பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான், பாகிஸ்தான்
தெரீக்-இ-இன்சாப் என்ற கட்சியை தொடங்கி, அதன் தலைவராக உள்ளார். பாராளுமன்ற
தேர்தலையொட்டி, பெஷாவர் நகரில் இருந்து 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள
மர்டான் மாவட்டத்தில் இம்ரான் கான் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்தவாகள் கூட்டத்தினரை நோக்கி கையெறி குண்டுகளை வீசினர்.
குண்டு வெடித்து சிதறியதும் கூட்டத்தினர் உயிர் பயத்துடன் மூலைக்கு
ஒருவராக ஓடினார்கள். இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். இம்ரான்கான்
உயிர் தப்பினார்
இதே போல், பெஷாவரில் உள்ள இம்ரான் கான் கட்சி அலுவலகத்தின் மீதும் நேற்று
வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம்
ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment