Thursday, March 21

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 2.30 க்கு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடத்தப்படவுள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 31 நாடுகளின் இணை அனுசரணையுடன் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீது வாக்கெடுப்பைக் கோருவது என இலங்கை தீர்மானித்துள்ள நிலையிலேயே வாக்கெடுப்பை நடத்துவதற்கான நேரம் குறிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தின் மீது ஜெனிவா நேரப்படி இன்றுக் காலை 10 மணியளவில் (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணி) வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்போது  தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து, இலங்கைக்கு  ஆதரவளிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்;.

No comments:

Post a Comment