ஆனால் செல்போன் பேட்டரி
தீர்ந்துவிட்டால் அதை சார்ஜ் செய்ய எங்காவது மின்சார
சுவீட்சைத்தான் தேடிப்போக வேண்டும். இனி இந்த சிரமம் வேண்டாம். ஒரு எஸ்.எம்.எஸ்.
அனுப்பினால் போதும் தானாகவே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.
லண்டனைச் சேர்ந்த பப்பல்லோ கிரிட்
நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எஸ்.எம்.எஸ். செய்த உடனே
சூரியஒளி மின்சாரம் மூலம் செல்போன் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். மின்சாரம் இல்லாத
ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி
முதல் கட்டமாக ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக அங்கு சூரிய ஒளி மின்சார
நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் உடனே
சார்ஜ் ஆகும் வகையில் நவீன தொழில்நுட்பம்
பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக செல் போன் வைத்திருப்பவர்கள்
தங்கள் இருப்பிடங்களில் டெவிஸ் கருவி பொருத்தி இருக்க வேண்டும்.
அதன்மூலம் சூரியஒளி மின்சார நிலையத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு
இது செயல்படுத்தப்படுகிறது.
ஒரு போனில் பேட்டரி சார்ஜ் செய்ய 1 மணி நேரம் ஆகும்.
இதற்காக அதிக செலவு ஆகாது என்று பப்பல்லோ கிரிட் நிர்வாகி டேனியல் பெக்கேரா
தெரிவித்தார்.
No comments:
Post a Comment