Showing posts with label உலக செய்திகள். Show all posts
Showing posts with label உலக செய்திகள். Show all posts

Thursday, June 27

முஸ்லிம் படுகொலையாளியின் படத்துடன் வரவிருந்த டைம் பத்திரிகைக்கு தடை

மியான்மர் நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த புத்த பிக்குகளின் அமைப்பின் தலைவர் விராதுவை அட்டைப்படமாகக் கொண்டு வெளியிடப்பட்ட டைம் பத்திரிகையை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. மியான்மர் நாட்டில் அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் அண்மையில்தான் தனியார் பத்திரிகைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் இந்த வார டைம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் விராது என்ற புத்த பிக்குவின் படத்துடன் அட்டைப்படக் கட்டுரை வெளியாகி இருக்கிறது. இந்த புத்த பிக்குதான் மியான்மர் நாட்டின் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்துக்கு தலைமை வகிப்பவர். இவர் தம்மை மியான்மரின் பின்லேடன் என்றை அழைத்துக் கொள்கிறவர். இவரைப் பற்றிய கட்டுரைக்கு தலைப்பாக "புத்தமத பயங்கரவாதத்தின் முகம் என்று டைம் பெயரிட்டிருக்கிறது. 1982ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டப்படி ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் மீது கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக கொடுந்தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.
 இந்த வன்முறைகளுக்கு தலைமை தாங்கும் புத்த பிக்குவான விராதுவுக்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் முழு ஆதரவு அளிக்கின்றன. இது தொடர்பாக விவரிக்கும் கட்டுரையைத்தான் ஜூலை 1-ந் தேதியிட்ட டைம் இதழ் பதிவு செய்திருந்தது. ஆனால் இந்த டைம் இதழை தடை செய்திருப்பதாக மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் இ ஹ்டுட் அறிவித்துள்ளார்.

Wednesday, June 26

அல் அக்ஸா பள்ளிவாசலை தகர்த்து, யூத கோயிலை அமைக்க திட்டம்..?

  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஆக்கிரமிப்பு ஜெரூசலத்தின் புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்கு அருகில் இஸ்ரேல் புதிய அகழ்வு நடவடிக்கைகளை கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்ததாக பலஸ்தீன ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அல் அக்ஸா வளாகத்தின் தென்பகுதியில் இருக்கும் அல் மகாரிப் வாயில், கிழக்கு பகுதியில் இருக்கும் உமையத் அரண்மனைகள் மற்றும் வதி ஹில்வா நுழைவாயில் பகுதிகளில் அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நன்கொடை மற்றும் மரபுரிமைகளுக்கான அல் அக்ஸா ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. புதிய அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள மூன்று தளங்களும் ஜெரூசலத்தின் பழைய நகரில் அமைந்துள்ளது.

Saturday, May 18

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்க இஸ்ரேல் தயார்!

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்குவதற்கு முயற்சியை இஸ்ரேல் துவக்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் ஈரானை தாக்க இருப்பதை முன்னிட்டு வளைகுடா பகுதியில் தங்களின் தளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இச்செய்தியை வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
திமோன்னாவில் உள்ள அணுசக்தி நிலையத்தை இம்மாதம் இஸ்ரேல் மூடியதற்கு காரணம் தாக்குதலுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது. ஈராக் உள்பட ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகும் தளங்கள் மற்றும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தூதரக அதிகாரிகள், ஃபெடரல் அதிகாரிகள், ஒப்பந்த அதிகாரிகள் உள்பட 15 ஆயிரம் அமெரிக்க குடிமகன்கள் தற்பொழுது ஈராக்கில் உள்ளனர். மேலும் குவைத்தில் 15 ஆயிரம் ராணுவத்தினர், கத்தரில் ராணுவ தளம், பாரசீக வளைகுடாவில் விமானம் தாங்கி கப்பல்கள் ஆகியன ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்புள்ளது. தாக்குதல் துவங்கினால் அமெரிக்காவின் மையங்கள் எதனையும் சும்மா விடமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாக்குதல் நடத்தினால் உருவாகும் எதிர்விளைவுகளை குறித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டாவும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கூடுதல் தடைகளை விதித்து ஈரானுக்கு நிர்பந்தம் அளிப்பதன் மூலம் தங்கள் வழியில் கொண்டுவரலாம் என்பது அமெரிக்காவின் நோக்கமாகும். இவ்விவகாரங்களின் தீவிரத்தை குறித்து உணர்த்த கடந்த வியாழக்கிழமை ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

Thursday, May 16

ஹமாஸ் - பதா இணைந்து ஐக்கிய அரசாங்கம்


இன்னும் மூன்று மாதங்களுக்குள் பலஸ்தீனில் ஹமாஸ்- பதாவுக்கு இடையில் ஐக்கிய அரசொன்றை அமைக்க இரு தரப்பும் இணக்கம் கொண்டுள்ளன. 
கடந்த செவ்வாய்க்கிழமை கெய்ரோவில் இடம்பெற்ற பதா- ஹமாஸ் பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டதாக ஹமாஸ் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கெய்ரோ பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு கிடைத்துள்ளது. எதிர்வரும் ஜுலைக்குள் இரு தரப்பு சமரச உடன்படிக்கையை நடைமுறைக்குக் கொண்டவர இணக்கம் ஏற்பட்டது என பலஸ்தீனின் மான் செய்திச் சேவைக்கு ஹமாஸ் உறுப்பினர் மூஸா அபூ மர்சூக் குறிப்பிட்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பதா- ஹமாஸ¤க்கு இடையிலான சமரச உடன்படிக்கைக்கு அமைய, காபந்து அரசொன்று அமைக்கப்பட்டு 12 மாதங்களுக்குள் 6 பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த இணக்கம் காதணப்ப ட்டிருந்தது. 
எனினும் இந்த சமரச உடன்படிக்கை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. எனினும் புதிய ஐக்கிய அரசில் இடம்பெறும் உறுப்பினர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என மூஸா அபூ மர்சூக் குறிப்பிட்டார். ஆனால் எதிர்வரும் காலத்தில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இரு ஆணைகளைப் பிறப்பிக்கவுள்ளதாக பதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒன்று தேசிய அரசை அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்பதோடு தேர்தல் திகதியும் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

Friday, May 10

55 வருடங்களின் பின்னர் ஷெய்க் கர்ளாவி காஸாவில் கால் பதித்தார்

இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி இன்று பலஸ்தீனின் காஸா மண்ணில் கால் பதித்தார்.
நேற்றைய தினம் கட்டாரிலிருந்து தனியான விமானம் மூலம் புறப்பட்ட அவர் எகிப்து எல்லை வழியாக காஸாவுக்குள் பிரவேசித்தார். 
 
ஷெய்க் கர்ளாவியுடன் 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 மார்க்க அறிஞர்களுடன் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
 

Wednesday, May 8

தமிழகத்தில் பான்பராக் விற்பனை தடை செய்யப்படுகிறது - ஜெயலலிதா


தமிழகத்தில் பான் பராக், குட்கா தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். மேலும் புகையிலைப் பொருட்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்றும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உணவு பொருளில் புகையிலை கலப்பது குற்றமாகும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களிடையே குறிப்பாக பெற்றோர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை புத்த பிக்குகள் நிறுத்த வேண்டும் - தலாய் லாமா

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை புத்த பிக்குகள் நிறுத்த வேண்டும் - தலாய் லாமா


May 8, 2013  03:03 pm
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை புத்த பிக்குகள் கைவிட வேண்டும் என திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

மியான்மார் மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள வன்முறைகளுக்கு பௌத்தர்களும் புத்த பிக்குகளுமே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, நோபல் பரிசு பெற்ற புத்த மதத் மதத்தலைவர் தலாய் லாமா மெர்ரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் 15,000 பேருக்கு மத்தியில் நேற்றிரவு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மதத்தின் பெயரில் நடந்துள்ள இந்த வன்முறை, நினைத்து பார்க்க முடியாத வருத்தத்தை தருவதாகவும் புத்த மத்தினர் இந்த வன்முறையில் இணைத்து பேசப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானதெனவும் அவர்கள் புத்தரின் அகிம்சை வழியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தலாய் லாமா கூறியுள்ளார்.

மேலும் உலக முழுமைக்கும் ஒரே மனித குலம் படைக்கும் பொறுப்பு இளைஞர்களிடத்தில் இருக்கிறது என்று தலாய் லாமா தெரிவித்தார்.

(அத தெரண - தமிழ்)

Tuesday, May 7

பர்மாவில் புத்த பிக்கு ஒருவரை கொன்றதாக ஆறு முஸ்லீம்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

 
பர்மாவில் புத்த பிக்கு ஒருவரை கொன்றதாக ஆறு முஸ்லீம்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
கடந்த மார்ச் மாதத்தில் பர்மாவின் மெயிக்டிலா நகரில் பல நாட்கள் நடந்த வன்செயல்களில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலோனோர் முஸ்லீம்கள்.
 
இந்த சம்பவங்கள் தொடர்பாக பௌத்தர்கள் ஒருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதியப்படவில்லை.
 

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - இம்ரான்கான் உயிர் தப்பினார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான், பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் என்ற கட்சியை தொடங்கி, அதன் தலைவராக உள்ளார்.  பாராளுமன்ற தேர்தலையொட்டி, பெஷாவர் நகரில் இருந்து 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மர்டான் மாவட்டத்தில் இம்ரான் கான் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்தவாகள் கூட்டத்தினரை நோக்கி கையெறி குண்டுகளை வீசினர்.
 குண்டு வெடித்து சிதறியதும் கூட்டத்தினர் உயிர் பயத்துடன் மூலைக்கு ஒருவராக ஓடினார்கள். இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். இம்ரான்கான் உயிர் தப்பினார்
 இதே போல், பெஷாவரில் உள்ள இம்ரான் கான் கட்சி அலுவலகத்தின் மீதும் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Sunday, April 28

ரஷ்யாவில் பள்ளிவாசலுக்கு வந்த 140 பேர் கைது





அமெரிக்காவின் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் நடைபெற்ற வெடிவிபத்தில் ஈடுபட்ட இருவரும், ரஷ்யாவின் செச்ன்யாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று செய்திகள் வெளியான. 

இந்தநிலையில் நேற்று ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த இஸ்லாமியர்களில் 140 பேரை தீவிர செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கருதி ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும், கைது செய்துள்ளனர். 

இவர்களில் 30 பேர், தங்கள் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் இங்கு வந்துள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாஸ்டன் சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பாஸ்டன் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கருதப்படும் சகோதரர்களின் தாயார் சுபைதா, அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளால், 18 மாதங்களுக்கு முன்னால் குறிக்கப்பட்டவர்களின் வரிசையில் இடம்பெற்றிருந்ததாகவும் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவருவதால் தகவல்கள் வெளியிடப்படக்கூடாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

ஆயினும், அவர்களுடைய தாயார் இதனை மறுத்துள்ளார்.  ரஷ்யக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட மாவட்ட அலுவலகத்தில் இருந்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

Monday, April 15

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் புதிய வழி - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


பொதுவாக, நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது கணையமாகும். இதில் உள்ள பீட்டா அணுக்கள் உற்பத்தி செய்யும் இன்சுலின் திரவம், இந்த செயலைப் புரிகின்றது. இந்த செயல்பாடு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சாண்டியாகோ மருத்துவக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு, தற்போது மற்றொரு புதிய முயற்சிக்கும் வித்திட்டுள்ளது. சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களுக்கு, இந்த பீட்டா அணுக்களின் செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதன் மூலம், இந்நோய் வராமல் தடுக்கலாம் என்பதே அந்தப் புதிய முயற்சி ஆகும்.

பிராக்டல்கைன் எனப்படும் புரதம் கலந்த மெல்லிய திசுப்படலத்தை பீட்டா அணுக்களின் மீது பொருத்தினால், அவை புரத சத்தை ரத்தத்தில் கலக்கச் செய்து, இன்சுலினை சுரக்க உதவி புரியும் என்பதே விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். இதற்கு முன்னால் இந்த முயற்சி பற்றி எதிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் இது ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு என்றும் பேராசிரியர் ஒலேப்ஸ்கி கூறுகின்றார்.

இன்சுலின் திரவ உற்பத்தியும் குளுக்கோஸ் கட்டுப்படுத்தப்படுதலும், சர்க்கரை நோய் வராமலிருக்கத் தேவையான முக்கிய விஷயங்கள் ஆகும். இதனை பிராக்டல்கைன் படலம் திறம்பட செய்வதோடு வேறு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பது இதன் சிறப்பாகும்.

இலங்கைக்கான உதவியில் 20 வீதம் குறைப்பு: அமெரிக்கா.




இலங்கைக்கான அமெரிக்காவின் உதவியில் 20 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி முன்மொழிந்துள்ளார்.

மனித உரிமைகள், மீள்கட்டுமானம், அரசியல் ஒன்றிணைவு ஆகியன தொடர்பாக உண்டாகியுள்ள கசப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக்கான அமெரிக்காவின் உதவியில் குறைப்பினை மேற்கொள்வதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கெரியின் வரவு செலவுத்திட்ட ஆலோசனையில் தென் ஆசிய நாடொன்றுக்கான ஆகவும் கூடிய உதவி குறைப்பாக இது அமைவதாக கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு 11 மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இது 2012ஆம் ஆண்டு அமெரிக்காவினால் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட உதவியுடன் ஒப்பிகையில் 20 சதவீத உதவி வெட்டை காட்டுகின்றது.

ஜட்டி தெரியும்படி ஜீன்ஸ் அணிய அமெரிக்காவில் தடை


அமெரிக்காவின், லூசியானா மாகாணத்தில், ஜட்டி தெரியும்படி இடுப்புக்கு கீழ் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் ஜட்டி தெரியும்படி, இடுப்புக்கு கீழ் ஜீன்ஸ் அணிவது, தற்போதைய பேஷனாக உள்ளது (?)  இளம்பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
அமெரிக்காவின், லூசியானா மாகாணத்தில் உள்ள டெரிபோன் பரிஷ் என்ற நகரில், ஜட்டி தெரியும்படி ஜீன்ஸ் அணிவதை, அந்த ஊர் பெரியவர்கள், ஒழுக்க குறைபாடாக கருதுகின்றனர். ஜட்டி தெரியும்படி ஜீன்ஸ் அணிந்து செல்லும் பெண்ணுக்கு பின், பல இளைஞர்கள் சுற்றுவதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, பரிஷ் நகரில், ஒழுக்க குறைபாடாக ஜீன்ஸ் அணிபவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை ஆதரித்து எட்டு உறுப்பினர்களும், எதிர்த்து ஒருவரும் ஓட்டு போட்டார். தீர்மானம் வெற்றி பெற்றதால், ஜட்டி தெரியும்படி ஜீன்ஸ் அணிய தடை விதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. முதல் முறையாக இந்த தவறு செய்பவர்களுக்கு, 7.500 ( ரூபாய்) அபராதமும், இரண்டாவது முறை தவறு செய்தால், 15.000 ரூபாய் அபராதம் மற்றும், 16 மணி நேரம், சமூக சேவையும் செய்ய வேண்டும், என்ற தண்டனை வரையறுக்கப்பட்டு உள்ளது.

Sunday, April 7

சவூதியில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு ஈரான் அதிபருக்கு அழைப்பு - சவூதி மன்னர் அப்துல்லாஹ்

சவூதியில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு ஈரான் அதிபருக்கு அழைப்பு - சவூதி மன்னர் அப்துல்லாஹ்.............!! 

///இஸ்லாத்திலேயே மிகப்பெரும் கொள்கை வேறுபாட்டை கொண்ட இந்த தலைவர்களே முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமைக்காக ஒன்றினைகிறார்களே , நாம் ஏன் இன்னும் இயக்கத்திற்காக அடிபட வேண்டும் ? 
சிந்திப்போம் , செயல்படுவோம்.///

சவூதி அரேபியாவில் புனித நகரமான மக்காவில் இம்மாதம் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் அவசரமாக நடைபெறும் இஸ்லாமிய உச்சி மாநாட்டிற்கு ஈரான் அதிபர் அஹமதி நிஜாத்திர்க்கு இரு புனித பள்ளியின் ஊழியரும், சவூதி அரேபிய அரசருமான அப்துல்லாஹ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார் என செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது, 

அது பற்றி ஈரான் அதிபருக்கு சவூதி மன்னர் கடிதம் எழுதியதாக நேற்று அறிவித்துள்ளது, இந்த அழைப்பு முஸ்லிம் உலகில் மிகப்பெரிய பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது, இந்த மாநாடு சாதாரண மாநாடு அல்ல, முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை, ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் தற்போது முஸ்லிம் உலகம் சந்தித்து வரும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது, 

இம்மாநாட்டின் அறிவிப்பை தொடர்ந்து உலக நாடுகளின் கவனம் சவூதியை நோக்கியே திரும்பியிருந்தது மேலும் ஈரானுக்கான அழைப்பில் மேலும் மத்திய கிழக்கில் பரபரப்பு தொற்றிவிட்டது, 

இந்த மாநாட்டில் பல்வேறு முஸ்லிம் நாடுகள் மற்றும் OIC யை சேர்ந்த 57 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, 

மாஷா அல்லாஹ், அல்லாஹ் இந்த மாநாட்டை சிறந்த மாநாடாக ஆக்கி அருள் புரிவானாக...........!!


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சவூதி அரேபியாவில் புனித நகரமான மக்காவில் இம்மாதம் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் அவசரமாக நடைபெறும் இஸ்லாமிய உச்சி மாநாட்டிற்கு ஈரான் அதிபர் அஹமதி நிஜாத்திர்க்கு இரு புனித பள்ளியின் ஊழியரும், சவூதி அரேபிய அரசருமான அப்துல்லாஹ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார் என செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது,

அது பற்றி ஈரான் அதிபருக்கு சவூதி மன்னர் கடிதம் எழுதியதாக நேற்று அறிவித்துள்ளது, இந்த அழைப்பு முஸ்லிம் உலகில் மிகப்பெரிய பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது, இந்த மாநாடு சாதாரண மாநாடு அல்ல, முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை, ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் தற்போது முஸ்லிம் உலகம் சந்தித்து வரும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது,

இம்மாநாட்டின் அறிவிப்பை தொடர்ந்து உலக நாடுகளின் கவனம் சவூதியை நோக்கியே திரும்பியிருந்தது மேலும் ஈரானுக்கான அழைப்பில் மேலும் மத்திய கிழக்கில் பரபரப்பு தொற்றிவிட்டது,

இந்த மாநாட்டில் பல்வேறு முஸ்லிம் நாடுகள் மற்றும் OIC யை சேர்ந்த 57 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,

மாஷா அல்லாஹ், அல்லாஹ் இந்த மாநாட்டை சிறந்த மாநாடாக ஆக்கி அருள் புரிவானாக...........!!