Thursday, March 28

ஆசாத் சாலி, முஜிபூர் ரஹ்மான் காட்போட் வீரர்கள் – ஜாதிக ஹெல உறுமய

5சிங்கள பௌத்த மக்களுக்கான நன்றியை மறக்க வேண்டாம் என முஸ்லிம் சகோதர்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த சிறீவர்ணசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு நடப்பதாக கூறும் பொய்யான இடையூறுகளை கண்டிப்பதற்காக மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தலைமையிலான முஸ்லிம் ஒத்துழைப்புக்கான அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கடையடைப்புக்கு பெருபான்மையான முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்பது தெரிகிறது.

முஸ்லிம் அடிப்படைவாதியும் இனவாதியுமான முஜிபூர் ரஹ்மானின் கோரிக்கைக்கு அவருடன், கைகோர்த்து கொண்டவர்கள், கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு அடிப்பணிந்த சில நகரங்களில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரமே. காத்தான்குடி, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கிண்ணியா, மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்கள் கடைகளை அடைத்து விட்டு, கடையடைப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.
கொழும்பு மாளிகாவத்தையில் இருந்து கொண்டு சிங்கள விரோத, பௌத்த விரோத கடையடைப்புக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களும், அவர்களின் ஆதரவுடன் இயங்கும் அரசியல் குழுக்கமே ஆதரவு வழங்கியுள்ளனர்.
எவ்வித அடிப்படையுமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த கடையடைப்பு போராட்டமானது முஸ்லிம் மக்கள் மத்தியில் தம்மை முஸ்லிம் நேசர்களாகவும் வீரர்களாக காட்டிக்கொள்வதற்கவுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது பௌத்த சிங்கள விரோதமாக மாறிவருகிறது. தென்கிழக்கு பிரதேசம் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்குள் மூழ்கி வருகின்றது என்பதை ஜாதிக ஹெல உறுமய தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இந்த பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் தாயக கோட்பாடு எழுந்து வருகிறது.
விடுதலைப் புலிகள் வடக்கிலும், கிழக்கிலும் இருந்து முஸ்லிம் மக்களை விரட்டிய போதும் கொலை செய்த போதும் ஹர்த்தால்களை நடத்த ஆசாத் சாலி, முஜிபூர் ரஹ்மான் போன்ற காட்போட் வீரர்கள், அப்போது எங்கிருந்தனர் என்பதை சிங்கள மக்கள் அல்ல முஸ்லிம் மக்கள் அவர்களிடம் கேட்கவேண்டும்.
ரவூப் ஹக்கீம், பிரபாகரனுடன் உடன்படிக்கையை செய்து கொண்டு முஸ்லிம்களை காட்டி கொடுத்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து பேசவும் இந்த காட்போர்ட் வீரர்கள் முன்வந்தார்களா?. மணிராசகுளம் முஸ்லிம் கிராமத்தை புலிகள் கைப்பற்றிய போது, ஹக்கீம், ஆசாத் சாலி, ரஹ்மான் போன்றவர்கள் எங்கிருந்தனர்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தை 2008 ஆம் ஆண்டு ராஜபக்ஷ அரசாங்கம், மீட்ட போது, அரசாங்கத்தை கவிழ்க்க ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொண்ட முயற்சிகளை தேசம் ஒருபோதும் மறக்காது என்பதை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு கூறிவைக்க விரும்புகிறோம் எனவும் வர்ணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment