இலங்கைக்கான உதவியில் 20 வீதம் குறைப்பு: அமெரிக்கா.
இலங்கைக்கான அமெரிக்காவின் உதவியில் 20 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி முன்மொழிந்துள்ளார்.
மனித உரிமைகள், மீள்கட்டுமானம், அரசியல் ஒன்றிணைவு ஆகியன தொடர்பாக
உண்டாகியுள்ள கசப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக்கான
அமெரிக்காவின் உதவியில் குறைப்பினை மேற்கொள்வதற்கான முன்மொழிவு
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கெரியின் வரவு செலவுத்திட்ட ஆலோசனையில் தென் ஆசிய நாடொன்றுக்கான ஆகவும்
கூடிய உதவி குறைப்பாக இது அமைவதாக கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு 11
மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இது 2012ஆம் ஆண்டு அமெரிக்காவினால் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட உதவியுடன் ஒப்பிகையில் 20 சதவீத உதவி வெட்டை காட்டுகின்றது.
"நாம் வடக்கிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கும் வழமையான வாழ்வுக்கு திரும்பவும்
மீள் கட்டுமானதத்தில் உதவவும் பெரிதும் முயற்சி செய்தோம். ஆனால் நாம்
ஆதரவளிக்க முயன்ற பல திட்டங்களில் அரசாங்கம் குறிப்பாக இராணுவம் தலையீடு
செய்தது. எனவே எம்மால் அந்த திட்டங்களை தொடர முடியவில்லை" என ஒரு சிரேஸ்ட
இராஜாங்க திணைக்கள அதிகாரி குறிப்பிட்டார்.
"இலங்கை நடுத்தர
வருமானமுள்ள ஒரு நாடு. இங்கு எமக்கு திட்டமிடுதலிலும் கஷ்டங்கள் உள்ளன.
எனவே தனது சொந்த மூலவளங்களை கொண்ட நாடான இங்குதான் நாம் உதவியை குறைக்க
வேண்டும்" என தனது பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அதிகாரியொருவர்
தெரிவித்தார்.
மாலைதீவுக்கு கணிசமான உதவி அதிகாரிப்பை கொரி
முன்மொழிந்துள்ளார். அமெரிக்க உதவியில் பெரும்பகுதி நீதித்துறை
சீர்த்திருத்தம் தொடர்பான திட்டங்களுக்கே செலவளிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment