ஜனாதிபதி ஆலோசகராகவிருந்த பிரபல அரசியல்
வாதி பாரத லக்ஷ்மனை சுட்ட பின்பு சந்தேக நபரான துமிந்த சில்வா தன்னைத்தானே
சுட்டுக்கொண்டதாக பொது மக்கள் கூறக் கேட்டதாக வழக்கில் சாட்சியளித்த பொலிஸ்
கான்ஸ்டபிள் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சில அடியாட்களுடன் ஸ்தலத்திற்கு வருகை
தந்த துமிந்த சில்வா அங்கு கைகலப்பில் ஈடுபட்டதாகவும் அதன் பொது
பெண்ணொருவரையும் தாக்கியதாகவும் சாட்சியளித்த அவர் அங்கு வந்தவர்களில்
யாரையும் அடையாளங்க காட்ட இயலாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழக்கு ஆகஸ்ட் 2ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment