தமிழகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டது போன்று முஸ்லிம்களுக்கு நடந்திருந்தால் இன்று நாட்டில் பாரிய கலவரம் ஒன்றே வெடித்திருக்கும் என்று மத்தியமாகாண அங்கத்தவர் துசார வர்ணதிலக தெரிவித்தார்.
தமிழகத்தில் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டமையை கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவத்தார். சென்னை மத்திய ரயில் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளான பிக்குவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
முஸ்லிம்களை நிந்திக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டதுக்கும் மேற்குலக நாடு ஒன்றில் கார்டுன் ஒன்று வெளியிடப்பட்டதுக்கும் எதிராக முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை. பௌத்த தர்மத்தின்படி மிக அமைதியாக எமது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். இதேவேளை எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் இருக்க இந்தியா நடவடிக்கை எடுக்க என்பதை வலியுறுத்துகின்றோம்.
பௌத்த பிக்கு குருவானவர் விரட்டி விரட்டி தாக்கப்பட்ட போதும் அவர் தான் பெற்ற பயிற்சிகளின் அடிப்படையில் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட்டு பௌத்த தர்மத்தின் மகிமையை பாதுகாத்துள்ளார். குருவானவர் நினைத்திருந்தால் எதிர் நடவடிக்கைகளை காட்டி இருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என்றார்.


No comments:
Post a Comment