ராஜபக்ஷ ரெஜிமென்ட் மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துவிட்டது : ரணில்
ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள்
எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க
போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர்
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை
இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்களின் எதிர்ப்பு
போராட்டத்தைக் கண்டு பயந்துவிட்டது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள தேசிய
தொழிற்சங்கப் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பினை
வெளிக்காட்ட வேண்டும்.

இந்த அரசாங்கம் மக்கள் விரோத செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது.
தற்போது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கத்
துணிந்து விட்டனர்.
எனவே, இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு எதிர்வரும் 2014 இல் எமக்கு
தேர்தல் ஒன்று அவசியமாகவுள்ளது. நாம் அதற்கான நடவடிக்கைகளை தற்போது
முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க வேலை நிறுத்தப்
போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நிலைதடுமாற
வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment