Monday, March 11

உலமா சபை முஸ்லிம்களின் ஹலால் உரிமையை மீறுகிறது : பொது பல சேனா







அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையானது முஸ்லிம்களின் ஹலால் உரிமையை மீறுவதாக பொது பல சேனாவின் தேசிய இணைப்பாளர் டிலாந்த விதானகே தெரிவித்தார்.
 
உள்நாட்டில் உற்பத்திப் பொருட்களிலிருந்து ஹலால் சான்றிதழை நீக்குவது என உலமா சபை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில்  விடிவெள்ளியிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
ஹலால் உணவுகளை உண்ணும் உரிமை முஸ்லிம்களுக்கு உள்ளது. உலமா சபை தற்சமயம் மேற்கொண்டுள்ள தீர்மானமானது முஸ்லிம்களின் உரிமையை மீறுவதாக உள்ளது.
 
இதனை ஒரு தந்திரமாகவே பொது பல சேனா பார்க்கிறது.
 
ஏனெனில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கக்க வேண்டிய  உலமா சபையே அவர்களின் உரிமையை மீறுகின்றது. 
 
 
இது உலமா சபையின் வாராந்த நாடகம். முன்னதாக ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்கள் இல்லாத பொருட்கள் என ஒரு எண்ணக்கருவை முன்வைத்தார்கள். அதற்கு அடுத்த வாரம் ஹலால் சான்றிதழை அரசிடம் ஒப்படைக்கப்போவதாக தெரிவித்தனர். இந்நிலையில் இவ்வாரம் அதனை உள்ளூர் உற்பத்திகளிளிருந்து அகற்றிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
 
நாம் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை மதிக்கிறோம். அவர்களுடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
உலமா சபையின் ஹலால் பொறிமுறை தொடர்பிலேயே நாம் கேள்வி எழுப்பினோம். எமக்கும் உலமா சபைக்கும் இடையிலேயே பிரச்சினை உள்ளது.
தற்சமயம் உலமா சபை முஸ்லிம்களின் ஹலால் உரிமையை மீறியுள்ளது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment