிகொண்டுவரும் இந்தத் தலைமைத்துவப் பயிற்சி இலங்கையின் இன் றைய கல்வித் துறைக்கு அவசியமா? ஏன இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
ரன்தெம்பே இராணுவ பயிற்சி முகாமில் தலைமைத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
 ரத்தொளுகம பஞ்ஞாநந்த தேசிய பாடசாலையின் கேணல் தரம் பெற்ற (வயது 52) அதிபர் டபிள்;யூ. எ. எஸ். விக்கிரம சிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை. பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற் சிக்குச் சென்ற மாணவியின் திடீர் மரணம் குறித்துக் கேள்வியுற்ற அவரது தந்தை யும் மரணமுற்ற சம்பவமும் கல்வித்துறையில் கவலைக்குரிய வரலாறாகியுள்ளது.
 
மாறாக, கல்வித் துறை ஒதுக்கீட்டுக்கு ஆண்டுதோறும் வெட்டு. 5வீத அதிகரிப்புக் கோரிக்கைக்கு ஆப்பு. 2006க்குப்பின் வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப் புக்கு இடமில்லை. 6ஃ2006 சுற்றறிக்கை மூலம் அறிமுகம் செய்யப்பட்ட சம்பள அதி கரிப்பு தொடர்பிலாக குத்து வெட்டுக்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக் கூட இன்றும் கிடைப்பில். சேவைப் பிரமாணக்குறிப்பை வெளியிடுவதில் இன்னும் இழுத்தடிப்பு. 
 
உயர்கல்வித் துறையில் எல்லோருக்கும் எட்டாத, பல்கலைக்கழக விரிவுரையாளர் களால் கூட எதிர்க்கப்படும் தனியார் மயமாக்கல். 3எ சித்தி பெற்றவர்களால் கூட எட்டமுடியாத வெட்டுப்புள்ளி, பல்கலைக்கழகத்தில் நுழையமுடியாத ஆகக்குறைந்த அனுமதி வீதம். ஆண்டு தோறும் அதிகரித்துச் செல்லும் பட்டதாரிகளின் வேலையற் றோர் வீதம். தொழிற்சந்தைக்கு ஏற்றோரை உருவாக்க முடியாத கல்வி முறைமை. இன்றும் கிராமியப் பாடசாலைகளுக்கு எட்டாக்கனியாக உள்ள ஆங்கிலக்கல்வி என கல்வித்துறைக் கழுத்தறுப்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
 
இவ்வாறு அவசரமாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய விவகாரங்கள் ஏராளமி ருக்க, உயிர்வாழும் சந்ததிக்கு உடனடிப்பயன் எதனையும் அளிக்காத,அதேவேளை உயிர்ப்பலி கொள்ளும் கட்டாயத் தலைமத்துவப் பயிற்சியில் அரசு விடாப்பிடியாக அதி தீவிர ஆர்வம் காட்டுவதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே சங்கத் தின் கோரிக்கையாகும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய ஊடகங்கள் செயற்படுகின்றன – ஐ.தே.க


ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய ஊடகங்கள் செயற்படுகின்றன – ஐ.தே.க

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய ஊடகங்கள் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஊடகங்களில் எவை பிரசூரிக்கப்பட வேண்டும் எவை பிரசூரிக்கப்படக் கூடாது என்பதனை ஜனாதிபதியே நிர்ணயிக்கின்றார் என மேல் மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாதாந்தம் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை அழைத்து அரசியல் சூழ்நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதுடன், எவற்றை பிரசூரிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி ஊடகங்களின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் இது ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நடைபெறுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இது மக்களின் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையை முடக்கும் செயலாகவே தாம் நோக்குவதாகத் தெரிவித்துள்ளார். கடும்போக்கு அமைப்புக்களின் நடவடிக்கைகளினால் சர்வதேச ரீதியில் ஏற்படக் கூடிய அபகீர்த்தியை கருத்திற் கொண்டு இவ்வாறு ஊடகங்களின் தகவல்கள் வெளியிடப்படுவதில்லை என முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கசினோ மன்னன் “பெக்கர்” திட்டம் நிறைவேறுகிறது?


அவுஸ்திரேலிய கசினோ மன்னன் பெக்கர் இலங்கையில் பாரிய கசினோ ஒன்றை திறக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து, அஸ்கிரிய பீடாதிபதி வரை தெருவுக்கு இறங்குவதக தெரிவித்திருந்த நிலையில் தற்போது மறைமுகமாக விடயங்கள் அரங்கேறி வருவதாக அறியமுடிகிறது.
ரேங்க் ஹோல்டிங்ஸ் எனும் உள்ளூர் பங்குதாரரையும் கொண்ட நிறுவனம் மூலம் இத்திட்டம் அரங்கேறப்போவதாக ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த ஆடம்பர கசினோ அரங்கம் 400 உல்லாச அறைகளுடன் கூடியதாகவும் நிர்மாணிக்கப்படவிருப்பதோடு இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டு 50 வருட குத்தகைக்கான ஆவணங்களும் கை மாறியுள்ளதோடு 12 வருட வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

13 + குறித்து 12 ஆம் திகதி ரத்னதேரருக்குத் தீர்ப்பு? சாதகமா? பாதகமா? இந்தியா நிலை…




அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் 17(அ) அத்தியாயத்தின் ஏற்பாடுகளை முழுமையாக நீக்குமாறு கோரும் 21 ஆவது திருத்தம் என தலைப்பிடப்பட்ட தனிநபர் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் 12 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அறிவித்தது.
ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த தனிநபர் சட்டமூலத்தை மாகாண சபைகளின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு அனுப்புவதா? இல்லையா? என்பது தொடர்பிலும் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிப்பது குறித்தும் அன்றையதினமே தீர்மானிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதிகார வெறியில் மோதிக் கொள்ளும் அமைச்சர்கள்: சம்பிக்க – பவித்ரா கடும் மோதல்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலானா அரசாங்கத்தில் அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை வெளிக்காட்டிக் கொள்ள ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் அதாவுல்லாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மறுபுறத்தில் அமைச்சர் அதாவுல்லா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை கடுமையான முறையில் விமர்சனம் செய்திருந்தார்.

13ஐப் பாதுகாப்பதற்காக கொழும்பில் நாளை கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை

wikஜனநாயக ரீதியான பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பதற்காக 13இல் திருத்தம் மேற்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னாள் நாளை புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கையெழுத்திட்டு, 13ஆம் திருத்த சட்டமூலத்தை பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து தங்களது சக்தியை வெளிப்படுத்துமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
இந்நிகழ்வில், விக்கிரமபாகு கருணாரத்ன, மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய, அஸாத் சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

ரமழான் பண்டிகைக் காலத்தில் விசேட விடுமுறை – அரசாங்க நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றறிக்கை



இம்முறை ரமழான் 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் 09ஆம் திகதி ஆரம்பமாகி 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி முடிவடையவுள்ளதால் இக்காலத்தில் முஸ்லிம் அரச அலுவலர்களுக்கு / பணியாளர்களுக்கு தொழுகையிலும் மதவழிபாடுகளும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

EST -7/LEAVE/03/3125 இலக்கமிடப்பட்ட 2013.06.27ஆந் திகதிய 12/2013ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கையிலேயே இவ் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி சுற்றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கதாவது,

தொழுகைகளும், மதவழிபாடுகளும் நாளாந்தம் பின்வரும் நேர அட்டவணைப்படி நிகழும்

மு.ப. 03.30 முதல் மு.ப. 6.00 வரை
பி.ப. 03.15 முதல் பி.ப. 04.15 வரை
பி.ப. 06.00 முதல் பி.ப. 07.00 வரை
பி.ப. 07.30 முதல் பி.ப. 10.30 வரை

இக்காலத்தில் சமய வழிவாடுகளுக்கு நேர ஒழுங்கு செய்து கொடுக்கப்பட வேண்டுமெனவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் விசேட லீவு அங்கீகரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநாளுக்கு 14 நாட்களுக்கு முன்னதாக விழா முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சுற்றறிக்கை வருடாந்தம் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

பள்ளிவாசலுக்குள் பெண்கள் நிர்வாண போராட்டம் - சுவீடனில் அசிங்கம்

ஸ்வீடனின் ஸ்டொக்ஹோம் பள்ளிவாசலுக்குள் மூன்று பெண்கள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியுள்ளனர். சர்வதேச பெண்ணிய குழுவான பெமினின் அங்கத்தவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இவர்கள் பொலிஸாரினால் பள்ளிவாசலில் இருந்து அகற்றப்பட்டனர்.
ஹிஜாப் அணிந்து பள்ளிவாசலுக்குள் நுழைந்த பெண்கள் ஆடையை களைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஏ. எப். பி. செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களது உடலில், ‘எகிப்து மற்றும் உலகுக்கு ஷிரிஆ தேவையில்லை’, ‘எனது உடல் என்னுடையது, யாருடைய கெளரவத்திற்கானதும் அல்ல’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள், ‘பெண்களை விடுதலை செய்’, ‘ஷிரிஆ தேவையில்லை’, ‘துன்புறுத்தல்களை நிறுத்து’ போன்ற கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
எனினும் ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது பள்ளிவாசல் வெறுமையாகவே இருந்ததாகவும் அந்த சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலின் பணியாளர்களும் ஊடகவியலாளர்களுமே அங்கு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எகிப்து நாட்டு செயற்பாட்டாளர் அலியா அல் மஹ்தி என்ற பெண்ணும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இவர் எகிப்து சமூக அமைப்புக்கு எதிராக தனது நிர்வாண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவராவார். கடந்த 2008 ஆம் ஆண்டு உக்ரைனில் ஆரம்பிக்கப்பட்ட பெமின் அமைப்பு தம்மை கடும்போக்கு பெண்ணியவாதிகளாக அடையாளப்படுத்துகின்றது. இவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி அரைநிர்வாண போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Monday, July 1

சவூதிஅரேபியா வட்டியற்ற கடனை வழங்கி இலங்கைக்கு பக்கபலமாக நிற்கிறது - அமைச்சர் எஸ்.பி.


இலங்கைக்கு சவூதி அரேபியா வட்டியற்ற கடன்களை வழங்கி பகக்பலமாக திகழ்ந்து வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டார். 
கண்டி கலாசார மண்டபத்தில் இன்று 01.07.2013 நடைபெற்ற மத்திய மாகாண மக்களுடனான  மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வந்த 30 வருட யுத்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று எவரும் நினைகக்வில்லை. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் யுத்தம் முடிவடையும் என்று நம்பவில்லை. 
தற்போது நாட்டில் கொடுர யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவுகின்றது. எனவே நாடு துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. எமக்கு பல நாடுகள் உதவிகள் மற்றும் கடன் வழங்கி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இதில் குறிப்பாக சவூதி அரேபியா வட்டியற்ற கடன்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.

நிதி அமைச்சின் செயலாள பீ.பி. ஜயசுந்தரவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை.

நிதி அமைச்சின் செயலாளரும், திறைசேரியின் செயலாள ருமான கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவை மோசடி வழக்கென்று தொடர்பில் சாட்சியம் அளிப்பதகாகவே எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்று இன்று அழைப்பாணை அனுப்பிவைத்துள்ளது.

பல கோடி ரூபா "வற் வரி" மோசடி தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

வற் வரி மோசடி வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கே அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இறைவரி திணைக்களத் திற்கும் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பிவைத்துள்ளது.

புலி- ஒட்டகக் கூட்டணியை தோற்கடிக்க ஒன்று திரளுமாறு ஹெலஉறுமய நாட்டுமக்களுக்கு அறைகூவல்


புலி ஒட்டகக் கூட்டணியை தோற்கடிக்க ஒன்று திரளுமாறு ஹெலஉறுமய நாட்டுமக்களுக்கு அறைகூவல்:-

இரா. சம்பந்தன், ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கூட்டணியை ஒன்றிணைந்து செயற்பட்டு தோற்கடிப்பதற்காக தேசப்பற்றுள்ள சக்திகள் அணித்திரள வேண்டும் என  ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஹெல உறுமய இந்த கூட்டணியை புலி - ஓட்டகக் கூட்டணி என அடையாளப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து கொண்டு, சிறப்புரிமைகளை பெற்;றுக்கொண்டு, நாட்டின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாது, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க உத்தரவிடும் ரவூப் ஹக்கீமின் சந்தர்ப்பவாத பிரிவினைவாத, ஐக்கிய விரோத, அரசியலை தோற்கடிக்க அனைத்து தேசப்பற்றுள்ள மற்றும் இனப்பற்றுள்ள சக்திகள் முன்னோக்கி வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புலி- ஓட்டக கூட்டணியை கண்டு, திருட்டு கல் பொறுக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கைகளையும் நாட்டுக்கு எதிரில் நிர்வாணப்படுத்த ஜாதிக ஹெல உறுமய நடவடிக்கை எடுக்கும் எனவும் வசந்த ஸ்ரீவர்ணசிங்க மேலும் கூறியுள்ளார்.

வெளிநாட்டு சேவைக்காக (SLOS) இரண்டு முஸ்லிம்கள் தெரிவு


2013 போட்டிப் பரீட்சையில் தரம் III வெளிநாட்டுச் சேவைக்காக தெரிவு செய்யப்பட்ட பெயர் விபரங்கள் அரசாங்க சேவை ஆணைக் குழுவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் டி. அமானுல்லா மற்றும் எம். ஏ. ரிகாஸா என்ற இரு முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்பட்டுள்ளனர்.
முழுமையான பெயர் விபரங்கள் :
1 R.K. Munidasa 845520798V
2 T.B. Ihalage 825750150V
3 B.N. Dilmini 816410193V
4 U.A.N.U. Ariyadasa 816420512V
5 A.R.W.M.M.J.N. Amarakoon 878090187V
6 H.V.D. Waruna 801991505V
7 W.C.R. Weerasekara 860241382V
8 G.P.P.G. Manusinghe 857010752V
9 M.B. Jayawardana 846920820V
10 W.I. Weerasinghe 767492057V
11 G.D.S. Lenagala 848362085V
12 W.D.M. Gunawardana 772833709V
13 D. Amanulla 752213143V
14 S.S.S. Nikapitiya 837100534V
15 D.V.L.D. Samarasinghe 847640820V
16 U.M. Gunawawardena 857944054V
17 G.S.H. Mendis 821860849V
18 A.M.K.S. Bandara 873531703V
19 S.D.K.P. Senadhira 810910313V
20 D.G. Dahanayake 826673940V
21 T.N. Arnolda 895142972V
22 G.R.S.P. Wijerathna 816981026V
23 M.A. Rikaza 806812471V
24 P.G.I.A. Karunarathne 866741115V
25 D.S.N. De Silva 796390301V

மாகாணசபை அதிகாரங்களை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்க நான் தயாரில்லை


மாகாணசபையின் அதிகாரங்களை இல்லாதொழிக்கும் எந்த ஒரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்க தாம் தயாரில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், 13வது அரசியல் அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வர அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில், இரண்டு மாகாணசபைகள் இணைவது மற்றும் மத்திய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு குறைந்த மாகாணசபைகளின் அனுமதி போதுமானது என்ற யோசனைகளே அவையாகும்.
இந்தநிலையில் இரண்டு மாகாணசபைகள் இணைவதை தடுப்பதற்கான யோசனைக்கு தாம் ஆதரவளிக்கின்ற போதும் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைக்கும் எந்த அரசாங்கத்திலும் தாம் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்

முஸ்லிம் வைத்தியர்களை நிராகரியுங்கள் - ஞானசார தேரர் அழைப்பு

நாட்டின் அடுத்த சவால், இளம் தலைமுறையினரிடையே பிரபலமாகி வரும் கருத்தடை மாத்திரைகள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த மாத்திரை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு தமது அமைப்பு பௌத்த சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்கவில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தற்போது அவர்களின் இனத்தை கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்பட, அனைத்து துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில் தமது விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஊடாக உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு நாட்டை கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
முஸ்லிம் வர்த்தகத்தை பகிஷ்கரிக்குமாறும்  முஸ்லிம் மருத்துவர்களை நிராகரிக்குமாறும் ஞானசார தேரர் இதன் போது கேட்டுக்கொண்டுள்ளார்

1375 பௌத்தர்களுக்கு ஒரு விஹாரை: 983 முஸ்லிம்களுக்கு ஒரு பள்ளிவாசல்


ganasara deroநாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் குறித்த ஒழுங்கான தகவல்கள் எதுவும் புத்தசாசன அமைச்சிடம் இல்லை. ஆனால், எம்மால் பெறப்பட்டுள்ள தகவல்களின்படி நாட்டில் 2000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இங்குள்ள முஸ்லிம் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் 983 முஸ்லிம்களுக்கு ஒரு பள்ளி என்ற விகிதத்திலே உள்ளன. ஆனால் பௌத்த விஹாரைகளோ அந்த அளவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற மேற்படி அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;
நாட்டில் 10343 பௌத்த விஹாரைகள் உள்ளன. இவை 1375 பௌத்தர்களுக்கு ஒரு விஹாரை என்ற அடிப்படையில் உள்ளன. 5035 இந்து கோயில்கள் உள்ளன. இது 507 இந்துக்களுக்கு ஒரு கோயில் என்ற அடிப்படையில் உள்ளன. அதேபோன்று 1350 கிறிஸ்தவ ஆலயங்கள் பதியப்பட்டுள்ளன. பதியப்படாது ஆயிரக்கணக்கில் உள்ளன. மேற்கண்ட அடிப்படையில் 1100 கிறிஸ்தவர்களுக்கு ஓர் ஆலயம் என்றே உள்ளன.
இந்தத் தரவுகளுடன் ஒப்பிடுகையில் பௌத்த நாடாக இருந்தும் பௌத்தர்களுக்கே அநீதி இழைக்கப்பட்டுள்ளமை நன்கு தெளிவாகின்றது. எனவே, தொடர்ந்தும் எம்மால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எமது பொறுமையை சோதிக்க வேண்டாம். இது சிங்கள பௌத்த நாடு என்பதனைப் பிரதிபலிக்கக் கூடிய, பௌத்தர்களின் உரிமைகளுக்காக உழைக்கக்கூடிய முதுகெலும்புள்ள ஒருவரை புத்தசாசன அமைச்சராக நியமிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பௌத்த மக்களின் உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் விதத்தில் சீர்குலைத்து வரும் வேற்று மத அமைப்புக்கள் குறித்தும் அரசாங்கம் அவசரமாக நடவடிக்கையில் இறங்க வேண்டும். இவற்றைத் தடுப்பதற்கான சட்டங்கள் இல்லாவிடின் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இதனைச் செய்ய அரசாங்கம் முன்வராத பட்சத்தில் எமது பொதுபலசேனா உத்தியோகபற்றற்ற பொலிசாக செயற்பட வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
எமது நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்தினருக்கே அனைத்து தடைகள், இடையூறுகளும் உள்ளன. பௌத்தர்களின் உரிமைகள் அதில் மறுக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை மதங்களின் உரிமைகளுக்கு பிரச்சினை இல்லை. இங்கு 400க்கும் மேற்பட்ட பிறமத அமைப்புக்கள் இயங்குகின்றன. பௌத்தர்களின் புனித நாட்களில் கூட நிம்மதியாக வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதவாறு இந்த அமைப்புக்கள் செயற்படுகின்றன. எமது நாட்டு கலாசாரம் சீர்குலைக்கப்பட்டுள்ளது.
எமது ஜனாதிபதி பௌத்த மக்களின் பெரும்பான்மை வாக்குகளாலே தெரிவு செய்யப்பட்டவர். எனவே, இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிதான் பௌத்தர்களின் விடயத்தில் உதவ முன்வர வேண்டும் என்றார். இவ்வைபவத்தில் பொதுபல சேனாவின் பிரதிநிதி எடிகல்லே விமலசார தேரர் உட்பட மற்றும் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் ஒற்றராக பஷீர் சேகுதாவூத் கட்சிக்குள் செயற்படுவதாக ஹக்கீம் குற்றச்சாட்டு

 
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே இவர்கள் இருவரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் மண்டப மேடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்இ தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

பாடசாலை அதிபர்களுக்கான இராணுவப் பயிற்சியை நிறுத்துமாறு கோரிக்கை

பள்ளிக்கூட அதிபர்களுக்கு இராணுவ தர படிநிலைகளை வழங்கும் பயிற்சிகளை கடந்த ஆண்டு அக்டோபரில் பாதுகாப்பு அமைச்சு தொடங்கியது 

இலங்கையில் பள்ளிக்கூட அதிபர்களுக்கு இராணுவ பயிற்சி கொடுக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பள்ளிக்கூட அதிபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்த நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி ரந்தம்பை என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவப் பயிற்சிநெறியில் உடற்பயிற்சிக்காக காலையில் 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்ற நியதிக்கமைய,
இன்றுகாலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிபர் திடீர் சுகவீனமுற்று வைத்தியாசலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

உயிரிழந்த 52 வயதான டபிள்யு.ஏ.எஸ். விக்கிரமசிங்க, ரத்தெலுகம பஞ்ஞானந்த தேசிய பாடசாலையின் அதிபர்.
அதிபர் உயிரிழந்தமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும் என்று ஆசியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இலங்கை ஆசிரியர் சங்கம், இந்த சம்பவத்துடனாவது இந்தப் பயிற்சியை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயற்சி என்ற பெயரில், அரசு இராணுவ தர பயற்சி வழங்கிவருகிறது. இதே மாதிரியான திட்டத்தின்கீழ், பாடசாலை அதிபர்களுக்கும் இராணுவ பயிற்சி வழங்கி கப்டன், லெப்டினன், லெப்டினன் கர்ணல் என்ற தரத்திலான படிநிலைகளையும் அரசு வழங்கிவருவதாகவும் ஆசிரியர் சங்கம் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

நாமே வெளியேறுவோம்; துரத்தினால் அவமானம் என்கிறார் அமைச்சர் பஷீர்!!


Basheerஅரசுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறவு தொடர்பாக உறுதியான தீர்மானத்தை எடுக்கும் கால கட்டம் இதுவாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரான அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதியுயர் பீடக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாமில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“உறுதியாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்தால் உறுதியாக அரசோடு இருக்க முடியாது. உறுதியாக அரசோடு இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் உறுதியா இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரசுடனும் அரசாங்கத்தோடும் ஒன்றாக இருந்தால் அரசின் பங்காளிக்கட்சி என்ற அடிப்படையில் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் நிறைவேற்ற முடியாது. இது தான் நான் கண்ட அனுபவமாகும்.

பௌத்த பயங்கரவாதத்தின் முகம் – TIME சஞ்சிகை கட்டுரையின் தமிழாக்கம்- kattankudi.info


Time Cover July 01 மூலக்கட்டுரை: TIME சஞ்சிகை / தமிழாக்கம்: காத்தான்குடி.இன்போ 

அவரது முகம் ஒரு சிலையின் முகத்தைப்போன்று அமைதியாகவும் உறுதியாகவும் இருந்தது. பர்மாவின் பின் லேடன் எனப்பெயர் பெற்ற அந்த பௌத்த துறவி தனது மத உபதேசத்தை ஆரம்பிக்கிறார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தமது கரங்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்தபடி வியர்வைத்துளிகள் தமது முதுகுகளில் வழிந்தோட அவரின் முன்னால் அமர்ந்திருக்கின்றனர்.
அவரின் சைகையை புரிந்து கொண்ட மக்கள் அவருடன் இணைந்து சுலோகங்களை உச்சரிக்க ஆரம்பிக்கின்றனர். பர்மாவின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் அமைந்துள்ள அந்த விகாரையின் சூடான காற்றில் சுலோகங்கள் தவழ ஆரம்பிக்கின்றன. இதை நோக்கும்போது ஒரு அமைதி நிறைந்த நிகழ்வாகவே தோன்றுகின்றது. எனினும் விராதுவின் உபதேசம் வெறுப்பை உமிழ்கின்றது.