நாட்டில் இஸ்லாமிய உடைகள் அணிவோர் தொகை அதிகரித்து வருவதாக
தெரிவிக்கப்படுகிறது. இலங்கை முஸ்லிம்களின் பெரும்பாலனவர்கள் இஸ்லாமிய
வரையறைக்கு உட்பட்ட விதத்தில் உடையணிவது வழக்கமாக இருந்த போதும் . தற்போது நாட்டில்
ஏற்பட்டுள்ள ஹபாயா , ஹிஜாப் ,நிகாப் ஆகிவற்றுக்கு எதிரான அத்துமீறல்கள் ,
ஹபாயா , நிகாக்குக்கு எதிரான மோசமான மதவெறி ,இனவெறி அமைப்புக்களின்
பிரசாரங்கள் ஆகியவற்றின் பின்னர் . மேலும் அதிகரித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பல்கலை கழகங்களில் இந்த
மாற்றத்தை தெளிவாக அவதானிக்கக் கூடியாதவுள்ளதாக பல்கலை கழக மாணவர்கள்
தெரிவிக்கின்றனர் , அதேவேளை உயர்தர மாணவர்கள் மத்தியிலும் இந்த அதிகரிப்பை
அவதானிக்கக் முடிகிறது குறிப்பாக கொழும்பு ,கண்டி நகரங்களில் சனி மற்றும்
ஞாயிற்று கிழமைகளில் தனியார் வகுப்புக்கு வரும் மாணவியர்கள் மத்தியில் இது
அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது.
அண்மையில் கொழும்பு கோட்டை மத்திய ரயில்
நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவிகள் நான்கு பேரின் அயாயக்களை இழுத்த
சம்பவத்தின் பின்னர் குறித்த சட்டக் கல்லூரியின் இஸ்லாமிய உடையை
முழுஅளவில் அணியாத மாணவிகளும் தற்போது இஸ்லாமிய முறையிலான உடைகளை அணிந்து
வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைகாலமாக நாட்டில் பல பகுதிகளில் ஹபாயா ,
ஹிஜாப் ,நிகாப் அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட
அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது . இதற்கு பெளத்த கடுபோக்கு
மற்றும் சிங்கள பெளத்த இனவாத அமைப்புக்களின் விசம பிரசாரம் பிரதான தூண்டும்
காரணியாக இருப்பதாக சுட்டிக் காட்டப் படுகிறது .
அண்மையில் , கொழும்பு மாவாட்டத்தின்
கொழும்பு கோட்டை , பொரல , தெஹிவல , கொட்டஹேன ஆகிய பகுதிகள் இஸ்லாமிய
உடையில் நடமாடிய மாணவியர் , குடும்ப பெண்களுக்கு எதிராக சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளன, அதேபோன்று மாத்தறை திக்குவல , பொலநறுவை மல்லம்பிட்டி ஆகிய
இடங்களிலும் இஸ்லாமிய உடையில் நடமாடிய பெண்களுகெதிராக அடாவடிகள்
இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .
அதேவளை கிழக்கு மாகாணத்தில் பரவலாக ஹபாயா அணிவோர் தொகையின் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாகவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது .
No comments:
Post a Comment