Tuesday, July 16

தெமட்டகொடையில் இறைச்சி ஏற்றிய லொறி காவி உடையணிந்தவர்களால் தீக்கிரை


fireகொழும்பு தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் கொழும்பு மாநகர சபையின் அனுமதியுடன் செயற்பட்டு வரும் கால்நடைகளை அறுக்கும் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான லொறி காவி உடையணிந்து வந்த சிலரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மேற்படி இடத்தில் சட்டபூர்வமாக அறுக்கப்படும் இறைச்சிகளை ஏற்றிச் செல்லும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் லொறியே இவ்வாறு எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. அதிகாலை சிவப்புநிற டபிள் கெப் வாகனமொன்றில் வந்த காவி உடையணிந்த காடையர்கள் குழு அருகிலுள்ள கடையில் தேநீரும் அருந்திவிட்டு நீண்டநேரம் காத்திருந்து இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். சம்பவம் நடந்தபோது இன்னும் பல லொறிகள் அறுக்கப்பட்ட இறைச்சிகளை ஏற்றிக்கொண்டு வெளியேற தயார் நிலையில் இங்கு இருந்துள்ளன.
இந்த இடத்தில் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாலையில் காவி உடையினர் தலைமையில் வந்த குழு இங்கு கலவரங்களில் ஈடுபட்டது. அப்போது அவர்கள் இந்த இடம், இங்கு நடைபெறுகின்ற கால்நடை அறுப்புக்கள் என்பன பற்றி கூறிய எல்லா குற்றச்சாட்டுக்களும் பொய் என நிரூபிக்கப்பட்டது. அவமானத்தோடு அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இப்போது ஒரு சிறு குழுவாக வந்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

No comments:

Post a Comment