Thursday, March 21

யாரால் நிர்ப்பந்திக்கப்பட்டார்: ரிஸ்வி முப்தி தெளிவுபடுத்த வேண்டும்: முஜிபுர்

MujiburRahuman





ஹலால் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவித்துள்ள ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தன்னை நிர்ப்பந்தித்தது யார் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என மேல்மாகாண சபையின் ஐ.தே.க.உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில் இன்றுகாலை முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஊடாகவியலாளர் மாநாடு  இடம்பெற்றது.
இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே   இந்த இயக்கத்தின் தலைவரும் மாகாண சபை உறுப்பினறுமான முஜீபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

உலமா சபை குறித்த முடிவினை நிர்ப்பந்தத்தின் பேரில் எடுத்ததா என்பது எனக்கு தெரியாது. அப்படியேதும் இருப்பின் உலமா சபையின் தலைவரே அது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.
பொது பல சேனா அமைப்பின் அனைத்து குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றவை.ஹலால் விடயத்தில் பொது பல சேனவிற்கு எந்த பிரச்சினையுமில்லை. ஏனென்றால் ஐக்கிய தேசிய கட்சியினரை பொது பல சேனவினர் நாடாளுமன்றத்தில் சந்தித்தபோது முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் என்று தெரிவித்தனர்.
எனினும், சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக ஹலால் விடயத்தினை முன்வைத்து பிரபயல்யடைந்து விட்டனர். இதனால் தற்போது பொது பல சேனவின் பிரசாரம் ஹிஜாப் மற்றும் முஸ்லிம்களின் வியாபாரம் வரை விரிவடைந்து செல்கின்றது.
நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இந்த போலி பிரச்சாரத்தை இவர்களே தூண்டிவிடுகின்றனர். எனவே முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர்களே பதில் சொல்லவேண்டும். என தெரிவித்தார்.

No comments:

Post a Comment