Sunday, May 19

கண்ணீர் சிந்தும் உரிமை நமக்கில்லையா ? சுரேஷ் பிரேமசந்திரன் கேள்வி




யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என அதன் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று மாலை 4.00 மணியளவில் மன்னாரில் தமது உயிர்நீத்த சொந்தங்களை நினைத்து இரங்கல் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் செயலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.
உயிர்நீத்த சொந்தங்களை நினைத்து கண்ணீர் சிந்தும் உரிமைகூட தமிழ் மக்களுக்குக் கிடையாதா? தமது சொந்தங்களை நினைத்து கண்ணீர் சிந்துபவர்களை கைதுசெய்வதனூடாக அரசாங்கள் எதனை சாதிக்க முயல்கிறது என்பது தெரியவில்லை. சர்வதேசத்திற்கு ஒரு முகத்தினையும் தமிழ் மக்களுக்கு பல முகத்தினையும் அரசு காட்டமுனைவது கண்டிக்கத்தக்கது.
எங்களுக்கு உரிமையிருக்கிறது எமது உயிர்நீத்த சொந்தங்களை நினைத்து கண்ணீர் சிந்துவதற்கும் அவர்களை நினைவு கூர்வதற்கும். அந்த உரிமையைக்கூட தட்டிப்பறிக்கப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது. இவ்விரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற அரசியல் பிரமுகர்களை கைது செய்வது ஜனநாயகமாகுமா? எனவே, கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசினைக் கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு இச்சம்பவத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்த கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment