
பிராக்டல்கைன் எனப்படும் புரதம் கலந்த மெல்லிய திசுப்படலத்தை பீட்டா
அணுக்களின் மீது பொருத்தினால், அவை புரத சத்தை ரத்தத்தில் கலக்கச் செய்து,
இன்சுலினை சுரக்க உதவி புரியும் என்பதே விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.
இதற்கு முன்னால் இந்த முயற்சி பற்றி எதிலும் குறிப்பிடப்படவில்லை என்றும்
இது ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு என்றும் பேராசிரியர் ஒலேப்ஸ்கி
கூறுகின்றார்.
இன்சுலின் திரவ உற்பத்தியும் குளுக்கோஸ் கட்டுப்படுத்தப்படுதலும், சர்க்கரை
நோய் வராமலிருக்கத் தேவையான முக்கிய விஷயங்கள் ஆகும். இதனை பிராக்டல்கைன்
படலம் திறம்பட செய்வதோடு வேறு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை
என்பது இதன் சிறப்பாகும்.
No comments:
Post a Comment