Monday, May 20

நாடு பூராகவும் நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்


மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக நாளை ஒருநாள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் தயாராகி வருகின்றன. தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கும் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் இவர்கள் அணி திரள்கின்றனர்.
இந்த பணிப் பகிஷ்கரிப்பு தொடர்பில் சில தொழிற்சங்கங்கள்  தெளிவுபடுத்தியிருந்தன.
மின்சார சபையின் 27 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு என்ற வகையில் நாளை நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகி பகிஷ்கரிப்பில் இணைவதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் நடவடிக்கை குழு உறுப்பினர் ரஞ்ஜன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையிலும் தாம் ஈடுபடப்போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பணிப் பகிஷ்கரிப்பை சீர்குலைப்பதற்காக அரசாங்கம் பல்வேறு கீழ்த்தரமான உபாயங்களை பயன்படுத்தி வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறியுள்ளார்.
நாளை பாடசாலைகளுக்கு செல்லப்போவதில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சம்பளத்தை எதிர்பார்த்து அதிபர்களும் ஆசிரியர்களும் நாளை பாடசாலைக்குச் செல்லமாட்டார்கள் எனவும், நாளைய சம்பளத்தை நாளை மறுதினம் பெற்றுக் கொள்ளுமாறு ஆசிரியர்கள், அதிபர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment