பயணப்பை போன்று மடித்து வைத்துக்கொண்டு எடுத்துச் செல்லக்கூடிய
ஸ்கூட்டர் ஒன்றை ஹங்கேரிய நிறுவனமொன்று தயாரித்துள்ளது.
மின்சார சக்தியினால் இயங்கும் ஸ்கூட்டர் இதிலுள்ள பற்றரியை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 35 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யலாம்.
மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்ய முடியும். இதன் எடை 25 கிலோகிராம். உரிய இடத்தை அடைந்தவுடன் இரண்டாக மடித்து ஒரு பயணப்பையை போன்று எடுத்துச் செல்லாம்.
ஸ்கூட்டரை மடிக்கும்போது, கிறீஸ், முதலானவை படிந்த பாகங்கள் உட்புறத்தில் இருக்கும் விதமாக இது வடிமைக்கப்பட்டுள்ளது.
அன்ட்ரோ குறூப் எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டருக்கு Moveo என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் விலை சுமார் 380,000 இலங்கை ரூபாவாகும். அடுத்த வருட முற்பகுதியில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் எனவும் ஆரம்ப விற்பனைகள் இணையத்தளம் மூலம் நடைபெறும் எனவும் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டமாஸ் ஸ்லேஸாக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment