மலசல
கூட வசதி, சொகுசான சரிசெய்துகொள் ளக்கூடிய ஆச னங்கள், தொலை க்காட்சி, சகல
ஆசனங்களுக்கும் ஆசனப் பட்டி அடங்கலான சகல வசதிகளும் கொண்ட அதிசொகுசு பஸ்
சேவையை அறிமுகம் செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மக்களிடம் பெறும் பஸ் கட்டணத்திற்கு ஏற்ப பயணிகளுக்கு சிறந்த பஸ் சேவையை
அளிக்க இருப்பதாக ஆணைக்குழு தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்தார்.
முதற்கட்டமாக அதிசெகுசு பஸ்களில் இத்தகைய சேவைகளை அறிமுகப்படுத்தவும்
பின்னர் சொகுசு மற்றும் அரைச்சொகுசு மற்றும் சாதாரண பஸ்களில் இவ்வாறான
வசதிகளை மேற்கொள்ளவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆசனத்திற்கும் தனித்தனியான குளிரூட்டி வசதி, ஒவ்வொரு ஆசனமும்
முன்பின் நகர்த்தக்கூடியவாறு இருத்தல், 40 ஆசனங்களுக்கு குறையாது இருத்தல்
மலசலகூட வசதி இருத்தல், சுவர் கடிகாரம் இருத்தல், குறைந்தபட்சம் 17 அங்குல
தொலைக்காட்சி இருத்தல், பாதுகாப்பு ஜன்னல், தொலை இயக்கக் கருவி மூலம்
செயற்படும் கதவு, பயணிகளின் பொருட்களை வைப்பதற்காக தனியான வசதி என்பன
பஸ்களில் உள்ளடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment