Monday, April 15

மஹிந்த அரசாங்கத்தை கவிழ்க்க முஸ்லிம் அடிப்படை வாதிகள் சதி


அரசுக்கு எதிரானவர்களும் முஸ்லிம், கிறிஸ்தவ அடிப்படைவாதிகளினதும்  அரசை கவிழ்க்கும் முயற்சியாகவே கடந்த வெள்ளியன்று தமக்கெதிராக தமது அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பொது பல சேனாவின் தலைவர் கிராம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
குறித்த அமைப்பின் தலைமையகமான ஸ்ரீ சம்புத்தத்வஜெயந்தியில் இன்று மாலை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த விமலஜோதி தேரர்,
கடந்த வெள்ளியன்று பொது பல சேனாவை கண்டிப்பதாக கூறி எமது தலைமையகம் முன் சிலர் ஆரப்பாட்டம் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் குடியுரிமை உள்ளவர்கள்.
இவர்கள் இந்நாட்டின் பெளத்தர்களையும், பிக்குகளையும்,அரசையும் நோவிக்கும் விதமாக நடந்துகொண்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நாடாளாவிய ரீதியில் இடம்பெறலாம்.
குறித்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு முகப்புத்தகம் ஊடாக  திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முஸ்லிம், கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் அரசுடன் முரண்பட்டு விரக்தியில் உள்ளவர்களுமே உள்ளனர். அவர்கள் சிங்கள பெளத்தர்களாக தம்மை சித்தரித்து இந்நாட்டில் பெளத்தர்களுக்கும் சம்பிரதாய முஸ்லிம், கிறிஸ்தவ  மக்களுக்கிடையிலான உறவை சீற்குலைக்க முயற்சிக்கின்றனர். என தெரிவித்தார்

No comments:

Post a Comment