Saturday, January 21

ஈரானைத் தாக்கினால்….. – ரஷ்யா எச்சரிக்கை!

 

iran nuclior
ஈரான் மீது போர் தொடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் அணுசக்தி திட்டங்களை ஈரான் செயல்படுத்தி வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அணுசக்தி திட்டங்கள் என்ற பெயரில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. அதை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது போர் தொடுப்போம், அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசுவோம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறி வருகிறது.
இந்நிலையில், இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அயலுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது:
ஈரானில் ஏற்கனவே ஷியா – சன்னி பிரிவினருக்கு இடையே மோதல் நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் மீது போர் தொடுத்தால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும்.
அணுசக்தி திட்டங்கள் விஷயத்தில் ஈரான் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அந்நாடு மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி கழக பிரதிநிதிகள் ஈரானில் ஆய்வு நடத்த அந்த நாடு இப்போது ஒப்புக் கொண்டுள்ளது.இந்தச் சூழ்நிலையில் போர் தொடுத்தால், அமைதி நடவடிக்கை சீர்கெட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment