Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Monday, April 15

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் புதிய வழி - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


பொதுவாக, நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது கணையமாகும். இதில் உள்ள பீட்டா அணுக்கள் உற்பத்தி செய்யும் இன்சுலின் திரவம், இந்த செயலைப் புரிகின்றது. இந்த செயல்பாடு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சாண்டியாகோ மருத்துவக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு, தற்போது மற்றொரு புதிய முயற்சிக்கும் வித்திட்டுள்ளது. சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களுக்கு, இந்த பீட்டா அணுக்களின் செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதன் மூலம், இந்நோய் வராமல் தடுக்கலாம் என்பதே அந்தப் புதிய முயற்சி ஆகும்.

பிராக்டல்கைன் எனப்படும் புரதம் கலந்த மெல்லிய திசுப்படலத்தை பீட்டா அணுக்களின் மீது பொருத்தினால், அவை புரத சத்தை ரத்தத்தில் கலக்கச் செய்து, இன்சுலினை சுரக்க உதவி புரியும் என்பதே விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். இதற்கு முன்னால் இந்த முயற்சி பற்றி எதிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் இது ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு என்றும் பேராசிரியர் ஒலேப்ஸ்கி கூறுகின்றார்.

இன்சுலின் திரவ உற்பத்தியும் குளுக்கோஸ் கட்டுப்படுத்தப்படுதலும், சர்க்கரை நோய் வராமலிருக்கத் தேவையான முக்கிய விஷயங்கள் ஆகும். இதனை பிராக்டல்கைன் படலம் திறம்பட செய்வதோடு வேறு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பது இதன் சிறப்பாகும்.

Thursday, March 21

பயணப் பை போல் மடித்து எடுத்துச் செல்லக்கூடிய ஸ்கூட்டர்

 
பயணப்பை போன்று மடித்து வைத்துக்கொண்டு எடுத்துச் செல்லக்கூடிய ஸ்கூட்டர் ஒன்றை ஹங்கேரிய நிறுவனமொன்று தயாரித்துள்ளது. 

மின்சார சக்தியினால் இயங்கும் ஸ்கூட்டர் இதிலுள்ள பற்றரியை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 35 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யலாம்.

மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்ய முடியும். இதன் எடை 25 கிலோகிராம். உரிய இடத்தை அடைந்தவுடன் இரண்டாக மடித்து ஒரு பயணப்பையை போன்று எடுத்துச் செல்லாம். 

Monday, March 11

SMS மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம் ..!




நாளுக்கு நாள் விஞ்ஞானிகளின் புதுப்புது கண்டுபிடிப்பு நம்மை அதிசயிக்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் அனைவரும் விரும்பும் செல்போன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. தகவல் தொடர்பு, பொழுது போக்கு என அனைத்து அம்சங்களும் உள்ளது. இதில் செல்போனை ரீசார்ஜ் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு போன் செய்யலாம், ஆன் லைனிலும் ரீசார்ஜ் செய்யலாம்.

ஆனால் செல்போன் பேட்டரி தீர்ந்துவிட்டால் அதை சார்ஜ் செய்ய எங்காவது மின்சார சுவீட்சைத்தான் தேடிப்போக வேண்டும். இனி இந்த சிரமம் வேண்டாம். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் தானாகவே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.

லண்டனைச் சேர்ந்த பப்பல்லோ கிரிட் நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எஸ்.எம்.எஸ். செய்த உடனே சூரியஒளி மின்சாரம் மூலம் செல்போன் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். மின்சாரம் இல்லாத ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி முதல் கட்டமாக ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.