பொதுபலசேனாவின்
கருத்து இந்நாட்டு அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகத்துக்கு
வழங்கப்பட்டுள்ள உரிமை, அந்தஸ்து போன்றவற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது
என்று முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான
எம்.ரீ. ஹஸனலி தெரிவித்தார்.
பொதுபலசேனா, அமைப்பு இலங்கை
பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு இதனை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு
இடமில்லை என்ற கூற்று தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
பொதுபலசேனாவின்
கருத்து அரசியலமைப்புக்கு விரோதமாக இருப்பதால். அரசாங்கம் இது தொடர்பில்
தெளிவான கருத்தொன்றை வெளியிட வேண்டும். இதற்கு அரசாங்கம் பதிலளிக்கத்
தவறினால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இதை ஆராய்ந்து
மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்களுக்கு சிறுபான்மைச்
சமூகத்தினர் பதிலளிக்கும்போது அவர்கள் வேறு காரணங்களைச் சொல்லி
சட்டத்தின்முன் நிறுத்தப்படுகிறார்கள். அவ்வாறான ஒரு முடிவுதான் அஸாத்
சாலிக்கு நடந்நது. எனவே இவ்வாறான அமைப்புக்களின் கருத்துக்கள் நாட்டு
மக்கள் மத்தியில் விரோதத்தை ஏற்படுத்துவதை தடுப்பதற்கு அரகாங்கம் தனது
தெளிவான நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment