ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவாலேயே முறையான சமாதானம், தேசிய நல்லிணக்கம்
ஆகியவற்றை நாட்டில் ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்து உள்ளார் கொழும்பு
மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி.
அண்மைய கைதை தொடர்ந்து மிகுந்த பிரபலம் அடைந்தவர் இவர்.
கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசியபோதே நாட்டில் முறையான
சமாதானம், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றை கட்டியெழுப்ப மிகவும் பொருத்தமான
நபர் ஜனாதிபதியே ஆவார், எனென்றால் ராஜபக்ஸ குடும்பத்தில் வேறுபட்ட இனங்கள்,
வேறுபட்ட சமயங்கள் ஆகியவற்றை சேர்ந்த அங்கத்தவர்கள் உள்ளார்கள், ஆனால்
மிகவும் ஐக்கியமாகவும், சமாதானமாகவும் வாழ்கின்றார்கள், குடும்ப
உறுப்பினர்கள் மத்தியில் எவ்விதம் அமைதி, சமாதானம், ஐக்கிட்யம் ஆகியவற்றை
பேணுகின்றாரோ அவ்விதம் நாட்டு மக்களிடையே அமைதி, சமாதானம், ஐக்கியம்
ஆகியவற்றை ஏற்படுத்துகின்றமை ஜனாதிபதிக்கு இலகுவான காரியம் ஆகும் என்று
அசாத் சாலி தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment