Tuesday, May 8

நாமல் ராஜபக்ஷ, சனத் ஜயசூரிய உள்ளிட்டவர்களுக்கு பிரதியமைச்சர் பதவி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த சில வாரங்களில் பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக ஆளும் கட்சித் தகவல் தெரிவிக்கின்றது.
 
நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முன்னர் மாகாண சபைகளில் குறைந்தது இருமுறை அங்கம் வகித்து, கடந்த பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று, ஆளும் கூட்டமைப்பில் இணைந்துகொண்ட சிறு கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கும் பிரதியமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.
மாவட்ட ரீதியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு பதவி வழங்குமாறு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு பதவி கோரியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்த எம்.பிக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அடுத்த சில வாரங்களில் இவர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
மாகாண சபைகளில் இரு முறை அங்கம் வகித்து தற்போது எம்.பி.க்களாக உள்ள ஹேமால் குணசேகர, வி,கே. இந்திக, நெரஞ்சன் விக்ரமசிங்க, கட்சித் தலைவர்களான பி.திகாம்பரம், பிரபா கணேசன், மாவட்ட ரீதியாக அதிக விருப்பு வாக்குப் பெற்ற நாமல் ராஜபக்‌ஷ, நிஷாந்த முத்துஹெட்டிகம, சனத் ஜயசூரிய, சரத் வீரசேகர, லக்ஸ்மன் வசந்த பெரேரா ஆகியோரில் சிலருக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக ஆளும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment