Friday, March 29

ஹர்த்தால் நடவடிக்கை;முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுயநல தேவையே - முஸம்மில்

ஹர்த்தால் நடவடிக்கை முஸ்லிம் மக்களின் தேவையல்ல, குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுயநல தேவையே ஆகும். இவ்வாறான இனவாதத்தை சமூகத்தில் விதைக்க வேண்டாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸம்மில் தெரிவித்தார்.

பொலிஸார் தலையிட்டமையினாலேயே முஸ்லிம்களின் ஹர்த்தால் நடவடிக்கை வெற்றியடையவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றமை வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் மக்கள் விரும்பாத ஒரு போராட்டத்தை முன்னெடுத்து அது வெற்றியடையாத நிலையில் ஏனையோரை குற்றம் சுமத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் முஸம்மில் தொடர்ந்தும் கூறுகையில்,
கடந்த திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கைக்கு  முஸ்லிம் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்தனர். இதற்கு உலமா சபை உட்பட முஸ்லிம் புத்திஜீவிகள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தன. கிழக்கு பகுதியில் குறிப்பிட்ட சில கடைகள் மூடப்பட்டது. இந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையானது சாதாரண முஸ்லிம் மக்களின் விருப்பமல்ல.

இனவாதத்தை முஸ்லிம் மக்களிடையே பரப்பி நாட்டில் அமைதியின்மையை தோற்றுவித்த குறிப்பிட்ட சில முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்படுகின்றமை கவயைளிக்கின்றது. சமூகத்தின் மீது அக்கறையிருந்தால் இவ்வாறான விடயங்களை இவர்கள் செய்ய மாட்டார்கள். ஹலால் விடயத்தையும் அரசியலாக்கச் சென்று இறுதியில் அவமானப்பட்டுச் சென்றார்கள் என்று அவர் தெரிவித்தார்

1 comment: