இம்முறை ரமழான் 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் 09ஆம் திகதி ஆரம்பமாகி 2013ஆம்
ஆண்டு ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி முடிவடையவுள்ளதால் இக்காலத்தில் முஸ்லிம்
அரச அலுவலர்களுக்கு / பணியாளர்களுக்கு தொழுகையிலும் மதவழிபாடுகளும் கலந்து
கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண
சபைகளின் தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச
கூட்டுத்தாபனங்கள் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு
பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
EST -7/LEAVE/03/3125
இலக்கமிடப்பட்ட 2013.06.27ஆந் திகதிய 12/2013ஆம் இலக்க பொது நிருவாக
சுற்றறிக்கையிலேயே இவ் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி சுற்றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கதாவது,
தொழுகைகளும், மதவழிபாடுகளும் நாளாந்தம் பின்வரும் நேர அட்டவணைப்படி நிகழும்
மு.ப. 03.30 முதல் மு.ப. 6.00 வரை
பி.ப. 03.15 முதல் பி.ப. 04.15 வரை
பி.ப. 06.00 முதல் பி.ப. 07.00 வரை
பி.ப. 07.30 முதல் பி.ப. 10.30 வரை
இக்காலத்தில் சமய வழிவாடுகளுக்கு நேர ஒழுங்கு செய்து கொடுக்கப்பட
வேண்டுமெனவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் விசேட லீவு
அங்கீகரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநாளுக்கு
14 நாட்களுக்கு முன்னதாக விழா முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டுமெனவும் இச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சுற்றறிக்கை வருடாந்தம் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment