இரா. சம்பந்தன், ரவூப் ஹக்கீம் ஆகியோரின்
கூட்டணியை ஒன்றிணைந்து செயற்பட்டு தோற்கடிப்பதற்காக தேசப்பற்றுள்ள சக்திகள்
அணித்திரள வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த
ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஹெல உறுமய இந்த கூட்டணியை புலி - ஓட்டகக்
கூட்டணி என அடையாளப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை
வகித்து கொண்டு, சிறப்புரிமைகளை பெற்;றுக்கொண்டு, நாட்டின் ஒருமைப்பாட்டை
ஏற்றுக்கொள்ளாது, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க
உத்தரவிடும் ரவூப் ஹக்கீமின் சந்தர்ப்பவாத பிரிவினைவாத, ஐக்கிய விரோத,
அரசியலை தோற்கடிக்க அனைத்து தேசப்பற்றுள்ள மற்றும் இனப்பற்றுள்ள சக்திகள்
முன்னோக்கி வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புலி- ஓட்டக கூட்டணியை கண்டு, திருட்டு
கல் பொறுக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கைகளையும் நாட்டுக்கு எதிரில்
நிர்வாணப்படுத்த ஜாதிக ஹெல உறுமய நடவடிக்கை எடுக்கும் எனவும் வசந்த
ஸ்ரீவர்ணசிங்க மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment