அசாத் சாலிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள
18 முறைப்பாடுகள் விசாரணை செய்து முடிக்கப்பட்டதும் அவர் விடுதலை
செய்யப்படுவார் என தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன்
ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்குச் சென்று இலங்கைக்கு
எதிராக ஊடகம் ஒன்றிற்கு வெளியிட்ட கருத்து தொடர்பில் அசாத் சாலியிடம்
விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
ஒரு நாடு தொடர்பில் இன்னொரு நாட்டிற்குச்
சென்று கருத்து வெளியிடுவது நியாயமான ஒன்று அல்ல எனவும் முஸ்லிம்கள் நாட்டை
காட்டிக் கொடுக்கும் வகையில் கருத்து வெளியிடுவர் என்று எங்கும்
சொல்லப்படவில்லை எனவும் ஹுலுகல்ல தெரிவித்தார்.
சர்வதேச மட்டத்தில் அசாத் சாலி
வெளியிட்டுள்ள அந்த கருத்து உள்ளிட்ட 18 முறைப்பாடுகள் தொடர்பில்
குற்றத்தடுப்புப் பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்
அசாத் சாலிக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதெனவும்
லக்ஷமன் ஹுலுகல்ல குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment