Monday, April 15

முஹம்மது நபி குறித்த கட்டுரை போட்டி நடாத்த பௌத்த சமய விவகார அமைச்சால் தடை

சமய கலாசார கல்விக்கான மன்றம் ((FRCS) வருடாந்தம் நடாத்திவந்த முஹம்மது நபி குறித்த கட்டுரை போட்டியை இவ்வருடமும் நடாத்துவதற்கு பௌத்த சமய விவகார அமைச்சு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பில் சமய கலாசார கல்விக்கான மன்றம் தலைவர் முஹம்மது அஜ்மல் வழங்கிய தகவல்கள் வருமாறு,
மாற்றுமத சகோதரர்களிடையே முஹம்மது நபி பற்றிய தெளிவை வழங்குவதற்காக நாம் வருடாந்தம் கட்டுரை போட்டியை நடாத்திவந்தோம். கடந்தவருடம் முஹ்ம்மது நபி பற்றிய கட்டுரை எழுதி பௌத்த குரு ஒருவர் முதலாவது பரிசை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இவ்வருடமும் போட்டி பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தோம். சிங்கள சகோதரர்களிடமிருந்து முஹ்மமது நபி குறித்து அவர்கள் எழுதிய ஆக்கங்களும் வந்தன. இதன்போது முஸ்லிம் கலாசார  திணைக்களத்திடமிருந்து முஹம்மது நபி பற்றிய கட்டுரை போட்டியை நடாத்த வேண்டாமென எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதனிடையே நாம் முஹம்மது நபி பற்றி நடாத்தவிருந்த கட்டுரை போட்டி குறித்து ஜாதிக்க ஹெல உறுமய மோசமான பிரச்சாரங்களை முன்னெடுத்தது. முஹ்மது நபி குறித்த கட்டுரை போட்டியானது மதப் பரப்பும் ஒரு நடவடிக்கை எனவும் ஹெல   உறுமய குற்றம் சுமத்தியது. நாங்கள் முஹம்மது நபி பற்றிய கட்டுரை போட்டியை நடாத்தவோமாயின் அதற்கெதிராக நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாகவும் அவர்கள் எச்சரித்தார்கள்.
இதன் பின்னர் பௌத்த சமய அலுவல்கள் அமைச்சிடமிருந்தும் எமக்கு கடிதம் வந்தது. அதாவது முஹமது நபி பற்றிய கட்டுரை போட்டியை நடாத்த வேண்டாமென அதில் வலியுறுத்தப்பட்டது. எனவே நாம் மாற்றுமத சகோதரர்களிடையே முஹம்மது நபி பற்றி நடாத்தவிருந்த போட்டியை தற்போது கைவிட்டுவிட்டோம். இதனை சகலருக்கும் அறியத்தருகிறோம்  என்றார்.

No comments:

Post a Comment