Monday, May 20

கராச்சி மறுவாக்குப் பதிவில் இம்ரான் கானின் கட்சி வெற்றி

 
பாகிஸ்தானில் கராச்சி நகரில் நடத்தப்பட்ட மறுவாக்குப் பதிவில் இம்ரான் கானின் பீடிஐ கட்சி முக்கிய தொகுதியில் வெற்றிபெற்றுள்ளதை அடுத்து, அங்கு தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாகிஸ்தானில் நடந்த பொதுத் தேர்தலின்போது, கராச்சி நகரில் நடந்த வன்முறைகள் மற்றும் வாக்கு மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து, அங்கு நடத்தப்பட்ட மறுவாக்குப் பதிவின் அதிகாரபூர்மற்ற முடிவுகளின் படி, பீடிஐ கட்சி கராச்சியின் வசதிகள் மிக்க தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.
 
பீடிஐ கட்சியின் துணைத் தலைவர் ஷாஹ்ரா ஷாஹித் ஹுசைன் கடந்த சனிக்கிழமை கராச்சியில் படுகொலை செய்யப்பட்ட நிலையிலேயே இந்த தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.
 
கராச்சியில் செல்வாக்குடன் இருந்த எம்கியூஎம் கட்சியின் தலைவர் அல்தாப் ஹுசைன் தான் இந்தக் கொலைக்கு காரணம் என்று இம்ரான் கான் சுமத்தும் குற்றச்சாட்டை அவர் மறுக்கிறார்.
 
கடந்த 11-ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரிப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி பெருவெற்றி பெற்றது.
இம்ரான் கானின் கட்சி பாகிஸ்தானின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது.   (பி.பி.சி )

No comments:

Post a Comment