Thursday, May 31

தெஹிவளை தாருர் ரஹ்மான் மஸ்ஜித் மற்றும் மதரஸா வழமை போன்றே இயங்கிவருகிறது


  தாருர் ரஹ்மானில் ஜமாஅதுத்டனான ஐந்துவேலை தொழுகை மற்றும் சிறுவர் மதரஸா ஆகியன இன்றுவரை வழமை போன்று இயங்குவதாக ஷபாஹ் நிறுவத்தின் பணிப்பாளரும் , அகில இலங்கை ஜம்இயத்துள் உலமாவின் துணை செயலாளருமான தாசீம் மௌலவி தெரிவித்தார்.
கடந்த வெள்ளிகிழமை பெளத்த தீவிரவாத தேரர்கள் தலைமையில் தாருர் ரஹ்மான் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் அது மாடுகளை பலியிடும் மடுவமாக இயங்குவதாகவும் குறித்த மஸ்ஜிதை அகற்ற வேண்டும் என்றும் ஆர்பாட்டம் மேற்கொள்ளபட்டது. இதபோது மஸ்ஜித் மீது சில கல் வீச்சும் இடம்பெற்றது.

இதை தொடர்ந்து தெஹிவளை பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் கடந்த ஞாயிற்று கிழமை மாலை நான்கு மணி தொடக்கம் இடம்பெற்றது அதில் முஸ்லிம் தரப்பும் , ஆர்பாட்டகாரர்கள் தரப்பும் கலந்துகொண்டன .
மதரஸாவாக இயங்க அனுமதி வழங்கப்பட்ட போதும் மஸ்ஜிதாக இயங்க நீதி மன்றம் மூலம் தீர்வை பெறுவது என்றும் . மஸ்ஜிதில் கூட்டமாக தொழுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. தாருர் ரஹ்மான் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு தொடக்கம் பதியப் பட்டுள்ளது.அதேபோன்று வக்பு சபையில் மஸ்ஜித்தாகவும் 1999 ஆம் ஆண்டு மஸ்ஜித்தாக பதிவு செய்யப்பட்டு அவற்றுக்கான ஆதாரங்கள் முஸ்லிம் தரப்பில் இருந்தபோதும் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு பதிவு செய்யப்பட்டமைக்கான பதிவுகள் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையின் ஆவணங்களில் இல்லை என்று மாநகர நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று ஏற்கனவே நாம் செய்தி பதிவு செய்திருந்தோம் .
ஆனாலும் இது வரை தாருர் ரஹ்மானுக்கு எதிராக நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று அகில இலங்கை ஜம்இயத்துள் உலமாவின் துணை செயலாளர் தாசீம் மௌலவி இன்று தெரிவித்தார் . பெளத்த தேரர்கள் வழக்கு தாக்கல் செய்தால் அவற்றை அதை எதிர்கொண்டு வெற்றி கொள்வதற்கு சகல ஏற்பாடுகளையும் தாருர் ரஹ்மாம் நிர்வாகம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார் .
மேலும் அவர் வழங்கிய தகவலில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் மிக நீண்ட வரலாற்றை கொண்டவர்கள் என்றும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போன்று சகல உரிமையும் கொண்டவர்கள் என்றும் இந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் என்றும் ,இந்த நாட்டில் சகல உரிமைகளையும் கொண்ட நாட்டின் சட்டத்தை மதிக்கின்ற இலங்கையின் குடிமக்கள் என்றும் நாட்டில் உள்ள மஸ்ஜிதுக்கள் இந்த நாட்டின் சமாதானத்தையும், அபிவிருத்தியையும் சகல சமூகத்திற்கும் அமைதியையும் வேண்டி பிராத்திக்கும் தலங்களாகும் அவற்றுக்கு எதிரான ஆர்பாட்டங்களுக்கு யார் அனுமதி வழங்குகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் தெரிவித்தார் .

No comments:

Post a Comment