Saturday, March 30

பேரியல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் விரைவில் முறைப்பாடு : BBS


சிங்கப்பூருக்கான உயர்ஸ்தானிகர் பேரியல் அஷ்ரப் தொடர்பில் விரைவில் வெளிவிவகார அமைச்சில் முறையிடவுள்ளதாக பொது பலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

நேற்று சம்புத்தத்வ ஜயந்தியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையின் தூதுவராலயச் செயற்பாடுகள் பெரும்பாலும் பலவீனமாகவே உள்ளன. சிங்கப்பூரில் உயர்ஸ்தானிகராகவுள்ள பேரியல் அஷ்ரப் தமிழ், சிங்களப் புத்தாண்டை இலங்கையின் புத்தாண்டு என எவ்வாறு பிரகடனம் செய்ய முடியும்.

சுதந்திரதினத்தன்று சிங்களப் பாடல்களை ஒலிபரப்ப வேண்டாமெனவும் வெஷாக் தினங்களில் பெளத்த கொடியை ஏற்றவேண்டாம் எனவும் எவ்வாறு அவரால் கூறமுடியும்.

இது தொடர்பில் கடந்த நாட்களில் வெளிப்படுத்திய போதும் இதுவரை அரசு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை .

எனவே, விரைவில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளிடம் அது தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம். அதன் பின்னர் அவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment