ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய ஊடகங்கள்
செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஊடகங்களில் எவை பிரசூரிக்கப்பட வேண்டும் எவை பிரசூரிக்கப்படக் கூடாது
என்பதனை ஜனாதிபதியே நிர்ணயிக்கின்றார் என மேல் மாகாணசபையின் ஐக்கிய தேசியக்
கட்சி உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாதாந்தம் ஊடக
நிறுவனங்களின் பிரதானிகளை அழைத்து அரசியல் சூழ்நிலைமைகள் குறித்து
கலந்துரையாடுவதுடன், எவற்றை பிரசூரிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்கி
வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி
ஜனாதிபதி ஊடகங்களின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத்
தெரிவித்துள்ளார். அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும்
நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் இது
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நடைபெறுகின்றது எனவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இது மக்களின் தகவல்களை அறிந்துகொள்ளும்
உரிமையை முடக்கும் செயலாகவே தாம் நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
கடும்போக்கு அமைப்புக்களின் நடவடிக்கைகளினால் சர்வதேச ரீதியில் ஏற்படக்
கூடிய அபகீர்த்தியை கருத்திற் கொண்டு இவ்வாறு ஊடகங்களின் தகவல்கள்
வெளியிடப்படுவதில்லை என முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment