Monday, March 11

கொழும்பு துறைமுகத்தில் மோதல்: பிலிபைன்ஸ் பிரஜை வெட்டிக் கொலை!

கொழும்பு துறைமுகத்தில் மோதல்: பிலிபைன்ஸ் பிரஜை வெட்டிக் கொலை!



கொழும்பு துறைமுக பண்டாரநாயக்க பகுதியில் நங்கூரம் இடப்பட்டுள்ள தாய்வான் நாட்டுக்குச் சொந்தமாக கப்பலில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கப்பலில் இருந்த சேவையாளர்கள் இடையே இன்று (11) அதிகாலை 12.45 - 02 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் இம்மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோதலில் 37 வயதுடைய பிரேபின் மெகலோன்ஸ் பொனியுஸ் என்ற பிலிபைன்ஸ் நாட்டு பிரஜை கொல்லப்பட்டுள்ளார்.

புதுக்கடை இலக்கம் 6 நீதவான் மரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இந்த மோதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பிலிபைன்ஸ் பிரஜைகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து கொழும்பு துறைமுக பொலிஸார் விசாரதணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அத தெரண - தமிழ்)

No comments:

Post a Comment