Wednesday, May 9

வெகு விரைவில் ஜனாதிபதியின் முடிவு அறிவிக்கப்படுமாம்

எமது மாத்தளை செய்தியாளர்: தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் விவகாரம் தொடர்பில் வெகு விரைவில் ஜனாதிபதியின் முடிவு அறிவிக்கப்படும் என்று மாத்தளை நகர மேயர் ஹில்மி கரீம் தெரிவிதார். கடந்த வாரம் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற மாத்தளை மேயர் ஹில்மி யுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் தொடர்பில் மேயர் ஹில்மி கரீம் விளக்கமளிக்கையில் கூறியதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் கண்டியில் தங்கி இருந்தபோது தம்புள்ளை பள்ளி விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி சில விடயங்களைக் கேட்டறிந்து கொண்டார்.
தான் சிறுவனாக இருக்கும் பொழுது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு இப்பள்ளி-யில் தொழுதுள்ளதையும் மாத்தளை மாவட்டத்திலுள்ள இரண்டு அரசியல் பிரமுகர்களின் சொந்தப் பிரச்சினையே இப்பள்ளி விவகாரம் இவ்வாறு உருவெடுத்திருப்பதற்குக் காரணம் என்பதையும் ஜனாதிபதிக்குக் கூறினேன்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு கிடைத்த தொலைபேசி அழைப்புக்களை அடுத்து உடனடியாக பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர்களுடன் தொடர்பு கொண்டு விசேட அதிரடிப்படையினன் சேவையைப் பெற்றுக் கொண்டதன் மூலம் மறுநாள் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த அபாய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
வதந்திகள் மூலம் இப்பிரச்சினை ஊதிப் பெரிதாக்கப்பட்டு விட்டது. அப்படியி இல்லாத பட்சத்தில் மிக சுமுகமாகப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க டிந்திருக்கும் என்பதை தெரிவித்தேன்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி இது விடயமாக கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் தேவ பண்டார, அஸ்கிய மகா நாயக்க தேரர் உட்பட பௌத்த சமய தரப்பினர் பலருடன் ஜனாதிபதி பேசியுள்ளதாகக் கூறினார்.
மேலும் கருத்துத் தெவித்த மேயர், சாதாரணமாக தம்புள்ளையூடாக வெள்ளிக்கிழமை தினங்களில் போக்குவரத்தில் ஈடுபடுவோர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜும்மாத் தொழுகைக்காக தம்புள்ளையில் தரித்து நிற்பதாகவும் இதனால் தம்புள்ளை நகர வீதியில் பள்ளிக்கு அண்மையில் வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் இது ஒரு இயற்கை நிகழ்வே தவிர முஸ்லிம்கள் அங்கு ஆக்கிரமிப்புச் செய்யச் செல்லவில்லை.
மேற்படி சாதாரண நிகழ்வை சில விஷமிகள் அசாதாரணமாக பௌத்த மக்கள் மத்தியில் காட்டியுள்ளதுடன் முஸ்லிம் மக்களுக்கு மத்தியிலும் பாரிய வதந்திகளைப் பரப்பி விடயம் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது.
பள்ளிவாசலை மூடி முத்திரையிட நீதி மன்றத்தால் மட்டுமே முடியும். இருப்பினும் அரச அதிகாரிகள் பிழையைச் செய்த போதும் குறிப்பிட்ட நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க எடுத்த நடவடிக்கை பலர் மத்தியில் மேலும் ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
எனினும் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் வெகு விரைவில் ஜனாதிபதியின் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார் .

No comments:

Post a Comment