Thursday, March 28

கிறிஸ்தவ அடிப்டைவாத பாஸ்டர்மார் சபைகள் தொடர்பிலான தகவல்களை வழங்கவும் : பொதுபல சேனா!

சிங்கள பௌத்தர்களை மதமாற்றம் செய்யும் சிறுவர் காப்பகங்கள் என்ற பெயரில் மிருகக் கொலைக்களங்களை நடத்தும் நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவ அடிப்படைவாத ‘பாஸ்டர்” மார் சபைகள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொதுபல சேனா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர், திஸ்ஸ மகாராமை போகா வெலஸ்ஸ எனுமிடத்தில் பாஸ்டர் தலைமையில் இயங்கி வந்த சிறுவர் காப்பகத்தின் சிறுவர்கள் அங்கு இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றிகளையும் கோழிகளையும் கொலைசெய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பயன்படுத்தப்பட்ட 89 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பாஸ்டர் நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டார்.
ஆனால் இச் சிறவர்களை பொலிஸாரோ சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரோ பொறுப்பேற்பதற்கு முன்வராமையால் பாஸ்டருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. எனவே இச் சிறுவர்கள் மீண்டும் அப்பாஸ்டர் தலைமையிலான கொலைக் களத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதனால் அச்சிறுவர்களை பெறுப்பேற்று பாதுகாக்க நாம் தயார். இது தொடர்பில் சட்டரீதியாக கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம்.
யுத்தம், இயற்கை அனர்த்தம் மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு திடீரென முளைத்த கிறிஸ்தவ அடிப்படைவாத பாஸ்டர்மார் சிறுவர் இல்லங்களை நடத்தி வருவதோடு அவர்களை பிழையாகவும் பயன்படுத்துகின்றனர்.
எனவே, இவ்வாறான பாஸ்டர்மார்கள் மற்றும் சிங்கள பௌத்தர்களை மத மாற்றம் செய்து மூளைச் சலவை செய்து கிறிஸ்தவ அடிப்படைவாதத்திற்குள் சேர்த்துக்கொள்பவர்களின் தகவல்களை மக்கள் எமக்கு வழங்க வேண்டும் என்று கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment