இலங்கை
பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் முதலில் மகாவம்சத்தை வாசித்து
அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது என்று நவசமசமாஜக்
கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இலங்கை ஆதி முதலே தமிழ் மக்கள் வாழ்ந்த
நாடு. இதை மகாவம்சமே ஏற்றுக்கொண்டுள்ளது. விஜயன் கபடத்தனமாக அவனது
மாமன்மாரை கொன்றுவிட்டு நாட்டைக் கைப்பற்றினான். சிங்களவர்களும் 2500
வருடங்களாகவே இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த நாடு
சொந்தமானது. அதேபோல 200 வருடங்களுக்கு முன்னர் இந் நாட்டுக்கு கொண்டு வந்து
குடியேற்றப்பட்ட இந்திய தமிழர்களுக்கும் இந்த நாடு சொந்தமானது.
இராவணன் என்ற தமிழ் மன்னன் இந்த நாட்டை
ஆண்டான் என்று வரலாறு கூறுகின்றது. இதையெல்லாம் மறந்துவிட்டு இலங்கை சிங்கள
பெளத்தர்களின் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இக் கூற்று மேலும்
இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகளையே தோற்றுவிக்கும்.
No comments:
Post a Comment