Tuesday, January 31

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்

உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்

இலங்கை அமைச்சர்கள் இஸ்ரேலுக்கு விஜயம் - நல்லிணக்கத்திற்கானது என வர்ணிப்பு

 

 


இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளது.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த யாப்பா அபயவர்தன, பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜோன் அமரதுங்க, புத்திக்க பத்திரன, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர்.

ஈரான் எண்ணெய்க்காக- அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா




ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் தடை அமுலில் இருந்தாலும், ஈரான் இஸ்லாமிய குடியரசில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை இந்தியா குறைக்காது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Crude Oilசியோல்: ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண, தனது 'கைப்புள்ள'யான தென் கொரியாவை தூதனுப்புகிறது அமெரிக்கா. உலகிலேயே அதிக எண்ணெய் குடிக்கும் நாடு அமெரிக்காதான். ஏகப்பட்ட கச்சா எண்ணெயை இருப்பில் வைத்திருக்கும் நாடும் அதுவே.

இலங்கையில் 4 முஸ்லிம் ஆயுத அமைப்புக்கள்

(தமிழ் ஊடகமொன்றில் வந்துள்ள இச்செய்தியை நாம் இங்கு பதிட காரணம், இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கெதிராக மேற்கொள்ளப்படும் சதிவேளைகள் குறித்து நம்மவர்கள் விழப்பு பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான்)

இலங்கையில் செயல்பட்டு வருகின்ற முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் குறித்து அமெரிக்கா சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் மிகவும் அதிர்ச்சி ஊட்டுபவையாகவும், அதே நேரம் சுவாரஷியமானவை ஆகவும் உள்ளன.
புலனாய்வுப் பிரிவில் அதிகாரி தரத்தில் உயர் பதவி வகித்தவரான முஸ்லிம் ஒருவரே தூதரகத்துக்கு இத்தகவல்களை 2004  ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் திகதி வழங்கி இருக்கின்றார்.
 இத்தகவல்களில் மிக முக்கியமானவை வருமாறு:

பூமிக்கடியில் ஈரான் வைத்துள்ள அணுசக்திகளை தாக்க பங்கர் பஸ்டர் வெடிகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா !

 

பூமிக்கடியில் மிக பாதுகாப்பாக ஈரான் துவக்கியுள்ள அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அது குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதுடன் உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தவும்
பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.

WiFi தொழில்நுட்பம்

wifi-phone-3Wi-Fi இன் விரிவு”wireless fidelity” மேலும் இது high-frequency wireless local area network (WLAN)
தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone , VoIP phone access போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம்.

புளுடூத் தொழில்நுட்பம்

bluetoothimageவயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத்.இந்த தொழில்நுட்பமாது இன்று Personal Area Network எனப்படும் வீடுகளில் கணினிகள்,பிறுன்ராகள்,மற்றும் செல்பேசிகள் என்பவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வலையமைப்பில் பயன்படுகிறது.
அன்றாடத் தேவைகளில் பலவகையான இணைப்புக்களை நாம் பயன்படுத்திவருகின்றோம்.இவ்விணைப்புக்களை பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

தடைக்கு பதில் தடை: ஈரான் அதிரடி அறிவிப்பு!

 

ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பதிலாக தடை விதிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.
அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாததை கண்டித்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை வருகிற ஜூலை மாதத்தில் பெருமளவில் குறைக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது.

இலங்கைவரும் தப்லீக் ஜமாஅத் உறுப்பினருக்கு புதிய ஒழுங்கு முறை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் தொடர்பாகப் பின்பற்றப்படவேண்டிய ஒழுங்கு முறையொன்றை வகுத்து செயற் படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்
டுள்ளது.குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத் தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தின்போது இந்த இணக்கப் பாடு காணப்பட்டிருப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மெளலவி ரிஸ்வி முப்தி நேற்றுத் தெரிவித்தார்.

Saturday, January 21

சோப்பா / பைப்பா (SOPA / PIPA) – ஒரு சாதாரணக் குடிமகன் ரூபத்தில் சிறு அலசல்

 

- முர்ஷித் அஹ்மத் -
சமீப காலமாக இணையத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் இந்த SOPA (Stop Online Piracy Act) மற்றும் PIPA (Protect Intellectual Property Act). சோப்பா’வை தமிழில் “இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்” என மொழி பெயர்க்கின்றனர்.
இது அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் பேசப்பட்ட போது பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் அனைவரும் இதை ஒரு “காப்பிரைட்” போன்ற ஒரு சட்டமாகவே பார்த்தார்கள். கொஞ்ச நாட்களின் பின்னரான அலசலின் விளைவாகவே இது எல்லாவற்றையும் விட காரசாரமான ஒரு சட்டம் என்பது தெரிய வந்தது.

ஈரானைத் தாக்கினால்….. – ரஷ்யா எச்சரிக்கை!

 

iran nuclior
ஈரான் மீது போர் தொடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் அணுசக்தி திட்டங்களை ஈரான் செயல்படுத்தி வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அணுசக்தி திட்டங்கள் என்ற பெயரில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. அதை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது போர் தொடுப்போம், அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசுவோம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறி வருகிறது.
இந்நிலையில், இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அயலுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது:
ஈரானில் ஏற்கனவே ஷியா – சன்னி பிரிவினருக்கு இடையே மோதல் நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் மீது போர் தொடுத்தால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும்.
அணுசக்தி திட்டங்கள் விஷயத்தில் ஈரான் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அந்நாடு மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி கழக பிரதிநிதிகள் ஈரானில் ஆய்வு நடத்த அந்த நாடு இப்போது ஒப்புக் கொண்டுள்ளது.இந்தச் சூழ்நிலையில் போர் தொடுத்தால், அமைதி நடவடிக்கை சீர்கெட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கைதியை விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர வேண்டியது சட்ட ரீதியானதல்ல: ரவூப் ஹக்கீம்

 
கைதி ஒருவரை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர வேண்டியது சட்ட ரீதியான அவசியமாக கருதப்பட முடியாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.

புலிகளிடம் யாழ். தளபதி இலஞ்சம் பெற்றார் என்று பரபரப்பு!


யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து யாழ். மாவட்டத்தின் தற்போதைய இராணுவ தளபதியான மஹிந்த ஹத்துருசிங்க மாதாந்தம் இலஞ்சம் பெற்று வந்து இருக்கின்றார் என்று இலங்கை இராணுவத்தில் மிக உயர்ந்த பதவியில் இருந்தவரான முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இவர் வழக்கு நடவடிக்கை ஒன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக்கப்பட்டார்.

இவர் இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது புலிகளின் கொழும்புத் தலைவரிடம் யாழ்ப்பாணத்தின் தற்போதைய தளபதி யுத்த காலத்தில் மாதாந்தம் ரூபாய் 30,000 பெற்று வந்திருக்கின்றார் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

முக்கிய ஊடகங்களிளின் முகவரிகள் மற்றும் தொடர்பு எண்கள்




Al Jazeera English

PO Box 23127
Doha - Qatar
E-mail: advertising@aljazeera.net
Tel: (+974) 4489-7446 / 4489-7451 / 4489-7449
Fax: (+974) 4489-7472