Monday, July 15

முதலமைச்சர் வேட்பாளராக சி.வி. விக்னேஸ்வரன் தெரிவு




தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றகூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடியிருந்தது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்று ஒரு சாராரும் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி.யை நியமிக்க வேண்டுமென்று மற்றொரு சாராரும் வலியுறுத்தியிருந்தனர். இதனால் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

சனிக்கிழமை நடைபெறவிருந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அன்றைய தினம் நடைபெறவில்லை. அந்தக் கூட்டமும் இன்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment