Thursday, March 21

ஜாதிக ஹெல உறுமயவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது


sampika-ranawaka_2இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள மாலைதீவைச் சேர்ந்தவர்களை நாடுகடத்த வேண்டும் என்ற ஜாதிக ஹெல உறுமயவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.
எனினும் இந்த கோரிக்கையை ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க நிராகரித்துள்ளார்.இந்த கருத்து அமைச்சருடைய தனிப்பட்ட கருத்து.எனினும் இது அரசாங்கத்தின் நிலைப்பாடு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் எனவே இலங்கையில் இருந்து மாலைதீவை சேர்ந்தவர்கள் நாடுகடத்தப்பட மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment