Tuesday, July 2

உயிர்ப்பலி கொள்ளும் பயிற்சி அவசியமா?: இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்


கேணல் தரம்பெற்ற பாடசாலை அதிபர்,பல்கலைக் கழகத்திற்குத்தெரிவான மாணவி, அவரது மரணச் செய்தியில் அதிர்ச்சியுற்ற தந்தை என சமூகத்தின் பல்வேறு தரப் பினரைப் பலிகொண்டுவரும் இந்தத் தலைமைத்துவப் பயிற்சி இலங்கையின் இன் றைய கல்வித் துறைக்கு அவசியமா? ஏன இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
ரன்தெம்பே இராணுவ பயிற்சி முகாமில் தலைமைத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
 ரத்தொளுகம பஞ்ஞாநந்த தேசிய பாடசாலையின் கேணல் தரம் பெற்ற (வயது 52) அதிபர் டபிள்;யூ. எ. எஸ். விக்கிரம சிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை. பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற் சிக்குச் சென்ற மாணவியின் திடீர் மரணம் குறித்துக் கேள்வியுற்ற அவரது தந்தை யும் மரணமுற்ற சம்பவமும் கல்வித்துறையில் கவலைக்குரிய வரலாறாகியுள்ளது.
 
மாறாக, கல்வித் துறை ஒதுக்கீட்டுக்கு ஆண்டுதோறும் வெட்டு. 5வீத அதிகரிப்புக் கோரிக்கைக்கு ஆப்பு. 2006க்குப்பின் வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப் புக்கு இடமில்லை. 6ஃ2006 சுற்றறிக்கை மூலம் அறிமுகம் செய்யப்பட்ட சம்பள அதி கரிப்பு தொடர்பிலாக குத்து வெட்டுக்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக் கூட இன்றும் கிடைப்பில். சேவைப் பிரமாணக்குறிப்பை வெளியிடுவதில் இன்னும் இழுத்தடிப்பு. 
 
உயர்கல்வித் துறையில் எல்லோருக்கும் எட்டாத, பல்கலைக்கழக விரிவுரையாளர் களால் கூட எதிர்க்கப்படும் தனியார் மயமாக்கல். 3எ சித்தி பெற்றவர்களால் கூட எட்டமுடியாத வெட்டுப்புள்ளி, பல்கலைக்கழகத்தில் நுழையமுடியாத ஆகக்குறைந்த அனுமதி வீதம். ஆண்டு தோறும் அதிகரித்துச் செல்லும் பட்டதாரிகளின் வேலையற் றோர் வீதம். தொழிற்சந்தைக்கு ஏற்றோரை உருவாக்க முடியாத கல்வி முறைமை. இன்றும் கிராமியப் பாடசாலைகளுக்கு எட்டாக்கனியாக உள்ள ஆங்கிலக்கல்வி என கல்வித்துறைக் கழுத்தறுப்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
 
இவ்வாறு அவசரமாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய விவகாரங்கள் ஏராளமி ருக்க, உயிர்வாழும் சந்ததிக்கு உடனடிப்பயன் எதனையும் அளிக்காத,அதேவேளை உயிர்ப்பலி கொள்ளும் கட்டாயத் தலைமத்துவப் பயிற்சியில் அரசு விடாப்பிடியாக அதி தீவிர ஆர்வம் காட்டுவதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே சங்கத் தின் கோரிக்கையாகும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

No comments:

Post a Comment