இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முயற்சித்த என்கை் கைது செய்தார்கள்.
ஆனால் இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்த முயலும் பொதுபலசேனாவினர்
சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது நியாயமா என தேசிய ஐக்கிய முன்னணியின்
தலைவரும் முன்னாள் பிரதிமேயருமான அசாத்சாலி தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
என்னை மீண்டும் கைது செய்யுமாறும் நான் வீரனாக உள்ளே போய் பூனையாக வெளியே
வந்ததாகவும் பொதுபல சேனா கூறுகின்றது. நான் நாட்டில் தேசிய நல்லுறவை
ஏற்படுத்தவே பாடுபட்டேன். அத்தோடு பயங்கரவாதம் என்பது தமிழ், சிங்கள,
முஸ்லிம் என்ற எந்த இனத்திலிருந்து உருவானாலும் அதனை எதிர்ப்பவன் நான்.
அதேவேளை முஸ்லிம்கள் பிரிவினையை எதிர்த்தவர்கள். இதற்காகவே
யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டனர்.
அதுபோன்று ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டு வந்த
போது அதனை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் பேரணியை நடத்தினார்கள். இதன்போது
இலங்கைக்கு அரபு நாடுகள் ஆதரவு வழங்கின. எனவே என்னை அல்ல.. பொது பல
சேனாவினரையே கைது செய்ய வேண்டும். இனங்களுக்கிடையே நல்லுறவுகளை சிதைக்கும்
குரோதத்தை விதைக்கும் பொதுபலசேனாவினரையே கைது செய்ய வேண்டும்.
ஆனால் அவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் தடுக்காதுள்ளது. எனவே
அரசாங்கத்திற்கும் இதனோடு தொடர்புண்டா என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.
No comments:
Post a Comment